twitter
  Find out what I'm doing, Follow Me :)

காவல் துறையில் என்னை கவர்ந்தவர்கள் - 1

               நண்பர்களுக்கு வணக்கம், வேலை பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை மிக நீண்ட காலம் கழித்து எழுதுகிறேன். நண்பர் வால்பையன் அவர்கள் எனக்கு ஒரு பின்னுட்டம் இட்டிருந்தார்.

           அவருக்கு......  நீங்கள் அதிகம் எழுதுகிறீர்கள் மகிழ்ச்சியே ஆனால் என்னைப்போல் எப்போதாவது எழுதுபவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை. இது போன்ற பின்னுட்டமிடுவதை நிறுத்தி கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.


              இப்பதிவு என்னை கவர்ந்த காவல் துறையில் நேர்மையாக பணிபுரிபவர்களை பற்றியது.

                  இச் சம்பவங்கள் நடந்து இரண்டு ஆண்டுகள் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மாறுதலின் பேரி்ல் நான் பணிபுரியும் மாவட்டத்திற்கு  பணி மாறுதலில் வந்தார். அவர் வரும் போதே அவரை பற்றிய செய்திகள் எங்களை அதிகம் ஆர்வம் கொள்ளச் செய்தது. மிகவும் நேர்மையானவர், யாருக்கும் ( எந்த அரசியல் வாதிக்கும் ) பயப்படாதவர், பணியில் மிகுந்த கண்டிப்பு மிகுந்தவர் போன்றவை. என்னிடம் சொன்ன ஏட்டையாவிடம் நான் சொன்ன வார்த்தைகள் " புது செருப்பு கடிக்க தான் செய்யும் போக போக பாருங்க தெரியும் "

                 ஆனால் அவர் அவ்வாறு அல்ல என்பதை அவர் பணிக்கு வந்த ஒரெ வாரத்தில் தெரிந்து கொண்டேன். நான் ஒரு நாள் இரவு பணியில் இருந்த போது டி.எஸ்.பி டிரைவர் என்னை அழைத்து டி.எஸ்.பி. அழைப்பதாக சொல்ல நான் அவரிடம் போன போது அவருடைய வாகனத்தில் ஏற சொன்னார். நானும் ஒன்றும் சொல்லாமல் ஏறிவிட்டேன். வாகனம் எங்கு செல்கிறது என்ற சொல்லவில்லை. ஆனால் ஒரு சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு போகிறோம் என்று மட்டும் சொன்னார். சரி எங்கயாவது ஒரு முள்ளுக்காட்டுக்குள்ள ஓடவிட போறாங்க என்று நினைத்து கொண்டே யோசனையில் இருந்த போது வாகனம் நகரில் நம்பர் 1 பைவ் ஸ்டார் ஓட்டலுக்குள் நுழைந்தது. சாதாரண ஓட்டலில்லை அது முன்று முதல்வர்கள்,  குடியரசு தலைவர். மற்றும் மிக முக்கிய வி.ஐ.பி.கள் தங்கும் ஒரெ பைவ் ஸ்டார் ஓட்டல் அது அப்போதும் நான் யோசிக்கவில்லை சரி யாரையோ பாத்துட்டு அப்புறம் போவாங்க போலிருக்குன்னு நினைச்சுட்டு பின்னாலேயே போனேன்.

                  முன்னால ரிஷப்பஷன் போயி ரும் நம்பர் சொல்லி யாரு தங்கிருக்காங்ன்னு கேட்க எடுத்த எடுப்பிலேயே ரிசப்பஷனில் இருந்தவர் "இது யாரு ஹோட்டல் தெரியுமா என்று குதிக்க ஆரம்பி்த்து விட்டார். விட்டார் பாருங்க ஒரு அறை " போன் எல்லாம் எடு்த்து வையுடா என்று சொல்ல எடுத்து வைத்து விட்டார். நேரே அந்த அறைக்கு சொல்ல நகரின் முக்கிய பணக்காரர்கள் எல்லாம் சீட்டாடி கொண்டிருந்தனர்.  இருந்த அத்தைனை பேர் முகத்திலும் கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ எதுவும் இல்லை வாங்க டி.எஸ்.பி சார் உங்காருங்க ஒரு கை போடலாம்ன்னு அசால்டா கேட்க ஆரம்பிச்சுட்டாங்க கேட்டவனுக்கு விட்டார் பாருங்க ஒரு அறை சர்வ நாடியும் ஒடுங்கி போய் உட்கார்ந்து விட்டார். எல்லாரும் ஒழுங்க ஒத்துழைச்சா டீசண்டா வெளிய போகலாம். இல்லைன்னா வேட்டிய உருவிட்டு கூட்டிட்டு போக வேண்டியது இருக்கும்னு சொல்ல அப்போதான் அவங்களுக்கு உறைச்சது. ஓ இவன் வேற மாதிரி ஆளுன்னு.

                   அப்புறம் அவங்க வைச்சுருந்த பணத்தை எல்லாம் எடுத்து ( சுமார் பத்து லட்சம் இருக்கும் ) நெம்பர் எழுதி கையெழுத்து போடச் சொல்லி அவங்க அத்தனை பேர் மொபைலையும் சுவிட்ச் ஆப்  பண்ணி அத்தனை பேரையும் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வந்தார். எஙகளையும் முன்னமே போனை சுவிட்ச் ஆப் பண்ண சொல்லிருந்தார்.

                    அதன் பின் யாரோ யாரோ டி.எஸ்.பி யை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்க ஒரு கட்டத்தில் தனது செல்போனை ஆப் செய்து விட்டார். பின்னர் அவரை விட நான்கு படிகள் மேலுள்ள ஒரு அதிகாரி காவல் நிலையத்திற்கு போனில் அழைத்து அவர்களை விட்டுவிடுமாறு சொல்ல இருவருக்கும் கடும் வாக்குவாதம் இறுதியில் அவர் சொன்னது. " என்னோட பேக் ரெடியா இருக்கு சார் எங்க டிரான்ஸ்பர் போட்டாலும் போவேன்  "


                      மற்றும் ஒரு சம்பவம் பஸ் ஸ்டாண்டில் போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்த ஒரு வக்கிலை ஒரு பெண் எஸ்.ஐ. அடித்து விட அது பெரும் பிரச்சினை ஆகி உள்ளுர் பார் கவுண்சில் முலம் அது காவல் துறைக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. அந்த பெண் எஸ்.ஐ. மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் செய்யாத போராட்டமே இல்லை என்னும் அளவிற்கு.  எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. காவல் துறையினரை நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டம் செய்ய அவர் நீதிபதிகளிடம் பேசி சிறையினுள்ளே நீதிபதிகளை வைத்து கைதிகளை சிறைக்குள் அனுமதிக்க வைத்தார். இரண்டு மாதங்களாக போராட்டம் நடந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை.தீபாவளி நெருங்க காசுக்கு சிங்கியடித்த வழக்கறிஞர்கள் வேறு வழியின்றி போராட்டத்தை கைவிட்டனர். அன்று அந்த நிலையில் வேறு ஒரு அதிகாரி இருந்திருந்தால் அந்த எஸ்.ஐ.யின் நிலைமை.


                     அதே போலதான் குற்றவாளிகளிடமும் மிக  ( மிக - புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். )  கடுமையாக நடந்து கொள்வார். ஒரு சின்ன சாம்பிள் ஒரு கைதி சொன்னது. சிறைக்குள் பேசிக் கொள்வார்களாம் " டேய் மாப்பிள அந்த ஊருக்கு மட்டும் போயிராத அந்த டி.எஸ்பி. இருக்காரு எதிர் காலத்துல உனக்கு கால் இருக்கும் ஆனா வேலை செய்யாது. கஸ்டடி ( நீதிமன்றத்தில் இருந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது. கைதிக்கு சிறு காயம் என்றாலும் நமக்கு வேலை போய்விடும் )  எடுத்து கால உடைச்சவான்டா பாத்துக்கோ.


                 பணியிலும் நேர்மையாக இருப்பார். யாராக இருந்தாலும் மரியாதையான பேச்சு. தற்போது வேறு மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்று பணிபுரிகிறார். இங்கிருந்து முன்று மாதத்திலேயே தென் மாவட்டத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். காரணம் அன்னைக்கு ஒருத்தனுக்கு விட்டாரே ஒரு அறை அவருடைய கைங்கரியம்

இன்னும் வரும்.......


....
நட்புடன்


மனித உருவில் ஒரு காமகொடுரன்
                 நண்பர்களுக்கு வணக்கம், வேலைப்பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை தமிழிஷ் முலம் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கிறேன்.


                புவனேஸ்வரி கைது, நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் கற்பு பற்றிய விவாதங்களை தவிர்த்து  கடந்த மாதங்களில் நீங்கள் செய்தி தாள்களில் ஒரு செய்தியை படித்திருக்கலாம். பெண் போலீஸ் ஜெயமணி  கற்பழித்து கொலை. கொலையாளிக்கு காவல் துறை வலை வீச்சு ( இந்த வார்த்தைய எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல ) 

                ஜெயமணி திருப்பூர் மாவட்டம். காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர். கடந்த மாதம் நடந்த அரசு விழாவிற்கு சென்றவர். கடத்தி கற்பழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார். வி.ஐ.பி. வருகையின் போது சாலை பகுதியில் பாதுகாப்பிற்கு நின்று சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்தவர் பணி முடித்து வீடு திரும்ப பேருந்துகளை கை காட்டி நிறுத்தியிருக்கிறார். ஆனால் எந்த பேருந்தும் நிறுத்தாமல் சென்று விட சாலையில்  வந்த ஒருவனிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவனும் ஏற்றிக் கொண்டு செல்ல ஆளில்லா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து கீறியுள்ளான். தப்பித்து ஓட முற்பட பெரிய கல்லை எடுத்து பின்னந்தலையில் அடித்திருக்கிறான்.

               நினைவிழந்த நிலையில் கிடந்த அவரை இரு முறை கற்பழித்து உள்ளான். நினைவு திரும்பிய அந்த பெண் போலீஸ் அவனை கெஞ்சியிருக்கிறாள். தன் குழந்தைகளை பார்க்காவாவது தன்னை உயிருடன் விட்டுவிடும்படி.

                   அந்த காம கொடுரன் உன்னை விட்டால் நீ என்னை காட்டி கொடுத்து விடுவாய் என்று சொல்லியே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். பின் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் அணிந்திருந்த  நகைகள் ஆகியவற்றை எடுத்து தப்பி விட்டான்.

                    பெண் போலீஸ்சின் கணவர் அவர் பணி முடித்து வராததால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்க அவர் பணி முடித்து போய்விட்டதாக காவல் நிலைத்தில் சொல்லப்பட்டது. அவரும் உறவினர் வீடுகளில் தேடிவிட்டு அடுத்த தனது மனைவி காணமல் போய்விட்டாக புகார் கொடுக்க புலண் விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டது. 

                    சம்பவம் நடந்த 18 நாட்கள் கழித்து அவரது உடல் அவர் பணி செய்த இடத்தில் இருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் சுடுகாட்டில் கண்டு எடுக்கப்பட்டது.  

                      கொலையாளியால் எடுக்கப்பட்ட செல்போனை கொண்டு கொலையாளியின் இருப்பிடம் கண்டுபிடித்து அவனை கைது செய்தது காவல் துறை. 

                      மேற்படி இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் அவனால் கொல்லப்பட்டவர்கள். ஐந்து பேர் அனைவரும் பெண்கள் இது வரை மொத்தம் 18 பேர் அதில் ஒருவர் மட்டுமே ஆண். 

                            இதில காமெடி என்னானா அவனை வந்து முகமுடி போட்டு கூட்டுட்டு போனாங்க.. ஏதோ முகத்த காமிச்சு கூட்டிட்டு போனாக்கூட நாலு பொண்ணுங்க பாத்து ஊஷாராவாங்க... 

                            அவனுடைய குறி தேசிய நெடுஞ்சாலையில சுமார் ஒரு கி.மீட்டருக்குள்ள ஆடு மேய்க்கும் தனியாக உள்ள பெண்கள் முதலில் கத்தியால் கழுத்தில் கீறுவது அப்புறம் அரை மயக்கத்தில் இருக்கும் அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பிவிடுவது. 59 வயசு கிழவிய கூட விட்டு வைக்கல.. 

                                 இனி என்னவாகும் வழக்கு நடக்கும். கலைஞர் அய்யா புண்ணியத்துல ஜெயில கறி எல்லாம் போடுறாங்களாம். நல்லா சாப்பிட்டு இருந்துட்டு. மேற்படி வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியே வந்து விடுவான். சொறிபுடுச்சன் கையி சும்மாருக்காதுகற கதையா மறுபடியும் ஆரம்பிச்சுடுவான். அப்படி அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும், மனித இனத்தை காக்க வந்த மனித உரிமை கழகங்கள் ( எத்தனை இருக்குனே தெரியல ) அவனை தூக்கில் போடக்கூடாது என்று ஆயிரம் போராட்டங்கள் நடத்துவாங்க. 
 
 
              சரி நீங்க சொல்லுங்க அவனுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம். ?


நட்புடன்
 

விநாயக சதூர்த்தி மக்கள்(?) விழா

 
            வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எனது பதிவுகளை படித்து பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தங்கள் பதிவுகளை படித்து வந்தாலும் பின்னுட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்


             நண்பர் தமிழன்  அவர்களுக்கு எனது நன்றிகள் அவர் எனக்கு முதன் முதலாக ஒரு விருதினை அளித்திருக்கிறார். நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்றாலும் அவரது அன்பிற்காக ஏற்று கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


             இப்பதிவை படிப்பவர்களுக்கு  ஒன்றை கூற விரும்புகிறேன். நான் முழு கடவுள் பக்தி கொண்டவன். இப்பதிவு உண்மையிலேயே கடவுள் மீது பக்தி கொண்டவர்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல


             விநாயக சதூர்த்தி விழா தமிழ்நாட்டுக்கு வந்து ( இந்து இயக்கங்களால் கொண்டாடப்படும் ) இந்த ஆண்டோடு 19 ஆண்டுகளாகிவிட்டன. மக்களால் பக்தியோடு கொண்டாடப்படும் இவ்விழா தற்போது இந்து இயக்கங்களால் முஸ்லிம் இனத்தவருக்கு எதிராக கொண்டாடப்படும் ஒரு விழாவாக்கப்பட்டுவிட்டது.


            வருடா  வருடம்  காவல் துறையினரால் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு பாதுகாப்பளிக்கபடும் ஒரு விழா இந்த விநாயக சதூர்த்தி விழா. விழா வின் ஒரு பகுதியான விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதையில் ஒரு  பள்ளிவாசல் கூட இல்லையெனில் ஊர்வல பாதையை மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பர். சரியாக பள்ளி வாசல் அருகில் வந்தவுடன் அதிர வைக்கும் கோஷங்கள், மேள தாளங்கள் என அரை மணி நேரமாவது அந்த இடத்தில் விநாயகரை வைத்து கொண்டாடவில்லை என்றால் இந்து இயக்கங்களுக்கு தூக்கம் வராது.


              சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் இத்தனை வருடங்கள் நடந்த விநாயகர் சதூத்தி ஊர்வலத்தில் காவல் துறை தடை விதித்திருப்பதால் ஒரு முறை கூட ஐஸ் அவுஸ் பகுதியை தாண்டியதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு மட்டுமே உண்மையான உணர்வுள்ளவர்கள் ஊர்வலம் நடத்த எவ்விதமாவது முயற்சி செய்து தடையை நீக்க முயற்சி செய்திருப்பார்கள். வழக்கம் போல இந்து முண்ணனி தலைவர் இராம. கோபாலன் தடையை மீற முயற்ச்சிக்க வழக்கம்: போல கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுவார். இன்று வரை அது தான் நடந்து வருகிறது. கைது செய்தால் ஐந்து வருடம் சிறை தண்டணை என்றால் ஒருவர் கூட தடையை மீறி ஊர்வலம் செல்ல மாட்டார்கள்.


                           இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதெல்லாம் பழங்கதை தற்போது விநாயகர் சிலை 5 அடி முதல் 18 அடி  வரை வைக்கப்படுகிறது. முதலில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு வந்ததால் அவ் விநாயர்கள் சிலையை கொண்டு போய் ஆற்றிலோ அல்லது கடலிலே போட்டால் மட்டும் போதும் அது தானாக கரைந்து விடும் தற்போது நடப்பது என்ன அனைத்து விநாயகர் சிலைகளும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ஸில் செய்யபடுகிறது அதை உடைக்க அந்த இயக்கத் தொண்டர்கள் செய்யும் காரியம் விநாயகர் நேரில் கண்டால் கண்ணீர் வி்ட்டிருப்பார்.                            திருப்பூரில் இவ்வருடம் பரபரப்பிற்காக ஈழ விநாயகர் சிலை வைப்பதாக இந்து இயக்கங்களால் செய்தி பரப்பட்டுவிட  காவல் துறைக்கு இன்னும் தூக்கம் தொலைந்து போனது. ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக இச் சிலைகள் வைக்கப்படுவதாக இந்து இயக்கங்கள் கூறினாலும், இது வரை இந்து இயக்கங்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ஆளியாற்றிலும், அவினாசி அருகேவும் ஈழ தமிழர் நிவாரண முகாம்கள் உள்ளன. இது வரை அங்குள்ள மக்களுக்கு ஒரு வேளை உணவளித்திருப்பார்களா ?                            முழுக்க  முழுக்க இந்து இயக்கங்களால் பப்ளிசிட்டி காக கொண்டாடபடும் விழாவாக விநாயக சதூர்த்தி மாறி விட்டது. நான் பார்த்த சில சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் பின்னால் உட்கார்ந்து மது அருந்தும் கொடுமையும் நடந்தது.

                             கடந்த முன்று நாட்களாக மொத்தம் 363 சிலைகள் இந்து இயக்கங்ககள்ளால் வைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த போலிஸார் 32 பேர் மட்டுமே ( மற்ற பணிகள் போக ) இவர்கள் அனைவரும் கடந்த முன்று நாட்களாக தூங்கவும் இல்லை. நான் இப்பதிவை எழதும் இந்நாளில் (25.08.09) மதியம் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.                              ஊர்வலத்தில் 13 வயது பையன் முதல் அனைவரும் புல் போதை விநாயகருக்கு பூஜை செய்தவர் வரை கடந்த வருடங்கள் சென்ற ஊர்வலபாதையிலேயே இவ்வருடமும் நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட பள்ளி வாசல் அருகில் வரும் போது அங்கிருந்த முஸ்லீ்ம்கள் தங்கள் பள்ளிவாசல் அருகே ஊர்வலம் வருவதை தடுக்க இந்து இயக்ககளை சேர்ந்தவர்கள் அங்கேயே சாலை மறியல் செய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எவ்வளவு கேட்டு கொண்டும் இருதரப்பினரும் ஒத்து போகவில்லை.


                            இந்நிலையில் பள்ளிவாசலில் இருந்து ஒரு கல் காவல் துறையினரது மீது வீசப்பட காவல் துறையை சேர்ந்த பலருக்கும் காயம். உடனடியாக  லத்தி சார்ஜ் செய்ய கூட்டம் கலைந்து ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் நகரத்தின் பல பகுதிகளில் கல் வீச்சு, வாகன உடைப்பு என தற்போது பதட்டமாகவே உள்ளது.

                              இந்நிலைக்கு யார் காரணம் இரு தரப்பினருக்கும் இடையே கலகம் ஏற்படுத்தி அதில் குளிர் காயும் மதத் தலைவர்கள் மட்டுமெ காரணம். ஒன்றை நினைத்து பாருங்கள் பள்ளி வாசலில் எதற்கு கற்கள் ? ஆக முஸ்லீம்களும் ஒரு வித எதிர்ப்பு மனப்பான்மையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். வருடம் ஒரு நாள் இந்துக்களால் நடத்தப்படும் விழா சரி ஊர்வலம் போகட்டும் என்ற மனப்பான்மை அவர்களுக்கு இருந்திருந்தால் இப்பிரச்சினையே வந்திருக்காது.                                உங்கள் அனைவருக்குமே முஸ்லீம் இன நண்பர்கள் உண்டு இது வரை அவர்களை யாராவது எதிரியாக நினைத்து பார்த்திருக்கிறீர்களா. பார்க்கவும் மாட்டீர்கள் பார்க்கவும் முடியாது. இதே போலவே முஸ்லீம் நண்பர்களும்.....

                                விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவமும் இருந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் அவ்வாறு இல்லையெனில் இப்பிரச்சினை ஒரு நீ்ங்காத ஒரு பிரச்சினையாக மட்டுமே இருக்கும்.


                      தினமலரில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. சுட்டி இது போன்ற நிகழ்வுகளால் மட்டுமே இரு மதத்தினருக்கும் ஒன்றுமை ஏற்படுமே தவிர மதத்தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு செயல்பட்டால்..... ரஜினி சொன்ன மாதிரி "தமிழ் நாட்ட அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது. "நன்றி மீண்டு்ம் ஒரு பதிவில் சந்திக்கிறேன்..........

                       

ஆர்பரிக்கும் ஜாதியமும், அடிவாங்கும் அரசு பேருந்துகளும்

                       மறுபடியும் ஒரு பேருந்து அனுபவம். கடந்த ஆண்டு எனது திருமணம் முடித்து முதல் வருட திருவிழாவிற்காக எனது மனைவியின் ஊருக்கு இதே ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி சென்ற போது நடந்தவைதான் இப்பதிவில் ......................

                     மாத இறுதி என்பதால் இரண்டு நாட்களாக வேலை பளுவின் காரணமாக தூங்காமல் வேலை முடித்து லீவு வாங்கி பஸ் ஏறதுக்குள்ள கண்ணுள்ள தண்ணி வந்துடுச்சு. சரி பஸ் ஏறலாம்ன்னு பஸ் ஸ்டாணட் போன திருவிழா கூட்டம். சரி படிக்கட்டுலயாவது  இடம் கிடச்சுதேன்னு டிக்கெட் எடுத்துட்டு படிக்கட்டுலயே  உக்காந்து மதுரை வந்து சேர்ந்தேன். தூக்கமும் இல்ல ( படிகெட்டுல உட்கார்ந்து தூங்குனா சொந்த செலவுல நமக்கு டிகெட் கெடச்சுரும். )

                       அது என்னவோ தெரியல கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும்  ( சுமார் 55 கி.மி. ) 15 ருபாய் டிக்கெட்  ஆனா 6கி.மி. ல இருக்கற மாட்டுதாவணிக்கும் ஆரப்பாளையத்துக்கும் 10 ருபாய் டிக்கெட் கேட்டா நைட் சர்வீஸ்ஸாம். அது என்னடா கவுர்மண்டு பஸ் நைட் மட்டும் மைலேஜ் கம்மியா கொடுக்குதோ நினைச்சுக்கிட்டு மாட்டு தாவணி வந்த சேர்ந்தேன்.

                       மாட்டுதாவணி பேருந்து நிலையம், ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பேருந்து நிலையம் ( முதல்ல எதுன்னு தெரியல ). எப்பவும் மதுரை வந்தா மல்லிகைப்பூ, ஸ்வீட் எல்லாம் வீட்டுக்கு வாங்கிட்டு போவேன். அப்படியே புதுபட சிடியும்...........

                     தமிழ்நாட்டுல வேற எங்கயும் பாக்க முடியாது. நேத்து ரிலீசான படம் இன்னைக்கு கடையில முன்னாடி டிஸ்பிளே ல இருக்கும். ஒரு நாள் விளையாட்டா கேட்டேன். " இங்க ரெய்டடெல்லாம் கிடையாதான்னு ' கடைக்காரர் சிரிச்சுக்கிட்டே " அண்ணாச்சி கடையில படத்த பாருங்க " பாத்தேன். மதுரை துணை மேயரும், தற்போதைய எம்.பி. யும் சிரிச்சுக்கிட்டு கடை ஓனர் கூட நின்னுகிட்டு இருக்கற மாதிரி பெரிய போட்டோ. நடவடிக்கை எடுத்துட்டு நம்ம போலீஸ் அங்க வேலை பாத்திர முடியுமா ? சத்தமில்லாமல் கிளம்பி கடைசி பிளாட்பாரத்துக்கு ( அப்புறம் தென் மாவட்டம் எப்பவும் கடைசிதானே )  வந்து பார்த்தால் அங்கயும் கூட்டம்.

                        ஒரே ஒரு ஏஸி பேருந்து அதுவும் நான் வழக்கமாய் வரும் பேருந்து உள்ள வரும்போதே என்னை கண்ட கண்டக்டர் கையசைத்தார் அப்பாடா ஒரு வழியாய் சீட் உறுதி என்று நினைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினேன். நல்ல வேளை ஒரே ஒரு சீட் இருந்தது. டிகெட் எடுத்துவிட்டு படுத்து தூங்கினவன்தான். காலை ஒரு 0530 மணியிருக்கும் முழிப்பு வந்து மணியை பார்த்தேன். ஒரு சிமெண்ட் லாரியின் பின்புறம் பஸ் போய் கொண்டிருந்தது.

                        நல்லா விடிஞ்சு பேருந்தினுள் வெளிச்சம் இருக்க எந்திரிச்சு பாத்தா மணி 0830 முன்னாடி பாத்தா அதே  சிமெண்ட் லாரி..............இன்னுமாடா சிமெண்ட் லாரி பின்னாடி பஸ் போயிட்டு இருக்குன்னு பாத்தா பஸ் நின்று கொண்டிருந்தது. சரி ஏதோ பிரச்சினை என்று இறங்கி வந்து கண்டக்டரை கேட்டால் அவர் " அவர் வாங்க சார் இப்பதான் முழிச்சீங்களா பஸ் காலை ல 0500 மணியிலருந்து இங்கதான் நிக்கிது வாங்க நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க"  என்றார்.

                      பேருந்து நின்ற இடம் மதுரையை அடுத்த எலியார்பத்தி என்ற கிராமம் அங்கிருந்த ஒரு சாதியை சேர்ந்த(?) மன்னரின் பிளக்ஸ் போர்டுக்கு (?) யாரோ விஷமிகள் செருப்பு மாலை அணிவித்து விட அதனால் அங்கு மட்டுமல்ல திருச்சி வரை சாலை மறியல் என்ற தெரிந்து கொண்டேன்.

                       சிகரெட் ஒன்றை பற்றவைத்துக் கொண்டு ( இந்த கருமத்த மட்டும் விட முடியல யாராவது ஐடியா சொல்லுங்க ) நடப்பதை வேடிககை பார்க்க தொடங்கினேன். ஐந்து வயது பொடியன் முதல் நாளன்னிக்கு சாயந்தரம் 0645 மணிக்கு முச்சுவிட மறக்கற பெரிசு வரை கையில் தடியென்ன ! கற்களென்ன ! ஒரு டி.வி.எஸ் ல அஞ்சு போரத அன்னக்குதான் பார்த்தேன்.

                      சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஒருத்தன் " மாப்ள கலெக்டர வரச் சொல்லு"  இன்னொருத்தன் " கலெக்டர் என்னடா வெண்ணை சி.எம். வரச்சொல்லி சொல்லுடா " இன்னொருத்தன் இங்கயே இந்த பிளக்ஸ் போர்டுக்கு பதிலா வெங்கல சிலை (?) வைக்கற வரைக்கும் பஸ் ஓடாது பாத்துபுடுறோம் நாமாளா அவனான்னு "  இங்க நின்னு சிரிச்சா நமக்கு டின்னு கட்டிடுவாங்கன்னு தள்ளி வந்து நின்னுகிட்டேன்.

                     இதுல கண்டக்டர் புலம்பல் வேற ஏன்னா லாரிகாரர் வண்டியை நிழல்ல நிறுத்துறன்னு கொண்டு போய் ஒதுக்குபுறமா நிறுத்திட்டார். நம்ம பஸ்தான் முன்னாடி நிக்கிறது. கல்லெடுத்து எறிஞ்சான்னா முதல்ல நம்ம பஸ்சுக்குத்தான் திறப்பு விழா.

                      அப்போது ஒரு பெண் பிறந்து ஏழு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் எங்கள் பேருந்து  அருகில் வந்து கண்டக்டரிடம் வெயிலின் தாக்கத்தால் குழந்தை அழுவதாகவும் ஒரு சீட் கிடைதாலும் போதும் என்று கேட்க கண்டக்டர் பேருந்தினுள் சென்று அமர்ந்திருந்தவர்களை பார்த்து கேட்க யாரும் சீட் கொடுக்க முன்வர வில்லை. ( வண்டியில் ஏஸி ஓடிக் கொண்டிருந்தது. ) பின் வெளியே தம் அடித்து கொண்டிருந்த என்னிடம் கேட்க நான் சரி உட்கார சொல்லுங்கள் நான் டிரைவர் கேபினில் உட்கார்ந்து கொள்கிறேன். என்று சொல்லிவிட்டேன்.

                    பெண்கள் பொறுமையிழந்தவர்களாக சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்திடம் சென்று " குந்தைகள் பாலுக்காகவும், உணவுக்காகவும் அழுகிறது உங்கள் போராட்டத்தை நிறுத்த கூடாதா எனக் கேட்க அங்கு இருந்தவர்கள் " உங்கள் குழந்தை பாலுக்கு செத்தா எங்களுக்கு என்ன ? எங்களுக்கு ஒரு தீர்வு வர்ற வரைக்கும் இந்த பிரச்சினையை விடமாட்டோம் என்று சொல்ல இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ் ஏற்படவே உடனே காவல் துறையினர் அங்கிருந்து பேருந்து பயணிகளை அப்புறப்படுத்தினர்.

                       அப்புறம் திட்டு எங்களுக்குதான். பாருய்யா உட்கார்ந்து போராட்டம் பண்றவங்கள தடுக்க வக்கில்ல ? எங்களை தடுக்க வந்துட்டாங்க ?  இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு காக்கி உடுப்பு அவுத்து போட்டு சேலையை கட்ட வேண்டியதுதானே ? இன்னும் நான் சொல்ல முடியாத வார்த்தைகள்.

                       பிறகு அற்கிருந்த காவலரிடம் என்ன சார் ஒரு லத்தி சார்ஜ் பண்ணி கலைக்கறத விட்டுட்டு இன்னும் பாத்துட்டு இருக்கிறீங்களேன்னு கேட்க அவரோ " சார் இங்க ஒரு இடத்தில மட்டுமில்ல திருச்சி வரைக்கும் சுமார் இருபது இடத்தில சாலை மறியல் பண்றாங்க எங்கயும் ஸ்ட்ரென்த் இல்ல இப்பதான் ஒவ்வொரு இடத்துக்கா போட்டுட்டு இருக்காங்க. எல்லா இடத்துலயும் போட்டு முடிச்ச பின்னாடி ஒரெ டைம்ல லத்தி சார்ஜ் பண்ணாதான் சேதம் அதிகமில்லாம இருக்கும் இங்க மடடும் பண்ணா அடுத்த நிமிஷம் தகவல் பரவி இருபது இடத்துலயும் பேருந்துகளை தாக்க ஆரம்பிச்சுருவாங்க அதனாலதான் வெயிட் பண்ணீட்டு இருக்கோம் என்றார்.

                  அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது மணி 0200 இன்னும் 20 நிமிஷத்துல டி.எஸ்.பி. வந்துவிடுவார் என்றும் லத்தி சார்ஜ் கொடுத்து விடுவார் என்றும் அவர் சொல்லவே நான் கண்டக்டரிடம்  சென்று பஸ்ஐ ரெடியா வச்சுருங்க என்று சொல்ல டிரைவர் அவர் சீட்டில் உட்கார்ந்து தயாராகிவிட்டார். மற்ற பேருந்துகள் எல்லாம் நிழலுக்காக மரத்தினடியில் நிறுத்தியிருந்தனர்.

                    அங்கிருந்து ஒரு போலீஸ் வேன் வர இங்கிருந்த காவலர்கள் தயாராகினர். டி.எஸ்.பி. வந்து இறங்கினார். இறங்கி ஒரே ஒரு கல் எடுத்து கூட்டத்தினுள் விட அடுத்த நிமிடம் போலீசார் மீது கல் வந்து விழ லத்தி சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். முதலில் எங்கள் பேருந்து நின்றதால் போலீசார் எங்கள் பேருந்து வழி ஏற்படுத்தி கொடுக்க, எங்கிருந்தோ ஒரு செங்கல் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியில் மோதி உடைந்தது. கண்ணாடி உடையவில்லை. கண்ணாடியின் விலை 16000 ருபாய்களாம் எளிதில் உடையாது என்று கண்டக்டர் சொன்னார். அடுத்த கிராமங்களில் காவல் துறையினர் கலவர கும்பல விரட்டி அடித்திருந்தனர். எங்களுபின் வந்த வாகனங்கள் அனைத்தும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

                       உடைக்கபட்டிருந்த பேருந்துகள் அவ்வழியாக தினமும் எத்தனை முறை போயிருக்கும், எத்தனை முதியோர்கள் அப்பேருந்தில் வைத்தியத்திற்காகவும், தனது மகள் பேரப்பிள்ளை பார்க்க எத்தனை முறை பயணித்திருப்பார், பெண்கள் படிப்பிற்காகவும் வேலைக்காகவும் எத்தனை முறை பயணித்திருப்பார், மாணவ மாணவியர் கல்விக்காக எத்தனை முறை பயணித்திருப்பார், எத்தனை இளைஞர் இளைஞிகளின் காதல் அப்பேருந்தது பயணத்தில் ஏற்பட்டிருக்கும்.

                        ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால் போதும் உடனே பேருந்தை நிறுத்த வேண்டும். அல்லது உடைக்க வேண்டும். முதுகெலும்பில்லாதன் செய்கின்றவன் செயல் அது. தன் இயலாமையை மறைக்க குடிகாரன் தன் மனைவி குழந்தைகளை அடிப்பது போல்..... ஏன் தண்ணி போட்டால் அவ்வூரில் உள்ள ஒரு ரவுடியை அடிக்க சொல்லுங்கள். மறு நாளே திவசம்தான்.

                           நீ எதிர்பை காட்டுகிறாயா உன் வீட்டை கொளுத்து. உன் உடமைகளை கொளுத்து. பொது சொத்தை அழிக்க உனக்கு எவன் தைரியம் கொடுத்தது. வேற யார் அரசாங்கம் தான். இன்றை எதிர் கட்சி நாளைய ஆளும் கட்சி. வழக்காவது மண்ணாவது. ஏதோ ரெண்டு பஸ்ஸ எரிச்சா மந்திரியாகலாம்கிறதுதான் இன்றைய நிலையாக இருக்கும் போது நாம் என்ன சொல்ல முடியும் .............

மறுபடியும் சந்திக்கிறேன்.

பேருந்தில் தொலைதூர பயணமா ? உஷார்

                   எனக்கு நானே வச்ச ஆப்பை நானே எடுக்கறதுக்குள்ள கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ( முந்தின பதிவை படிச்சவங்களுக்கு தெரியும்) அந்த பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. மனசு சரியில்லாததால வலைப்பக்கமும் வர முடியல. வலைப்பூவை படித்து பின்னுட்மிட்டவர்களுக்கு எனது நன்றிகள்.

                    கடந்த ஒரு மாதத்தில் என்னுடைய மகளுக்கு மொட்டை மற்றும் மருமகளுக்கு மொட்டை என்று சுமார் 6 முறை எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்ததால் இப்பதிவு.

                    முதல் முறை சென்ற போது எனக்கு முன்னிருக்கையில் ஒரு கல்லூரி மாணவர் தனது லேப்டாப் மற்றும் தனது உடைகள் அடங்கிய பையுடன் வந்தார்.  வண்டி கோவையில் இருந்து இரவு 0900 மணிக்கு கிளம்பியது ஏஸி பஸ் என்பதால் சிறிது நேரத்திலேயே துக்கம் வந்து விட்டது. நன்றாக நான் தூங்கி விட்டேன். சுமார் 1200 மணியிருக்கும் வண்டியில் ஏஸி அதிகமாயிருக்க தூக்கம் வராமல் எழுந்து டிரைவர் கேபின் போய் தம் அடித்து விட்டு வரலாம் போய் டிரைவர் கேபினில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ( அடிக்கடி அப்பேருந்தில் சென்று வருவதால் கண்டக்டரும் டிரைவரும் நல்ல பழக்கம் ) வண்டி பரவையை தாண்டி சென்று கொண்டிருந்தது. பஸ் பாத்திமா காலேஜ் அருகில் வரும் போது ஒருவன் தான் இறங்க வேண்டும் என்று கூற பஸ்ஐ நிறுத்தினார் டிரைவர் அவனும் இறங்கி போய்விட்டான்.

               பின் டிரைவருடன் பேசி கொண்டிருந்த போது அவன் அருப்புக் கோட்டைக்கு டிக்கெட் எடுத்ததாகவும் ஆனால் மதுரையிலேயே இறங்கி விட்டான் என்று சொன்ன போதே எனக்கு சந்தேகம் டிரைவரிடம் கேட்ட போது இல்ல சார் அவன் கொண்டு வந்த பையத்தான் கொண்டு போறான் என்றார். பஸ் மாட்டு தாவணியை நெருங்க அந்த கல்லூரி மாணவர் படபடப் போடு கண்டக்டரிடம் வந்து "சார் யாராவது என் முன் சீட்ல இருந்தவர் எங்கே இறங்கினார் " என்று கேட்க கண்டக்டர் அவன் பாத்திமா காலேஜ் அருகி்ல் இறங்கியதை சொன்னார்.

                 " சார் என்னோட லேப்டாப்ப காணோம் " என்று அந்த கல்லூரி மாணவன் சொன்ன போது என்னுடைய சந்தேகம் உறுதியானது. இவனிடம் லேப்டாப் உள்ளதை கவனித்து அதே பேருந்தில் அவனுடன் பயணித்திருக்கிறான். கல்லூரி மாணவன் உறங்கிய நெரத்தில் அவன் பையில் உள்ள லேப்டாப்பை தனது பைக்கு மாற்றி எடுத்து சென்றிருக்கிறான். அந்த கல்லூரி மாணவன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு  படிப்பதாகவும் தன் பெற்றோர்கள் தன்னை சிரமபட்டு படிக்க வைப்பதாகவும் கண்ணணீருடன் கூற சரி முடிந்த வரை முயற்சி செய்வோம் என்று  நானும் அக் கல்லூரி மாணவனும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலேயே இறங்கி கொண்டோம்.

                          அக் கல்லூரி மாணவனை பேருந்து நிலையத்திலேயே இருக்க சொல்லி லேப்டாப்பை எடுத்து சென்றவன் . கோவையை சேர்ந்தவனாக இருந்தால் மறுபடியும் கோவை செல்ல இங்கே வரலாம் என்று சொல்லி அக் கல்லூரி மாணவனை அங்கே அமர வைத்து விட்டு மதுரையில் உள்ள என்னுடை நண்பணை வரவழைத்து அவனுடைய வாகனத்திலேயே ஆரப்பாளையத்திலிருந்து மீண்டும் பரவை வரை சென்றேன் ஆளை காணோம். அங்கேயே மீண்டும் ஒரு தம் அடித்து வீட்டு மீண்டும் திரும்பிவர பாத்திமா காலேஜ் அருகே லேப்டாப்பை  அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.
                            என்னை பார்த்தால் ஓடிவிடுவான். என்று என் நண்பனுக்கு விஷயம் தெரியும் என்பதால் நான் நடந்து வருகிறேன். நீ அவனிடம் சென்று அட்ரஸ் கேள் முடிந்தால் பிடி என்று சொல்ல நண்பன் அருகில் சென்று விசாரிப்பது போல் விசாரித்து அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் நகராதபடி பிடித்து கொண்டான் பின் நானும் பிடித்து கொண்டு நாலு போடு போடவே தான் லேப்டாப் திருடியதை  அவன் ஒப்பு கொண்டான்.

                              பின்னர் அவனை ஆரப்பாளையம் புறக்காவல் நிலையம் கொண்டு சென்று அவனை ஒப்படைத்தோம். அங்கிருந்த தலைமை காவலர்  அவன் மீது வழக்கு பதிவு செய்ய அக் கல்லூரி மாணவனை புகார் எழுதி தரச் சொன்ன போது இடை மறித்த நான் " ஏட்டையா நீங்க சொல்றது சரிதான் எப்படியும் இவனுக்கு தண்டணை கிடைக்கும் ஆனா இந்த பையனேட படிப்பை நினைச்சு பாருங்க கேஸ் எப்படியு்ம் முணு வருசத்துக்கு நடக்கும் எத்தனை வாய்தா ? எத்தனை சாட்சிகள்  இந்த பையனுக்கு இரண்டு சம்மன் அல்லது முணு சம்மன் அனுப்புவாங்க அந்த டைம்ல அவனுக்கு செமஸ்டர் இருக்கலாம் கோர்ட்டில் ஆஜராக முடியாம போகலாம் ஆஜராகலன்னா வாரண்ட்தான். இது அவனுக்கு பைனல் இயர் வேலை கிடைச்சு வெளிநாடு போக கூட தடையாகலாம் அதனால இவனுக்கு வேற ஸ்டேசன்ல ஏதாவது கேஸ் இருந்தா அத கேட்டு போடுங்க என்று சொல்லி அவனுடைய லேப்டாப்பை வாங்கி கொடுத்து விட்டு என்னுடைய மொபைல் எண்ணையும் அந்த ஏட்டையாவிடம் கொடுத்து விட்டு வந்தேன்.இப்போது அந்த கல்லூரி மாணவன் எனக்கு ஒரு நண்பன்.


                  கவனத்தில் கொள்ளுங்கள் 
 1. பெரும்பாலும் ஏஸி வகை பேருந்துகளியே இவ்வகையாக திருட்டுக்கள் நடக்கிறது. ( நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்கள் பயணிப்பதால், விலையுயர்ந்த பொருட்கள் கிடைப்பதால் )
 2. ஏஸி ஓடுவதால் பேருந்தின் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நமக்கும் பேருந்து ஓடும் உணர்வே இருப்பதால் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நமக்கு விழிப்பு வருவதில்லை ( திருடனுக்கு வசதி ) 
 3. இரயிலில் பயணம் செய்யும் போது பயன் படுத்து  பெட்டிகளுக்கான சங்கிலி பூட்டை பயன்படுத்துங்கள்.
 4. பேருந்தில் ஓடும் திரைப்படத்தில் உள்ள கண் உங்கள் பொருட்களிலும் இருக்கட்டும்

அடுத்து ஒரு பேருந்து அனுபவத்தில் சந்திக்கிறேன்.

வேலில போற ஓணாண

வேற என்ன வழக்கம் போல பணிச்சுமைதான். எழுத முடியவில்லை. வலைப்பூவிற்கு வந்து வாசித்து, பின்னுட்மிட்டு ஊக்கபடுத்திய அனைத்த வலைப்பதிவர்களுக்கும் நன்றி...

முதலில் நான் காவல் துறையில் கணிணி பிரிவில் பணிபுரிபவன். வலையுலக நண்பர்கள் நினைப்பது போல் நான் காவல் துறையில் அதிகாரியாய் பணிபுரிபவன் அல்ல. இதுவரை நான் அதிகாரி என்று எந்த பதிவிலும் சொல்லியதும் இல்லை.

நடக்காத ஒன்று நடந்தால் அதை கலியுகம் என்று சொல்வார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நிலையத்தில் நான் உட்பட முவர் மட்டுமே பணியில், ஒருவர் வாகன விபத்து தொடர்பாக அரசு மருத்துவமனை சென்றுவிட ஒருவர் ஒயர்லஸ் தொடர்புகளை கண்காணித்து கொண்டிருந்தார்.

அதிகாலை 0300 மணி இருக்கும் சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று கணிணியை சட்டவுன் செய்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் நான்கு பேர் வந்தனர். வந்தவர்கள் ஆய்வாளரை கேட்க அவர் விடுமுறையில் இருக்கிறார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் தாங்கள் சென்னையில் இருந்து வருவதாகவும், தனது அண்ணன் மகளை தனது தம்பி திருமணம் செய்ய ( அப்பா மகள் உறவு ??) கூட்டி வந்து விட்டதாகவும் வீட்டில் இருந்து வரும் பொழுது சுமார் 5 லட்சம் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும் தாங்கள் அவனது மொபைலின் டவரை கண்காணித்த போது எங்கள் காவல் நிலைய எல்லை உள்ள பகுதியின் டவர் காண்ப்பித்ததாகவும் இது தொடர்பாக நாங்கள் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துதாகவும் கூறினார்.

அவர் சொன்ன பகுதி நான் வசித்து வரும் பகுதியாகையால் சரி நானே உதவுகிறேன். என்று அவர்களை கூட்டிக் கொண்டு நான் வசித்து வரும் பகுதியில் உள்ள லாட்ஜில் சென்று விசாரிக்க, என்னுடைய கணி்ப்பு உண்மையானது. அவர் அந்த லாட்ஜில் தங்கிவிட்டு அன்றிரவு 0730 மணிக்கு காலி செய்து போய்விட்டனர்.

என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்க அன்று காலை முகூர்த்ததினம் என்ற நினைவு வரவே சரி அவர்களுடன் வந்திருந்த 6 பேரை அருகில் உள்ள இவ்வாறன திருமணங்கள் நடக்கும் கோவில்களுக்கும், திருமண பதிவு அலுவலங்களுக்கும் அனுப்பிவிட்டு சற்று தெலைவில் உள்ள கோவில்களுக்கு நானும் உடன் சென்றவர்களும் விசாரிக்க அப்படி திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்பதால் திரும்பி வந்து கொண்டிருந்தோம். வாகனத்தில் வரவர ஒரு யோசனை தோன்றியது. சரி காலி செய்து விட்டு போனவர்கள் அறையில் ஏதாவது ஒரு துண்டு சீட்டாவது விட்டு சென்றிருப்பார்கள் என்று மீண்டும் அதே லாட்ஜ்கு வந்து தேட ஒரு சில பீர் பாட்டில்களும் பிராந்தி பாட்டில்களும் மட்டுமே கிடந்தன.

என்ன செய்வது என்ற யோசனையில் அங்கிருந்த டி.வி. ரிமோட்டை பார்க்க ஒரு யோசனை தோன்றியது. பின் கீழே வந்து ரிசப்பஷனில் இருந்த மேனேஜரிடம் இந்த அறையை புக் செய்தவருக்கு போன் செய்து ரிமோட் உடைந்து விட்டதாகவும், மாற்றி தர அவரை வரவழைக்கும்படியும் அவரிடம் எனது மொபைல் நம்பரை கொடுத்து விட்டு வெளியே நின்று கொண்டிருந்தேன்.

ஒரு கால் மணி நேரம் இருக்கும் எனது மொபைலுக்கு ஒரு கால் வந்தது. " உங்கள சுத்தி போலீஸ் நிக்குது நீங்க லாட்ஜ்கு வரவேண்டாம் உங்களை பிடிச்சுடுவாங்க வராதீங்கனு " லாட்ஜ் மேனேஜர் அவனுக்கு போன் பண்றதா நெனச்சு எனக்கு போன் பண்ணிருக்கார். எனக்கு வந்ததே கோபம் லாட்ஜ் மேனேஜரை கண்படி தி்ட்டி விட்டேன். நான் திட்டி கொண்டிருக்க லாட்ஜில் ரும் போட்டு கொடுத்த நபர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் நான் காவல் துறையை சார்ந்தவன் என்பதை தெரிவித்து அவரை வெளியே கூட்டி வர பெண்ணை பெற்ற தகப்பன் தன் பெண்ணை பறி கொடுத்த தவிப்பில் அவனை நாலு அடி அடித்து விட்டார். நான் அவரை சத்தம் போட்டு அவனை காவல் நிலையம் கொண்டு வந்து உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்து விசாரித்த போது அவனும் கடத்தி வந்த பெண் மற்றும் ஆணுக்கு உறவினர் என்பது தெரிந்தது. அப்போது ஆய்வாளரிடம் அவன் தானும் அவர்கள் உறவினர் தான் என்றும் தானே சென்னை போய் பெண்ணையும் கடத்தி சென்ற ஆணையயும் வரவழைத்து ஒப்படைப்பதாகவும் சொன்னதின் பேரிலும் அவர்கள் உறவினராக இருந்ததின் பேரிலும் அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.

அவனும் சென்னை சென்று அந்த பெண்ணையும், திருமணம் திருமணம் செய்தவரையும் சென்னைக்கு வரவழைக்க அவர்கள் இருவரும் நாங்கள் மேஜர் என்றும் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் எடுத்து சென்ற பணம் மற்றும் நகைகளை கொடுத்து விடுவதாகவும் கூறி பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.


இதுவல்ல பிரச்சினை இப்போ எனக்கு ஆச்சு பாருங்க அதுதான் பிரச்சினை. அங்கிருந்து திரும்பி வந்தவன். நானும் சென்னையில் இருந்து வந்தவர்களும் அவனை கடுமையாக அடித்து விட்டதாகவும், சென்னையில் இருந்து வந்தவர்கள் தன்னை கடத்தி சென்றதாகவும் கடத்தி செல்ல நான் உதவியதாகவும் கூறி நான் பணிபுரியும் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அன்றைய நிலையில் எவர் வந்திருந்தாலு்ம் இந்த உதவியை செய்திருப்பபேன். என் வேலை இதுவல்ல என்று அன்றே போயிருந்தால் எனக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது. வழக்கின் முடிவில் என் பணிபுரியும் வேலை கூட போகலாம். நீங்கள் நினைக்கலாம் நான் காசு வாங்கிவிட்டு கூட இந்த வேலை செய்திருக்கலாம் என்று லஞ்சமாய் வாங்கும் காசு நம் இறுதி காலத்தில் மருத்துமனைக்கு மட்டுமே செலவாகும் என்று நினைப்பவன் நான். என் மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுபவன் நான்.

இவ்வாறான நிகழ்வுகளால் உண்மையாய் வேலை செய்பவர்கள் கூட நமக்கு ஏன் பிரச்சினை என்று விலகி போக ஆரம்பித்தால்..................


விபச்சாரம் என்னும் விஷத் தொழில்

விபச்சாரம் செய்வது சரியா ? ஒரினச்சேர்க்கையையே தற்போது சட்டப்பூர்வமாக்கலாமா என்ற கேள்வி உள்ள நிலையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கலாம் அல்லவா என்று ஒரு அனானனி பதிவர் கேட்டிருந்தார் அவருக்காகவே இந்த பதிவு

விபச்சாரம் இன்று நேற்று தோன்றியதல்ல உலகில் முதன் முதலில் தோன்றிய தொழில் என்று வேடிக்கையாக கூறப்படுவதை கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் "விலை மகளிர்", "பொது மகளிர்" என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுடைய தொழில் "விபச்சாரம்" என்பது சாஸ்திரங்களின் மூலம் குற்றமாகக் கருதப்பட்டாலும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தொழிலை நண்பர் சட்டப்பூர்வமாக்கலாமா ? என்று கேட்டிருந்தார்.

முதலில் விபச்சாரத்தை சட்டமாக்கினால் என்னவாகும். பகிரங்கமாக ஒரு வீட்டிலோ அல்லத ஒரு லாட்ஜிலோ நடக்கும். மாணவர்கள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க படிக்க வேண்டிய வயதில் வீட்டில் திருடியாவது விலைமகளிடம் செல்வார்கள். வேலைக்கு போகும் ஆண்கள் வீட்டீற்கு பணம் கொடுக்க மாட்டார்கள் இன்னிக்கு மார்கெட்டில் புதுசா எவள் வந்திருக்கிறாள் எவ்வளவு ரேட் என்று குடும்பத் தலைவர்கள் கணக்கு போடுவார்கள். விலைமகளிடம் இலவசமாய் பெற்ற எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லி நோயை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று வீட்டில் உள்ள மனைவிக்கும் பகிர்தளிப்பார்கள். அப்பனும் மகனும், அண்ணனும் தம்பியும் அங்கே சந்திக்கலாம்.

ஏன் டி.வில் விளம்பரம் கூட வரலாம். இன்று இந்த பிகர் வந்திருக்கிறது. முன் பதிவுக்கு அணுகவும் என்று இதை வீட்டு கூடத்தில் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்தபடி ரசிக்கலாம். பெண்கள் அரசே அனுமதித்துள்ளதால் நாளெல்லாம் ஏன் கஷ்டப்படவேண்டு்ம். தினமும் சில மணிநேரம் தானே என்று இத்தொழிக்கு கிளம்பி விட்டால்............

நாடு தாங்காது நண்பரே நாடு தாங்காது..... இன்று வெளிநாட்டினர் நம்மை பார்த்து வியக்கும் ஒரெ விஷயம், ஒருவனுக்கு ஒருத்தி எனும் நம் பண்பாடு, கலாச்சாரம் தான். பாலியல் தொழில் மட்டுதான் செய்வார்கள் கருதப்பட்ட திருநங்கைகளே தற்போது சிறு சிறு குடிசை தொழில்கள், வேலைகளுக்கு செல்வது என்று தங்கள் பாதையை மாற்றிக் கொண்டு வரும்போது விபச்சாரத்தை அங்கரிப்பது என்பது கொடுமையானது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராததது.

இன்று விபச்சாரத்தை சட்டப்பூர்வமாககினால் நாளை லஞ்சம் ( பாவம் வேண்டும் என்றா வாங்குகிறார்கள் குடும்ப கஷ்டம், அவர்கள் பிழைப்பிற்காக வாங்குறாங்க ) கொள்ளை ( அவன் கிட்ட இருந்தா ஏன் அடுத்தவங்க அடிக்கிறான். ) ரவுடியிஸம் ( என்ன இருந்தாலும் எதி்ர் கால எம்.எல்.ஏ, பாவம் எதிர் வீட்டுகாரன நாம அடிக்க முடியனாலும் அவன் அடிகிறான் இல்ல ) இவை எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம். இவற்றை எல்லாம் சட்ப்பூர்வமாக்கினால் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என்கிறீர்களா ? விபச்சாரத்தால் முதலில் பாதிக்கபடுவது ஆணும் அவரை சேர்ந்த குடும்பமும் தான்.

கைவிரல் காயம் என்றால் மருந்து போட்டு ஆறவைக்க வேண்டுமே தவிர கைவிரல் இருந்தால் தானே பிரச்சினை என்று வெட்டி விடக்கூடாது. இன்று விபச்சார தடுப்பு சட்டம் என்ற ஒன்று இரு்ப்பதால் தான். நீங்கள் போலீஸில் சிக்கி விடுவோமோ என்ற பயத்திலேயே விலைமகளிடம் செல்லாமல் இருக்கிறீர்கள். ( தனி மனித ஒழுக்கம் உள்ளவர்களை தவிர )

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எய்ட்ஸ் நோயால் பாதி்க்கப்பட்டவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் கொசு கடித்தா இந் நோய் வருகிறது. எல்லாம் இந்த விபச்சாரத்தினால்.

திருட்டும் ஒரு குற்றம்தான். திருடுபவன் தனது வயிற்று பசிக்காகவும், தனது தேவைகளுக்காவும் திருடுகிறான். திருடுவதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வதி்ல்லையோ அது போலத்தான். விபச்சாரமும்.

கட்டாயப்படுத்தி இத்தொழிக்கு வரும் பெண்கள் 10% என்றால் விருப்பத்துடன் பணத்துக்காக இத்தொழில் ஈடுபடும் பெண்கள் 90% (எனக்கு தெரிந்த வகையில் ) உழைப்பதற்கு ஆயிரம் தொழில்கள் உள்ளன. அவற்றை இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும்.

இது நான் டிரைனிங்ல இருந்த போது நடந்தது. எனக்கு தெரிந்த காவல் ஆய்வாளர் ஒருவர் இதே போல் ஒரு விபச்சார ரெய்டில் பல பெண்களை கைது செய்து நிலையத்திற்கு கொண்டு வந்தார். வந்தவர்களில் ஒரு பெண் தைரியமாக " எனக்குன்னு ஒரு தொழிலே வேலையோ இருந்தா நான் ஏன் சார் இந்த தொழிக்கு வரேன் " என்று கேட்க ஆய்வாளரோ என்ன நினைதார் என்று தெரிவில்லை. தனது பாக்கெட்டில் இருந்த 800 ருபாய் கொடுத்தார். இந்தா அதை வைச்சு ஏதோ தொழில் செஞ்சு பிழைச்கோ என்று கொடுத்தார். எனக்கோ எவன்டா இவன் பைத்தியகாரனா இருப்பான் போலன்னு நினைச்சு மனசுல வைச்சுக்க முடியாம அவர்கிட்டையே கேட்டுட்டேன் எதுக்கு சார் பணம் கொடுத்தீங்கன்னு. அவர் சொன்னார். " வந்தவ எல்லாம் பைன் எவ்வளவு வரும்ன்னுதான் கேட்டாளுக. ஆனா அந்த பொண்ணு பேசினப்ப ஏண்டா இந்த தொழில்ல இருக்கோம்கிற வெறுப்புதான் இருந்திச்சு அதான் ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுகிட்டும்ன்னு கொடுத்தேன்னார். பின்னால் அதையும் அப்பெண்ணையும் மறந்துவிட்டேன்.

பின்னர் ஒரு வருடம் இருக்கும் பணி தொடர்பாக சேலம் சென்ற போது ஒரு தம்மாவது அடிக்கலாம் என்று டீக்கடை பக்கம் ஒதுங்கினேன். தம்மை வாங்கிட்டு கல்லாவில் இருந்த பெண்ணை எங்கயோ பாத்துருக்கனே என்று யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பெண் கேட்டாள். நீங்க போலீசா ? ஆமா இது நான் இப்போ அடையாளம் தெரிந்து விட்டது. அன்று விபச்சார ரெய்டில் சிக்கி ஆய்வாளரிடம் பணம் பெற்ற பெண்தான்.

அந்த பெண் ஆய்வாளரிடம் வாங்கிய பணத்தில் சில மாதங்கள் காய்கறி வாங்கி தள்ளுவண்டியில் வியாபரம் செய்திருக்கிறார். பின்னர் கால்கள் ஒத்துழைக்க மறுக்கவே தற்போது டீக்கடை வைத்திருப்பதாக சொன்னார். அன்று எனக்க பைத்தியகாரனாய் தெரிந்த அந்த ஆய்வாளர் இப்போது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்த தெய்வமாக தெரிகிறார்.


எனவே அனானி நண்பரே என்று ஒரு பெண் தன்னந்தனியே தன் வாழ்க்கை திறனை உயர்த்தி இவ்வுலகில் வாழும் அளவிற்கு அவளை தயார் செய்கிறோமோ அன்றுதான் இத்தொழில் ஒழியும். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பது தன் தலையில் கொள்ளிகட்டையை வைத்து தானே சொரிஞ்சுகற மாதிரி

விபத்து எனும் எமன்

கடுமையான பணியின் காரணமாக எழுத இயலவில்லை. வலைப்பூவிற்கு வந்து வாசித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்........

சமீபத்தில் கோவை மாவட்டம் பல்லடம் அருகே ஒரு விபத்தை காண நேரிட்டது. வீடியோ சுட்டி. ஒரு மணல் ஏற்றப்பட்ட லாரியில் முதலில் ஒரு டெம்போ டிராவலர் வேன் மோத அந்த முன்புறம் வழியாக லாரி ஏறி வேனின் பின்புறம் வந்து அதற்கடு்த்து வந்து கொண்டிருந்த ஒரு டாடா இண்டிகா காரில் மோதி நின்றது. இதில் பலியானவர்கள் டெம்போ டிராவலர் வேனில் மாப்பிள்ளை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் மற்றும் டாடா இண்டிகா காரில் சென்ற 2 பேர் ஆக மொத்தம் 14 பேர்

மதுரை அருப்புக்கோட்டை சாலையில் ஒரு தனியார் பஸ் டிரைவர் பஸ்ஸில் உள்ள டி.வி.டி பிளையரில் பாடலை மாற்றுவதற்காக பின்னால் திரும்பி பாடலை மாற்றிய போது எதிரே வந்த டாடா ஏஸ் வண்டியில் மோத கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்த 22 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

இவைகள் எல்லாம் சிறு சிறு உதா"ரணங்கள்" இன்று ரோடு நன்றாக இருக்கிறது என்பதனால் 90கிமி. 100 கி.மி வேகம் எல்லாம் சாதாரணமாகிவிட்டது. அந்த அளவிற்கு ரோடு இருக்கிறதா என்பது தான். கேள்வி.

உதாரணமாக தங்க நாற்கர சாலையை எடுத்துக்கொள்ளுங்கள் சில இடங்களில் மட்டுமே பணி முடிக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் பணிகள் பாதி முடிக்கப்பட்டும் முடிக்கப்படாமலும் உள்ளன. ரோடு நன்றாக உள்ளது என்று அதி வேகத்தில் வரும் ஒரு வாகன ஓட்டி தீடீரென்று மற்றுபாதையில் செல்லவும் என்ற போர்டு வந்தால் அவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியுமா ? சில இடங்களில் பள்ளங்கள் தோண்டியதுடன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.

நம் மக்கள் சாதாரண சாலையை கடப்பது போலவே தங்க நாற்கர சாலையும் கடக்கிறார்கள் சாதாரண சாலையில் சுமார் 80கி.மி வேகத்தில் வரும் வாகனம் தங்க நாற்கர சாலையில் சுமார் 90கி.மி. முதல் 110 கி.மி. வேகத்தில் வருகிறது. வழக்கம் போல் சாலையை கடக்கும் மக்கள் வாகனம் தூரத்தில் தான் வருகிறது என்று கடக்கிறார்கள் வாகனத்தின் வேகம் தெரிவதில்லை. விளைவு மரணம்.

நம் நாட்டில் வாகனங்களுக்கு ஏற்ற சாலைகள் இல்லை என்பது என் கருத்து. விளம்பரங்களில் வரும் வாகனங்களின் விளம்பரங்களில் வேகத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதற்க்கேற்ற சாலைகள் இல்லை என்பதுதான் உண்மை.

மேற்கண்ட விபத்துக்களை ஏற்படுத்திய வாகன ஓட்டுனர்கள் அதிகப்பட்சம் 15 நாட்கள் சிறையில் இருப்பார். மீறினால் 500 அல்லது 1000 ருபாய் அபராதம் செலுத்திவிட்டு போய்விடுவார்.

என்னடா காவல் துறையில் வேலை செஞ்சுட்டு இவனே இப்படி சொல்றனே நினைக்கறீங்களா ? வேற என்ன சொல்ல நம் நாட்டு சட்டம் அப்படி இப்போ புதுசா ஒன்னு கண்டுபிடிச்சுருக்காங்க விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து. அடடே பரவாயில்யேன்னு நீங்க நினைக்கலாம். இதுல என்ன காமெடி தெரியுமா ? புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் விருதுநகரில் விபத்தை ஏற்படுத்துறார்ன்னு வைச்சுக்குவோம். அவரோட ஓட்டு உரிமத்தை ரத்து செய்ய உள்ளுர் காவல் துறையினர் விருது நகர் ஆர்.டி.ஓ க்கு ஒரு கடிதம் கொடுப்பாங்க விருது நகர் ஆர்.டி.ஓ அதை ரத்து செய்ய புதுக்கோட்டை ஆர்டிஓக்கு ஒரு கடிதம் அனுப்புவார். இதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஆகும். அதற்கிடையில் நம்ம டிரைவர் தன் சொந்த ஊரான புதுக் கோட்டைக்கு போய் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார் இந்த மாதி என்னுடய டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சு போச்சு சமுகம் கண்டுபிடிச்சு தரனும்ன்னு. அங்க உள்ள போலீசாருக்கு இவன் விபத்து ஏற்படுத்துனது எப்படி தெரியும். உடனே ஒரு சர்டிபிக்கேட் கொடுப்பாங்க நம்ம டிரைவரோட லைசென்ச கண்டுபிடிக்க முடிலன்னு உடனே நம்ம டிரைவர் அந்த சர்டிப்பிக்ட்ட கொண்டு போய் ஆர்.டி.ஓ கிட்ட கொடுத்த உடனே புது லைசன்ஸ் கொடுத்துடுவாங்க.

முதலில் நம் நாட்டு சட்டங்கள் மாறணும். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலே குற்றங்கள் குறைந்துவிடும். அரசு அலுவலங்கள் ஆன்லைன் செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஆனால் விருதுநகரில் விபத்து ஏற்படுத்திய டிரைவர் புதுகோட்டையில் லைசென்ஸ் வாங்க முடியாது. விருது நகரில் விபத்து ஏற்படுத்திய டிரைவர் தன்னுடைய லைசென்ஸ் காணவில்லை என்று புதுக்கோட்டையில் புகார் கொடுக்க முடியாது.

இவைகளுக்கெல்லாம் மேலாக தனி மனிதன் திருந்த வேண்டும் தன்னை நம்பி தன் குடும்பம் இருக்கிறது. தன்னை நம்பி பயணம் செய்கிறார்கள் என்ற நினைவு பேருந்து மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள் நினைக்க வேண்டும் .இப்போதெல்லாம் அரசு பேருந்து டிரைவர்கள் கூட ஒரு கையில் செல்போன் மறு கையில் ஸ்டியரிங் என்று பார்க்க முடிகிறது. நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. ( ஏனென்றால் வாகனங்களை குறுக்கே நிறுத்திவிட்டு போலீஸ் அஜாரகம் ஓழிக, வேலை நிறுத்தம் என்று இறங்கிவிட்டால் எங்களுக்குதான் ஆப்பு )

முடிவாக வேகம் உங்களுக்கு உற்சாகம், திரில் போன்றவற்றை அளிக்கலாம் ஆனால் உங்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் நிலை ........................................................ கொடுமையானது இந்த உலகம் நினைவில் வைத்திருங்கள்ஆதலினால் காதல்................

எத்தனை நாட்களுக்குதான் நான் பணிபுரியும் என் துறையை பற்றி சொல்லி உங்களை வெறுப்பேற்றுவது ஆதலினால்..... காதல் பற்றி

காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல்

ஆனால் இன்றைய காதல்கள் போலிதனத்தின் வெளிப்பாடு, வீட்டில் கஞ்சிக்கு வழியில்லை என்றாலும், முகம் நிறைய புது வீட்டிற்கு வெள்ளையடித்ததை போல் பவுடர், கழுத்தில் கவரிங் நகை தெரிய இரண்டு பட்டன்களை கழட்டி விட வேண்டியது. நண்பனின் ஓசி பைக்கை வாங்கி கொண்டு மாலை நேரம் பள்ளி கல்லூரி அருகில் சுற்ற வேண்டியது. பல பெண்களை பார்க்க வேண்டியது. அதில் ஒன்று எப்படியாவது கண்டிப்பாக பார்க்கும். காதலர்கென்றே கண்டுபிடித்த காதலர் தினத்தில் ஒரு ரோஜாவை கொடுக்க வேண்டியது. பின் இருவரும் இணைந்து பார்க், பீச் என்று சுற்ற வேண்டியது.

பின் தன் நண்பர்கள் புடை சூழ ஒரு நாள் கோவிலிலோ அல்லது காவல் நிலையத்திலோ (!) ( இருக்கற பிரச்சினைகளில் இது தானே முதல் வேலை ) பெத்து 18 வருசம் வளத்துன தாய் தகப்பன் மண்ணவாரி தூத்த திருமணத்தை நடத்த வேண்டியது. கூட வந்தவன் எல்லலாம் "ஹேப்பி மேரிடு லைப் (?) மாப்ள ன்னுட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். அப்புறம் பொண்ணோ இவனோ எடுத்துட்டு வந்த பணத்தில மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கணக்கில ஜாலியா இருக்க வேண்டியது. பணம் தீர்ந்ததும் தான் அவர்கள் இருவரும் நிலையும் அவர்களுக்கு தெரியும். இதில் இருவரும் அவரவர் வீட்டுக்கும் போக முடியாது. உண்மையான நண்பர்கள் என்றாலும் அவர்களும் எத்தனை நாள் உதவி செய்வார்கள் ?.

இதற்கு காரணம் இன்றை திரைப்டங்களே, காதலிக்கவோ அல்லது காதலிக்கப்பட்டாளோதான் நாம் சமுதாயத்தில் வாழ்வதற்கு அர்த்தம் என்ற வகையில் திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு திரைப்படத்தில் பார்த்தாலும் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்க வேண்டியது. கிளைமாக்ஸில் கதாநாயகனுக்கு அல்லக்கையாக வரும் நண்பர்கள் ( அவ உன்னதான் பாக்குறாடா நண்பா !! ) இருவரையும் இணைத்து வைக்க வேண்டியது அப்புறம் சுபம்.


அதுக்கு அப்புறம் கதாநாயகன் கதாநாயகி சமுகத்தில் படும் அவலத்தை எத்திரைப்படமும் ( காதல் தவிர ) சொல்லவில்லை. சமுகத்தால் அங்கீகரிக்கபடாதவர்கள் இவ்வுலத்தில் சந்தோஷமாக வாழ்வது சாத்தியமில்லை. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் காதல் தவிர ( உ.தா. சூர்யா ஜோதிகா ) இன்றை காதலுக்கு பொருளாதாரம் மிக அவசியம் என்றாகிவிட்டது. இன்றை பெண்கள் கூட ஆள் எவ்வளவு சம்பாதிக்கிறான் வேலை நிலையானதா என்று பார்த்து காதலிக்கும் நிலை உள்ளது.

காதலால் சாதி ஒழிகிறது என்ற கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. ஒன்று காதலிப்பவர்கள்களில் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களில் யார் தாழ்ந்த சாதியினாராய் இருக்கிறாரோ அவரது சாதியை குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள். (அரசு சலுகைக்காக) அல்லது யார் உயர்ந்த சாதியினராய் இருக்கிறாரோ அவர் இனத்திலேயே பெண் எடுக்கும் அல்லது கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சாதி எங்கு ஒழிகிறது. என்பது தெரியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தாழ்ந்த சமுகத்தை சேர்ந்த ஆண் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தவரை இரண்டு ஆண்டுகளாக தேடி பெண்ணி சித்தப்பா கூலிப்படையினரை கொண்டு அந்த தாழந்த சாதி ஆணை வெட்டி கொன்று விட்டான். காதலிக்க தகுதியில்லாத நாடு இது.

நான் எனது காவல்துறை அனுபவத்தில் கண்ட வகையில் இன்றைய காதல்கள் 100% க்கு 98% காதல்கள் தோல்வியில் தான் முடிகின்றன. 2% காதல்கள் ஆணோ அல்லது பெண்ணோ உயர்ந்த பொருளாதரத்தில் இருப்பதன் முலம் அல்லது ஓரெ சாதியாய் இருப்பதன் முலம் வெற்றியடைகின்றன. காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், மனோதிடமும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் போது இருவருக்கும் இருப்பதில்லை.

நான் காதலுக்கு எதிரியில்லை நான் முதலில் சொன்னது போல் காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல் அது இப்போது இல்லை என்பதுதான் என் வாதம்.நன்றி .................


அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்


அலுவலக வேலை காரணமாக எழுத முடியவில்லை பின்னுட்டம் அளித்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.....

இன்று நம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மொபைல்.........கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் செய்தி தாளில் ஒரு செய்தியை படித்தருப்பீர்கள். சில வக்கிரம் எண்ணம் கொண்டவர்கள். தன்னுடன் பழகிய, படித்த, பணி புரிந்த பெண்களை வக்கிரமாக மொபைல் போனில் படம் பிடித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அது பரவி சம்பந்தப்பட்ட சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவமும் நடந்ததது.

இது போன்ற சம்பவம் எனது காவல் நிலையத்திலும் நடந்ததால் இந்த பதிவை எழுதுகிறேன். கடந்த சில நாட்களுக்குமுன்பு இரவு பணி செய்து கொண்டிருந்த போது ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒருவன் சந்தேகப்படும்படி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக சக அலுவலர் அழைத்து வந்தார். அவரை சோதனையி்ட்ட போது அவர் வைத்திருந்த போன் விலை உயர்ந்ததாக இருக்க சரி பார்க்கலாம் என்று அந்த போனை நோண்டி கொண்டிருந்தேன். அதில் சில வீடியோக்களும் இருக்க பார்த்தால் அத்தனையும் குடும்ப பெண்கள். வீடு கூட்டும் போது, துவைக்கும் போது உடை மாற்றும் போது, குளிக்கும் போது இதை விடக் கொடுமை ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டும் போது அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தது.

பிறகு அவனை அழைத்து "உரிய" முறையில் விசாரிக்க அவர்கள் தன் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என்றும் தான் விளையாட்டாய் எடுத்ததாகவும் கூறினான். பிறகு அடுத்த நாள் காலை வரை வைத்திருந்து அவனது தந்தைக்கு போன் செய்து வரச் சொல்லி, வீடியோவில் சம்மந்தப்பட்டவர்களையும் வரச் சொல்லி இது குறித்து கூற அவர்கள் அனைவரும் அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தங்களின் வீட்டருகே பல வருடங்களாக குடியிருப்பதாகவும் சிறு வயதிலிருந்தே அவனை தெரியும் என்பதால் தாங்கள் அவனை சந்தேக படவில்லை என்றும் புகார் அளித்தால் தங்கள் பெயரும் கெட்டுவிடும் என்று கூறியதால் அவனது தந்தையை அழைத்து எச்சரித்து எனக்கு தெரிந்த மொபைல் கடையில் அவனது மொபைல் ஐ கொடுத்து பிளாஷ் செய்து அவனது மெமரி கார்டை அவர்கள் முன்னிலையிலேயே உடைத்து. விட்டேன்.

பெண்களுக்கு : உங்கள் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உங்களை அரைகுறை ஆடையுடன் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம் ( விளையாட்டாக இருந்தாலும் கூட ) ஏனென்றால் தோழி என்றும் உங்களுக்கு தோழியாக இருக்க போவதில்லை சின்னப்பிரச்சினை வந்தாலும் உங்களின் நிலை ?

இன்னொரு பிரச்சினை பெண்களுக்கு ( ஆண்களுக்கும் கூட ) வரும் மொபைல் அழைப்புகள் முடிந்தவரை உங்களுக்கு தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால் அட்டன் செய்ய வேண்டாம். இரண்டு முறை முன்று முறை அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள ஆண் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கொடுத்து பேச செய்யுங்கள் தெரிந்தவர்கள் என்றால் வாங்கி பேசுங்கள்.

மற்றொன்று நீங்கள் உங்கள் காதலனிடமே அல்லது காதலியிடமோ ( அல்லது மற்றவரிடமோ) மொபைலில் பேசும் எதிர் முனை பீப்... பீப்...பீப்... என்ற ஒலி கேட்கிறதா என்று பாருங்கள் அப்படி ஒரு ஒலி கேட்டால் உங்கள் பேச்சுக்கள் ரெக்கார்டு செய்யப்படுகிறது என்று அர்த்தம். முடிந்தவரை அப்போதே உங்கள் தொடர்பை துண்டியுங்கள்.

பேசும் போது சரி தெரியாதவர்களிடமிருந்து எஸ்எம்.எஸ் வந்தால் ? கண்டு கொள்ளாதீர்கள். திரும்ப நீங்கள் Who are You ? / Who is This ? / Your Name Pls என்று எஸ்எம்.எஸ் அனுப்ப ஆரம்பித்தால் அங்கு ஆரம்பிக்கும் சனி. எஸ்எம்.எஸ் அனுப்பியவன் உங்களின் பதிலால் உற்ச்சாகமாகி உங்களிடம் பேச்சை வளர்ப்பான். உங்களிடம் உரிய பதில் இல்லை என்றால் மறுபடி எஸ்எம்.எஸ் வராது. அப்படி மீறி எஸ்எம்.எஸ் ஓ தேவையில்லாத அழைப்புகள் வந்தால் தாராளமாக உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ( தமிழ் நாடு காவல் நிலைய தொலைபேசி எண்கள் )

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காவல் துறைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. தாராளமாக புகார் தெரிவிக்கலாம். உங்களை பாதிக்கும் என்றால் உங்களை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைப்பார்கள். எங்களுக்கும் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் உண்டு.

மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்க :

 1. பெண்கள் முடிந்தவரை கணவனோ, காதலனோ தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை அனுமதிக்கூடாது.
 2. முடிந்தவரை தனது மொபைல் எண்களை அவசியம் ஏற்பட்டாலன்றி யாருக்கும் அளிக்க வேண்டாம்.
 3. முடிந்தவரை ஈஸி ரீச்சார்ஜ் ஐ பயன் படுத்தாதீர்கள் ( ஒரு கடையில் பெண்களின் எண்களை மட்டும் தனியாக குறித்து அவர்களுக்கு கடை பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெண்கள் பாதிக்கப்பட்டதனால் இந்த குறிப்பு )
 4. வீடு மற்றும் பொது இடங்களில் தங்களின் உடலை வெளிப்படுத்தும் வண்ண்ம் உடை அணிய வேண்டாம்.

என்னடா எல்லாம் பெண்களுக்கே அட்வைஸ் பண்றானே நமக்கில்லையா என்று யோசிக்கும் ஆண் நண்பர்களுக்கு...

முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுக்கு கேமிரா, புளுடுத் இல்லாத மொபைல்களை வாங்கி கொடுங்கள். மொபைல் என்பத நாம் அவர்களை தொடர்பு கொள்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.

அப்புறம் ஒன்னு. நம்மளையெல்லம் அரைகுறையா போட்டோ எடுத்து எவன் பாக்கறது. முடிந்தவரை உங்கள் உறவினர்கள், பெண் தோழிகளுக்கு மொபைல் போனால் ஏற்படும் விபரீதங்களை எடுத்து சொல்லுங்கள்.


நன்றியுடன்.................

நாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

புதிதாய் எழுத தொடங்கிய எனக்கு பின்னுட்டமிட்டு ஆதரவளித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல......

இந்திய அரசால் அரசின் நலதிட்டங்கள், அரசு துறை சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம். ஆனால் தவறானவர்களின் கையில் சிக்கி இந்த சட்டம் படும் பாடு. கேட்டால் கண்ணீர் வரும்.


என்னோடு பயிற்சியில் இருந்த காவல் நண்பர் ஒருவருடன் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் அனுப்பிய ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அது தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாகவும் உனக்கு வந்ததா என்று கேட்டார். நான் எனது மேஜை மீது வைத்திருந்த ஒரு கடித்தை காட்டினேன். சிரித்து விட்டார்.


அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :

 1. காவல் நிலையங்களின் முன்பு பிச்சை எடுப்பவர்கள் எத்தனை பேர். ? வயது வாரியாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர். ?
 2. காவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்களில் எத்தனை பேர் மது அருந்திவிட்டு வருகிறார்கள் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு ?
 3. காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு தண்டணை அடையும் குற்றவாளிகளி்ல் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், ? வயது வாரியாக
 4. காவல் துறையினருக்கு டீக்கடைகளில் இலவசமாக டீ வழங்கப்படுகிறா ? எந்தெந்த கடைகளில் ? அந்த கடை எத்தனை வருடமாக நடத்தப்டுகிறது.
இதே போன்று சுமார் 40 கேள்விகள் . இந்த கேள்விகள். அனைத்திற்கு பதில் பெற்று அந்த வழக்குரைஞர் ஒன்றும் சாதித்து விட போவதில்லை. காவல் துறையால் அவருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இக் கடித்தை அனுப்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

வரலாற்று புகழ் வாய்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன் முதலில் சுவீடன் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இச்சட்டம் கடந்த 2005 ஆண்டு கொண்டு வரப்பட்டது. பொது மக்கள் அரசு அலுவலரிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை அதிகாரபூர்வமாக பெற இச்சட்டம் வழி வகை செய்கிறது. வெளிப்படையான நிர்வாகம் மற்றும் லஞ்சத்தை கட்டுபடுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் 8 பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்ட்ட துறைகளன்றி மற்ற அனைத்து துறைகளும் மக்கள் கேட்கும் தகவலை அளித்தே ஆக வேண்டும்.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனக்கு தேவைப்படும் தகவலை அறிய ரு. 10 மட்டும் செலுத்தினால் போதும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனுப்பிய 30 நாட்களில் பதில் அனுப்பட வேண்டும் இல்லை என்றால் தாமதமாக்கப்படும் நாள் ஒன்றுக்கு ரு. 250 சம்மந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

அவர் ஒரு அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி. காவல் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர் ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் இதுவரை ஆயிரம் கேள்விகள் வரை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளதாகவும். தனக்கு இது 1001 வது பதில் என்றும் சொன்னார். நான் கேட்டேன் இதனால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் சொன்னார்.. தனக்கு இது தனக்கு பொழுது போக்கு என்றும் தனது ரிட்டயர்டு காலத்திற்கு பின் அரசு அலுவலர்களை கேள்வி கேட்க தனக்கு இது வாய்பாக பயன் படுத்தி கொள்கிறேன் என்றார். அதிகார போதை ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

தகவல் அறியும் சட்டத்தின் சிறப்பை ஒரெ வரியில் சொல்வதென்றால் உங்களுடயை குடும்ப அட்டைக்கு நீங்கள் ரேஷன் கடைக்கு சென்று கோதுமை அல்லது சர்க்கரை கேட்கறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த மாதம் இருப்பு இல்லை சொல்கிறார். அப்போது நீங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தலாம். ரு. பத்து செலவில் நீங்கள் தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் அவர்கள் அந்த மாதம் உங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை வழங்கப்பட்டுள்ளதா ? இல்லையா ? என்பதை தெரிவிப்பார்கள். அதன் முலம் அந்த கடைக்காரரின் மேல் நடவடிக்கை முடியும். ஒரு குடும்ப அட்டைக்கே என்றால் உங்கள் பகுதி உள்ளவர்கள் அனைவரும் இதே போல் நடவடிக்கை எடுத்தால் அந்தகடைக்காரர் பின் தவறு செய்ய துணிவாரா ?

இப்படிப்பட்ட சிறப்புமிக்க சட்டம் தான் இன்று தவறானவர்களின் கையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறது. நண்பர்களே இந்திய அரசு நமக்களித்துள்ள இந்த சிறப்பான சட்டத்தை உரிய முறையில் பயன் படுத்துங்கள். முன்றாம் பிறை படத்தில் கமலுடன் சிலுக்கு நடித்த போது சிலுக்குக்கு என்ன வயசு என்ற ரேன்ச்சில் திரைபட துறைக்கு கடிதம் அனுப்புவதை விட்டு விட்டு உங்கள் பகுதியில் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்கிறதா என்று அரசு துறைகளுக்கு கடிதம் அனுப்பி பதிலை பெற்று இச்சட்டம் பற்றி அறியாத ஊருக்கு உதவும் படிப்பறிவில்லாத நல் உள்ளங்களுக்கு உதவுங்கள்.

நானும் உங்களுடன்...

இது புதிய வலைப்பூ அல்ல, முன்பே தொடங்கினதுதான். பி.கே.பி. அவர்களின் wiki.pkp.in ல் எனது வலைப்பூவை அறிமுக பக்கத்தில் சுட்டியை முதன்முதல்ல போட்டிருந்தேன். நண்பர் கோவிகண்ணன் அவர்கள் மட்டும் பின்னுட்டமிட்டுருந்தார். நான் காவல் துறையில் பணிபுரிபவன். தேர்தல் அறிவிப்பினாலும் எனது துறையின் வேலை பளுவின் காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.

நான் முதன் முதலில் பிரரெளசிங் சென்டரில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது பி.கே.பியி்ன் வலைப்பபூவை பர்க்க நேர்ந்தது. அப்போது தான் தமிழ் வலைப்பூக்களை பற்றி மழுமையாக அறிந்து கொண்டேன். அவரது வலைப்பூவின் முலமே இயல்பாக கணிணி துறையில் ஆர்வம் என்பதால் நண்பர் தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலனின் கெளதம்இன்போடெக் ஆகிய வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன்.

அரசு துறைகளில் பொது மக்களோடு அதிக தொடர்பு கொண்ட துறை காவல் துறை. ஆனால் மக்களுக்கு காவல் துறை என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள். பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களு்க்கு மட்டுமே பணிபுரிபவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு இப்போதும் உண்டு.

உங்களில் பலர் பலவித பணிகளில் இருக்கலாம். சற்று நினைத்து பாருங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மனைவியுடன் செலவிடும் நேரம் எவ்வளவு? அதே சமயத்தில் காவல்துறையில் பணிபுரியும் எங்களை போன்றவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் எவ்வளவு? நினைத்து பாருங்கள். நான் படித்த காலத்தில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து விட்ட என் தந்தை நான் பள்ளி இறுதி படிக்கும் போது தான் வந்தார். (அதுவும் டி.சி. அவர் கையில் தான் கொடுப்பேன் என்று தலைமையாசிரியர் சொன்னதால் ) அவரை சொல்லி தவறு இல்லை ஏன் என்றால் அவரது பணி அப்படி அதை நான் இப்போது உணர்கிறேன்.

காவல் துறையில் ஆட்கள் பற்றாகுறை நிலவுகிறது. ஒரு காவல் நிலையத்தில் 60 காவலர் வேண்டும் என்றால் அதில் 25 பேர் மட்டுமே உள்ளனர். இன்று புற்றீசல் போல அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன. நாளொரு பேரணி பொழுதொரு உண்ணாவிரதம், என்று அவர்களுக்கு பாதுகாப்புக்கு செல்வதா ? தினமும் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதா ? கட்சிகளின் மாநாடு, அரசியல் வாதிகளின் மாநாட்டு பாதுகாப்புக்கு செல்வதா ? தினசரி அலுவல் பார்ப்பதா ?

இப்படிப்பட்ட நிலையில் காவலர் பணியில் இருக்கும் போது பொது மக்கள் சட்டத்தை மீறும் போது மேற்கண்ட காரணங்களால் மக்களிடம் தனது எரிச்சலை காட்ட வேண்டியதாகிறது.

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் ஒரு பழ மொழி உண்டு. குற்றவாளியிடம் உண்மையை வாங்கனும்னா அடிச்சுதான் வாங்கியாகனும், மயிலே மயிலே இறகு போடுன்னா எந்த மயிலும் போடாது பிடுங்கிதான் ஆகனும். சத்தியராஜ் படம்னு நெனைக்கிறேன். படத்தில் சத்தியராஜ் ஒரு இன்ஹ்பெக்டர் குற்றவாளி்ன்னு பிடிச்சா அடிதான். நாசர் ஒரு நிருபரா வருவார் அவர் சத்தியராஜ் அடிக்கிறது தப்புன்னு எதிர்ப்பார். ஒரு நாள் நாசர் வீட்டுலயே ஒரு கை வைச்சுருவான். சத்தியராஜ் அவனுக்கு பிரியாணி வாங்கி போட்டு கேட்க நான் எடுக்கலன்னு சொல்வான் அப்புறம் பின்னி பெடலெடுக்க உண்மைய ஒத்துக்கிருவான். அது மாதிரிதான். காவல் துறையும். நிறை பேர் சொல்வாங்க ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடலன்னாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்னு இதில் எனக்கு உடன்பாடில்லை. விசாரிக்கும் போது ஒரு நிரபராதி அடி வாங்கிருக்கலாம் அதுகாக எல்லா குற்றவாளிகளையும் அடிக்க கூடாதுன்னு சொல்றத என்னால ஏத்துக்கக முடியல. ஒரு 5 வயது குழுந்தையை கற்பழித்தவனை கண்டால் பெண்ணை பெற்ற எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். 50 ருபாய் பணத்துக்காக கொலை செய்தவனை கண்டால், கைவிரல் மோதிரம் கழட்டினால் வரவில்லை என்று விரலை வெட்டிய திருடனை கண்டால், பெற்றொர்கள் முன்னிலையில் அவர்கள் பெண்ணை கற்பழித்தால் எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். அதுக்கும் கூட இப்போ ஆள் வந்தாச்சு மனித உரிமைகள் கழகம் ஒன்னு இருக்கு அதிலயும் இப்போ நிறைய டுப்ளிகேட் வந்தாச்சு. அப்படி ஏதெனும் பிரச்சினை வந்தால் " சார் எவ்வளவு தருவீங்க நாங்க ஒதுங்கிகிறோம் " என்று கேட்ட மனித உரிமை ஆர்வலர்களை பற்றியும் நான் அறிவேன்.

நான் கேட்கறேன். காலை 08.00 மணிக்கு ( நிழற்குடை இல்லாத .டத்தில் ) ஒரு போக்குவரத்து ஒழுங்கு செய்யும் காவலர் நின்றால் மதியம் 130 மணி வரை நிற்கிறார். அவரை எத்தனை முறை கடந்திருப்பீர்கள் என்றாவது நீங்கள் அவரை பற்றி நினைத்துண்டா ? அரை மணி நேரம் வெயிலில் சென்று வந்துவிட்டால் உங்களை ஆசுவாச படுத்தி கொள்ள எத்தனை கூல்டிரிங், பேன் வசதிகள். நாங்களும் மனிதர்கள் தான் உணருங்கள். இதில் பெண் காவலர் நிலையை யோசித்து பாருங்கள். இயற்கை உபாதை விஷயத்தில் ஆண்களின் நிலை கூட பரவாயில்லை. பெண்களின் நிலை.

அடுத்ததாக லஞ்சம் பற்றியது. 8 மணி நேரம் பணிபுரியும் ஆசிரியரின் சம்பளத்தை விட 24 மணி நேரம் பணிபுரியும் ஒர காவலரின் சம்பளம் மிகக்குறைவு. காவலர்கள் அனைவருக்குமே அரசு குடியிருப்புகள் கிடைத்து விடுவதில் ( குடியிருப்புகள் போது மானதாக இல்லை என்பதே உண்மை ) ஒரு காவலரின் அடிப்படை சம்பளம் ரு. 3050 மட்டுமெ அனைத்து வித பிடித்தமும் போக கையில் ரு. 6500 கிடைக்கும் இப்போது நகரத்தில் குறைந்த பட்ச வீட்டு வாடகை ரு. 2500 மற்றும் இன்றைய விலை வாசி நீங்கள் அறிந்தது தான். இதில் குடும்பம் நடத்து என்றால் எங்கே நடத்த

இதே நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் காவலர்களுக்கு 0800 மணி நேரமே பணி. சம்பளம் ரு. 10.000க்கு மேல் அங்கு சென்று லஞ்சம் கொடுத்து பாருங்கள் " போடா பட்டியின்ட மகனே " ன்னு காதோட அப்பீருவான். ( நான் வாங்கியிருக்கேன். ) இன்றும் காவல் துறையில் நேர்மையான லஞ்சம் வாங்காத நிறைய அதிகாரிகளை எனக்கு தெரியும் எல்லாதுறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு. காவல் துறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு.

அடுத்து மக்கள் பார்வையில் காவல் துறை : சில நாட்களுக்கு முன்பு ( சென்னை உயர் நீதிமன்ற பிரச்சினையின் போது ) காவல் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தேன். அப்போது சட்டக்கல்லூரி செல்லும் பேருந்தில் இருந்த சட்ட கல்லூரி மாணவர்கள் " காவல் நிலையத்தை பார்த்து " டேய் மாமாக்களா " என்றும் இன்னும் எழுத இயலாத வார்தைகளையும் சத்தம் போட்டுக் கொண்டு போனார்கள். உங்கள் குடும்பத்தை பற்றி ஒருவர் தவறாக கூறினால் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்களை அடிதாலும் எங்கள் மீது தான் நடவடிக்கை, அடிக்காவிட்டாலும் அவமானம் எங்களுக்குத்தான். அப்புறம் பொது மக்களு்க்கு எங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்.

எனவே நண்பர்களே காவல்துறை மீது நம்பிக்கை வையுங்கள்.

பின்னொரு நாளில் தொடர்கிறேன்..............................featured-content