twitter
    Find out what I'm doing, Follow Me :)

நானும் உங்களுடன்...

இது புதிய வலைப்பூ அல்ல, முன்பே தொடங்கினதுதான். பி.கே.பி. அவர்களின் wiki.pkp.in ல் எனது வலைப்பூவை அறிமுக பக்கத்தில் சுட்டியை முதன்முதல்ல போட்டிருந்தேன். நண்பர் கோவிகண்ணன் அவர்கள் மட்டும் பின்னுட்டமிட்டுருந்தார். நான் காவல் துறையில் பணிபுரிபவன். தேர்தல் அறிவிப்பினாலும் எனது துறையின் வேலை பளுவின் காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.

நான் முதன் முதலில் பிரரெளசிங் சென்டரில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது பி.கே.பியி்ன் வலைப்பபூவை பர்க்க நேர்ந்தது. அப்போது தான் தமிழ் வலைப்பூக்களை பற்றி மழுமையாக அறிந்து கொண்டேன். அவரது வலைப்பூவின் முலமே இயல்பாக கணிணி துறையில் ஆர்வம் என்பதால் நண்பர் தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலனின் கெளதம்இன்போடெக் ஆகிய வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன்.

அரசு துறைகளில் பொது மக்களோடு அதிக தொடர்பு கொண்ட துறை காவல் துறை. ஆனால் மக்களுக்கு காவல் துறை என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள். பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களு்க்கு மட்டுமே பணிபுரிபவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு இப்போதும் உண்டு.

உங்களில் பலர் பலவித பணிகளில் இருக்கலாம். சற்று நினைத்து பாருங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மனைவியுடன் செலவிடும் நேரம் எவ்வளவு? அதே சமயத்தில் காவல்துறையில் பணிபுரியும் எங்களை போன்றவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் எவ்வளவு? நினைத்து பாருங்கள். நான் படித்த காலத்தில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து விட்ட என் தந்தை நான் பள்ளி இறுதி படிக்கும் போது தான் வந்தார். (அதுவும் டி.சி. அவர் கையில் தான் கொடுப்பேன் என்று தலைமையாசிரியர் சொன்னதால் ) அவரை சொல்லி தவறு இல்லை ஏன் என்றால் அவரது பணி அப்படி அதை நான் இப்போது உணர்கிறேன்.

காவல் துறையில் ஆட்கள் பற்றாகுறை நிலவுகிறது. ஒரு காவல் நிலையத்தில் 60 காவலர் வேண்டும் என்றால் அதில் 25 பேர் மட்டுமே உள்ளனர். இன்று புற்றீசல் போல அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன. நாளொரு பேரணி பொழுதொரு உண்ணாவிரதம், என்று அவர்களுக்கு பாதுகாப்புக்கு செல்வதா ? தினமும் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதா ? கட்சிகளின் மாநாடு, அரசியல் வாதிகளின் மாநாட்டு பாதுகாப்புக்கு செல்வதா ? தினசரி அலுவல் பார்ப்பதா ?

இப்படிப்பட்ட நிலையில் காவலர் பணியில் இருக்கும் போது பொது மக்கள் சட்டத்தை மீறும் போது மேற்கண்ட காரணங்களால் மக்களிடம் தனது எரிச்சலை காட்ட வேண்டியதாகிறது.

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் ஒரு பழ மொழி உண்டு. குற்றவாளியிடம் உண்மையை வாங்கனும்னா அடிச்சுதான் வாங்கியாகனும், மயிலே மயிலே இறகு போடுன்னா எந்த மயிலும் போடாது பிடுங்கிதான் ஆகனும். சத்தியராஜ் படம்னு நெனைக்கிறேன். படத்தில் சத்தியராஜ் ஒரு இன்ஹ்பெக்டர் குற்றவாளி்ன்னு பிடிச்சா அடிதான். நாசர் ஒரு நிருபரா வருவார் அவர் சத்தியராஜ் அடிக்கிறது தப்புன்னு எதிர்ப்பார். ஒரு நாள் நாசர் வீட்டுலயே ஒரு கை வைச்சுருவான். சத்தியராஜ் அவனுக்கு பிரியாணி வாங்கி போட்டு கேட்க நான் எடுக்கலன்னு சொல்வான் அப்புறம் பின்னி பெடலெடுக்க உண்மைய ஒத்துக்கிருவான். அது மாதிரிதான். காவல் துறையும். நிறை பேர் சொல்வாங்க ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடலன்னாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்னு இதில் எனக்கு உடன்பாடில்லை. விசாரிக்கும் போது ஒரு நிரபராதி அடி வாங்கிருக்கலாம் அதுகாக எல்லா குற்றவாளிகளையும் அடிக்க கூடாதுன்னு சொல்றத என்னால ஏத்துக்கக முடியல. ஒரு 5 வயது குழுந்தையை கற்பழித்தவனை கண்டால் பெண்ணை பெற்ற எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். 50 ருபாய் பணத்துக்காக கொலை செய்தவனை கண்டால், கைவிரல் மோதிரம் கழட்டினால் வரவில்லை என்று விரலை வெட்டிய திருடனை கண்டால், பெற்றொர்கள் முன்னிலையில் அவர்கள் பெண்ணை கற்பழித்தால் எவனுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். அதுக்கும் கூட இப்போ ஆள் வந்தாச்சு மனித உரிமைகள் கழகம் ஒன்னு இருக்கு அதிலயும் இப்போ நிறைய டுப்ளிகேட் வந்தாச்சு. அப்படி ஏதெனும் பிரச்சினை வந்தால் " சார் எவ்வளவு தருவீங்க நாங்க ஒதுங்கிகிறோம் " என்று கேட்ட மனித உரிமை ஆர்வலர்களை பற்றியும் நான் அறிவேன்.

நான் கேட்கறேன். காலை 08.00 மணிக்கு ( நிழற்குடை இல்லாத .டத்தில் ) ஒரு போக்குவரத்து ஒழுங்கு செய்யும் காவலர் நின்றால் மதியம் 130 மணி வரை நிற்கிறார். அவரை எத்தனை முறை கடந்திருப்பீர்கள் என்றாவது நீங்கள் அவரை பற்றி நினைத்துண்டா ? அரை மணி நேரம் வெயிலில் சென்று வந்துவிட்டால் உங்களை ஆசுவாச படுத்தி கொள்ள எத்தனை கூல்டிரிங், பேன் வசதிகள். நாங்களும் மனிதர்கள் தான் உணருங்கள். இதில் பெண் காவலர் நிலையை யோசித்து பாருங்கள். இயற்கை உபாதை விஷயத்தில் ஆண்களின் நிலை கூட பரவாயில்லை. பெண்களின் நிலை.

அடுத்ததாக லஞ்சம் பற்றியது. 8 மணி நேரம் பணிபுரியும் ஆசிரியரின் சம்பளத்தை விட 24 மணி நேரம் பணிபுரியும் ஒர காவலரின் சம்பளம் மிகக்குறைவு. காவலர்கள் அனைவருக்குமே அரசு குடியிருப்புகள் கிடைத்து விடுவதில் ( குடியிருப்புகள் போது மானதாக இல்லை என்பதே உண்மை ) ஒரு காவலரின் அடிப்படை சம்பளம் ரு. 3050 மட்டுமெ அனைத்து வித பிடித்தமும் போக கையில் ரு. 6500 கிடைக்கும் இப்போது நகரத்தில் குறைந்த பட்ச வீட்டு வாடகை ரு. 2500 மற்றும் இன்றைய விலை வாசி நீங்கள் அறிந்தது தான். இதில் குடும்பம் நடத்து என்றால் எங்கே நடத்த

இதே நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் காவலர்களுக்கு 0800 மணி நேரமே பணி. சம்பளம் ரு. 10.000க்கு மேல் அங்கு சென்று லஞ்சம் கொடுத்து பாருங்கள் " போடா பட்டியின்ட மகனே " ன்னு காதோட அப்பீருவான். ( நான் வாங்கியிருக்கேன். ) இன்றும் காவல் துறையில் நேர்மையான லஞ்சம் வாங்காத நிறைய அதிகாரிகளை எனக்கு தெரியும் எல்லாதுறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு. காவல் துறையிலும் கருப்பு ஆடுகள் உண்டு.

அடுத்து மக்கள் பார்வையில் காவல் துறை : சில நாட்களுக்கு முன்பு ( சென்னை உயர் நீதிமன்ற பிரச்சினையின் போது ) காவல் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தேன். அப்போது சட்டக்கல்லூரி செல்லும் பேருந்தில் இருந்த சட்ட கல்லூரி மாணவர்கள் " காவல் நிலையத்தை பார்த்து " டேய் மாமாக்களா " என்றும் இன்னும் எழுத இயலாத வார்தைகளையும் சத்தம் போட்டுக் கொண்டு போனார்கள். உங்கள் குடும்பத்தை பற்றி ஒருவர் தவறாக கூறினால் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்களை அடிதாலும் எங்கள் மீது தான் நடவடிக்கை, அடிக்காவிட்டாலும் அவமானம் எங்களுக்குத்தான். அப்புறம் பொது மக்களு்க்கு எங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும்.

எனவே நண்பர்களே காவல்துறை மீது நம்பிக்கை வையுங்கள்.

பின்னொரு நாளில் தொடர்கிறேன்..............................



36 comments:

ஹிப்ஸ்... said...

வாழ்த்துக்கள் உங்களது பணி தொடர!

ஹிப்ஸ்... said...

வாழ்த்துக்கள் உங்களது பணி தொடர!

மன்மதக்குஞ்சு said...

தங்கள் தரப்பு வாதத்தை வைத்துள்ளீர்கள். பாரட்டுக்கள். இது போன்று தங்கள் கண்ணோட்டம் அவசியமான ஒன்று.
பணி தொடரட்டும்.

தமிழ்போராளி said...

அன்புள்ள நண்பருக்கு வணக்கம். நலம் நலம் அறிய ஆசை.உங்கள் வலைப்பூ பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்களுடன்
வீரா துபாய்...

ஸ்ரீ.... said...

வருக வலையுலகுக்கு! பதிவர்கள் பல துறைகளைச் சேர்ந்தவர்கள். நீங்கள்தான் காவல்துறையிலிருந்து முதல் நபர் என நினைக்கிறேன். ஆரம்பப் பதிவே அருமை. தொடர்ந்து நிறைய எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

ஸ்ரீ....

Anonymous said...

really touching.....The government has to take proper measures to look after the policemen life...

Senthil said...

Awaiting yr post

GNU அன்வர் said...

காவல் அதிகாரிகள் வலைபூ எழுதுவது நன்று மேலும் இதில துறை சார்ந்த வலிகளுடன் இதுவரை பொது மக்களுக்கு தெறியாத தகவல்களை தருவிர்க்ள என்று நம்புகிறேன் வலைபூ சம்மந்தமாக எந்த சந்தேகம் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளவும் என் வலை பூ http://nattuboltu.blogspot.com/

Senthil said...

Awaiting yr post!!!!!!

Tech Shankar said...

மிக நன்றாக எழுதி மனதில் உள்ள பாரத்தைத் தெளிவாக வரைந்திருக்கிறீர்கள்.

பக்கத்து மாநில கேரளத்தில் காவலர்க்கு இருக்கும் மதிப்பு இங்கே இல்லை. உண்மைதான்.

“இதுதான் வாழ்க்கை! இதுதான் உலகம்!!” என்று சுகபோதானந்தாவின் வரிகள் உண்டு. அதையே இன்னும் சொல்லிக்கொண்டு திரிகிறோம். என்று தெளிவு பிறக்கும் - எனக் காத்திருக்கிறோம்.

Sathies said...

yes.. very true.
plz continue your thought sharings.

tshankar89 said...

Dear Sir,

I read your article and I have few comments to make.

Regarding the criminals/thievs, you say that they need to be man-handled to get the truth. But what about our political criminals/thieves? I t is well known that they "eat" people tax money but why your police force don't catch them and punish them?

If police force obeys only to the ruling govt party, then how do you expect us to believe you? Even if I come with some case against a leading politicians for any corruption case, did police do the duty?

So, police in tamilnadu is just doing the right thing as "security force" for the ruling govt and for the corrupted and crooked politicians.

Please don't deny my words! Before doing so, please tell me about the status of the case of "3 people killed" in dinakaran's office!

SN. Thi,The Netherlands

Anonymous said...

Nice Blog. I'm expecting for a blog from your atmosphere. Keep writing. Arun

நிகழ்காலத்தில்... said...

சத்தியராஜ் படம்னு நெனைக்கிறேன்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற படம்.,

25 தமிழிஷ் ஓட்டு விழுந்தும் ஒரு பின்னூட்டம்கூட இல்லை.,

போலீஸ் என்றதும் நம் மக்கள் விலகிவிட்டனரோ..!!

வாழ்த்துக்கள்., நேரம் கிடைக்கும்போது, மனதில் உள்ளதை பதிவாக்குங்கள்..

jothi said...

good,.. keep it up,..

Anonymous said...

Sir,

I just want to tell you one thing. According your lecture I came to understand something and I would like to explain them below:

Correct me If I am wrong:-

1. "Bribe" The reason you are telling for this that you people basic salary is very low and that's the reason for the raise of Bribe.
My questions is- Bribe is given in the case of an illegal activity. Suppose a person wants to cover his crime, he is giving bribe and this is the main reason for Bribe and I hope you all know.

From my point of view, I cannot find any valuable reason for Bribe......

Rest we will talk in your next POST

Thanks.....

Anonymous said...

Sir,

I just want to tell you one thing. According your lecture I came to understand something and I would like to explain them below:

Correct me If I am wrong:-

1. "Bribe" The reason you are telling for this that you people basic salary is very low and that's the reason for the raise of Bribe.
My questions is- Bribe is given in the case of an illegal activity. Suppose a person wants to cover his crime, he is giving bribe and this is the main reason for Bribe and I hope you all know.

From my point of view, I cannot find any valuable reason for Bribe......

Rest we will talk in your next POST

Thanks.....

Anonymous said...

I have had an experience with Traffic Police. I was Driving in Chennai and I was new to Chennai. On a road I made a U Turn but that road seems to be a One way Street. (There was no sign for One Way St anywhere). The Police caught me and he told me that it is dangrous driving. He asked me how much I have and I told them Rs 100. He asked me to give 200 and leave. So I paid 200 and he sent the constable to stop the oncoming traffic so that I can continue driving on opposite side on one way. How is that

S.Devaraj said...

Hi boss,
I really agree with you. Upcourse whatever the work there should be working timings.Your comparison of salary is worth to think. May be some black sheeps are there but we cannot blame the whole dept. Anyhow expecting more things from your block.
Keep writing

Selvaraj said...

வாழ்த்துக்கள்!!
உங்களின் மன பாரத்தை எங்களோடு பகிர்ந்து குறைத்துள்ளீர்கள்!.தொடர்ந்து எழுதுங்கள்! உங்களின் எழுத்துக்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Anonymous said...

valuable poins...i agree but should be discussed alittle moer

கலையரசன் said...

பாஸ்! நீங்க காவல்துறையில இருக்க வேண்டியவர் இல்ல..
பத்திரிக்கை உலகில் இருக்க வேண்டியவர்!
ஆணித்தரமான வாதம்!.. உணர்வுபூர்வமான வார்த்தைகள்!!

வடுவூர் குமார் said...

வாவ்! இது தான் முதல் பதிவா? நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
தொழில் சார்ந்த பதிவுகளை இன்னும் எழுதுங்கள்.
ஒரு போக்குவரத்து ஒழுங்கு செய்யும் காவலர்இதைப் பற்றி என்னுடைய பதிவு ஒன்று இங்கே

Anonymous said...

well done kattabomman.i am expecting more from you.

Benedict Alphonse said...

Nice Post

raju4u said...

Yes In USA Police treat their job as an honor and do their job promptly and with pride.Although Salaries for Policemen in USA is not great it is still good and seems they also have pension benefits. Here too Policemen should get Pension benefits,free Medical Insurance.But We don't even usually have paper to write in Police Stations.

cheena (சீனா) said...

நண்ப - வாழ்த்துகள் - காவல் பணீயில் இருக்கும் போதே இது மாதிரி எழுத முடிகிறதா? நன்று நன்று - அனைத்து அரசுத் துறைகளிலும் இந்த நிலை உண்டு

மாற வேண்டும் - மாறும்

ஆசிரியப் பணியினையும் காவல் பணியினையும் மதிக்காத நாடு உருப்படாது

cheena (சீனா) said...

நண்ப - வாழ்த்துகள் - காவல் பணீயில் இருக்கும் போதே இது மாதிரி எழுத முடிகிறதா? நன்று நன்று - அனைத்து அரசுத் துறைகளிலும் இந்த நிலை உண்டு

மாற வேண்டும் - மாறும்

ஆசிரியப் பணியினையும் காவல் பணியினையும் மதிக்காத நாடு உருப்படாது

sikkandar said...

excellent. sir. we people always salute police.
Expect more interesting news from you.

Regards
sikkandar

கிரி said...

ரொம்ப நல்லா இயல்பா எழுதி இருக்கீங்க...

அறிவுடைநம்பி said...

காக்கிச் சட்டைப் போட்டவரே !

//
அதே சமயத்தில் காவல்துறையில் பணிபுரியும் எங்களை போன்றவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் எவ்வளவு? நினைத்து பாருங்கள்.//

அது நீங்கள் பணிபுரியும் அதிகாரியையும், பணிபுரியும் இடத்தையும் பற்றியது. எனக்கு தெரிந்த ஒருவர், ஊர்ப்புறத்தில் பணிபுரிந்து, 3 வருடங்களுக்கு முன்பு ரிட்டயர் ஆனார். அவரை உறவினர்கள் எல்லாம், வேலையே இல்லாமல் ஸ்டேசனில் வெட்டியாக இருப்பவர் என்று கிண்டல் அடிப்பார்கள்.

//இப்படிப்பட்ட நிலையில் காவலர் பணியில் இருக்கும் போது பொது மக்கள் சட்டத்தை மீறும் போது மேற்கண்ட காரணங்களால் மக்களிடம் தனது எரிச்சலை காட்ட வேண்டியதாகிறது.//

நீங்கள் குறிப்பிட்ட மேற்படி அரசியல்வாதிகள் மட்டுமின்றி, நீங்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்களின்
அதிகாரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தவர்கள், சுரணடப்படுபவர்கள்.
//ஒரு காவலரின் அடிப்படை சம்பளம் ரு. 3050 மட்டுமெ அனைத்து வித பிடித்தமும் போக கையில் ரு. 6500 கிடைக்கும் இப்போது நகரத்தில் குறைந்த பட்ச வீட்டு வாடகை ரு. 2500 மற்றும் இன்றைய விலை வாசி நீங்கள் அறிந்தது தான். இதில் குடும்பம் நடத்து என்றால் எங்கே நடத்த
//
உங்களுடன் இந்தக் கருத்தில் உடன்படுகிறேன். ஆனால் எனக்கு தெரிந்த (உறவினர்) ஒரு காவலர் - டிரைவர் - பல ப்ளாட்டுகள், காலிமனைகள், 10 கார்களுடன் டிராவல் ஏஜென்ஸி என சொகுசாக வாழ்பவர். எங்களையெல்லாம் ஏளனமாகப் பார்ப்பவர். ஆக, காவலர்கள் பணம் வாங்குவது, வாழ்க்கைச் செலவுகளுக்காக அல்ல !!

அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

அறிவுடைநம்பி.

GNU அன்வர் said...

இங்கு அரசியல்வாதிகளின் குற்றம் சொல்லும் நோக்கத்தை மட்டும்தான் சுட்ட முயற்ச்சி செய்துள்ளேன் இதனிலும் மேலான கை ரேகை வைக்கும் முறை கூட முயன்று பார்க்கலாம் தங்களை போன்றவர்கள் முட்டுமே இத்தனை நுண்ணிய தவறுகளை சுட்ட முடியும்

நாமக்கல் சிபி said...

எவ்ளோ காரணங்களைச் சொன்னாலும் லஞ்சம் வாங்குவதை நியாயப் படுத்த முடியாது சார்!

காவல்துறையை மட்டும் இங்கே சொல்லவில்லை! எல்லாரையும் சேர்த்துத்தான் சொல்றேன்!

தருமி said...

உங்கள் பதிவைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. வழக்கமாக பின்னூட்டம் பதிவின் இறுதியில் இருப்பதுபோலல்லாமல் முதலில் வந்து விட்டதால் ஏற்பட்ட குழப்பத்தினால் முதலில் பின்னூட்டமிட முடியவில்லை.

எனக்கும் உங்கள் துறைக்குமான சில நிகழ்வுகளை என் பதிவுகளில் பதிந்துள்ளேன். நேரம் கிடைத்தால் வாசியுங்கள்:

http://dharumi.blogspot.com/2007/06/224.html

http://dharumi.blogspot.com/2008/03/253-smart-sys.html

http://dharumi.blogspot.com/2006/12/191.html

http://sixth-finger.blogspot.com/2007/06/46-i-salute-madurai-ac-traffic.html

நன்றி.

Anonymous said...

/// காலை 08.00 மணிக்கு ( நிழற்குடை இல்லாத .டத்தில் ) ஒரு போக்குவரத்து ஒழுங்கு செய்யும் காவலர் நின்றால் மதியம் 130 மணி வரை நிற்கிறார். அவரை எத்தனை முறை கடந்திருப்பீர்கள் என்றாவது நீங்கள் அவரை பற்றி நினைத்துண்டா ? ///

ஒரு வணக்கம் சொல்லி புன்னைகையோடு நன்றி சொல்லி கொண்டே தான் ஒவ்வொருமுறை அவர்களை கடந்து செல்கிறேன்...
-சரவணன்.

தமிழ். சரவணன் said...

//ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காவல் துறைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. தாராளமாக புகார் தெரிவிக்கலாம். உங்களை பாதிக்கும் என்றால் உங்களை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைப்பார்கள். எங்களுக்கும் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் உண்டு.//

உங்கள் கட்டுரை அருமை! அணைத்தும் உண்மை.... எனக்கு ஏற்பட்ட குடும்பப்பிரச்சணையில் காவல் துறையை பற்றி மேம்போக்காக அறிந்த எனக்கு அதனில் உண்மை புரிந்தது... அதில் மிகமிக அறிதாக மனித தெய்வங்களைக்காணலாம் மற்றும் பிணத்தின் சதையை திங்கும் மிருகத்தையும் காணலாம் இரண்டையும் ஒரேநாளில் காவல்நிலையத்தில் கண்டென்...

என் வாழ்கயைில் நடந்த முதல் காவல் நிலையசம்பவம்....

இரவு 11மணி அளவில் நான் எனது மனைவியை வயிற்றில் உதைத்து விட்டதாக புகார் தரப்பட்டு அதை விசாரிக்க ஒரு உதவி ஆய்வாளர்... என் வீட்டுக்கு சைரன் காவல் வண்டியல் வந்து என்னையும் எனது தம்பிையுயம் விசாரணைக்காக கூட்டிச்சென்றார்... என்னை மிகவும் மரியாதைக்குரைவாக பேசிக்கொண்டு வந்தவர்... நான் முதன் முதலில் காவல்நிலையத்தில் பொய்புகாருக்கா காலடிவைக்கையில் என்னையும் மீற கதறி அழுகையில் என்னைத்தனியா அழைத்து விசாரித்பின் நான் நடந்த அணைத்து உண்மைகளையும் தெரிவித்த பிறகு எனக்கு கிடைத்த மரியாதையும் இதுபோலும் மனிதர்கள் இருப்பார்களா என்றும் வியக்கும் அளவிற்ககும் அவருடைய நடவடிக்கை இருந்தது... ஒரு அன்பான சகோதரன் போல் என்மீதும் எனது தம்பி மீதும் அவர்செலுத்திய அன்பை உயர் உள்ள வரை மறக்க இயலாது... அவர் பெயர் திரு. நந்த குமார், S14 காவல் நிலையம்... இது போல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் உலகத்தில்... "மாரி பெய்வதும் இவர்கள் போல் உள்ள மனிதர்களால்தான்"

எனக்கு நடந்த ஒரு சம்பவம்...

நான் ஒரு நாள் எனது வண்டிக்கு வணிக வரி கட்ட சென்றபோழுது ஒரு உயர் அலுவலர் 200 ரூபாய் பணம் என்னிடம் மறைமுகமாக கேட்டார் நானும் மறைமுகமாக தரமறுத்த காரணத்திற்காக சுமார் 3 மணி நேரம் காக்க நேர்ந்தது...அந்த நேரத்தில் அவரை கவனித்த பொழுது மணிக்கொரு தரம் பல மாத்திரைகளை விழங்கிக்கொண்டிருந்தார்... இது போல் லஞ்ச காசில் தானும் நிம்மதியாக இல்லாம் இன்னும் பணம் சேர்கநிணைக்கும் இது போல் விந்தை மனிதர்கள் எப்பொழுது திருந்துவார்கள்....

//ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்னு இதில் எனக்கு உடன்பாடில்லை.//

ஒருவன் நிரபராதி என்று தெரிந்தும் மகளிர் காவல் நிலையத்தில் என் நண்பனைப்போட்டு அடித்தார்கள்... இது போல் பணம் தின்னும் அலுவலர்களை என்ன சொல்வது? என்ன செய்வது? மற்றும் இது போல் நடக்கம் கொடுமைகளால் சமுகம் மீது வெறுப்பு ஏற்பட்ட வாய்புஉள்ளது...

featured-content