twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஒரு அமைச்சரின் காரின் விலை கூடாவா பெறாது ? ஒரு காவலனின் உயிர்

                          இன்னைக்கு போலீஸ்காரன் நிலைமை இதுதான் ஒரு அமைச்சரின் காரின் விலை கூடவா பெறாது ? ஒரு காவலனின் உயிர்

 நன்றி. http://www.tutyonline.com/news/view/2/3625/1263006793.shtml

ஆம்புலன்ஸிற்காக காத்திருந்த 20 நிமிட‌ங்கள்: அமைச்ச‌ர்க‌ளை சாடும் அமைப்புக‌ள்!
January 8, 2010, 8:13 PM


சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை 20 நிமிட‌ங்க‌ள் முன்ன‌தாக‌ ம‌ருத்துவ‌ ம‌னைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க‌லாம் என சம்பவ இடத்தில் இருந்த‌ அமைச்ச‌ர்க‌ளை பல்வேறு தொலைக்காட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சப்.இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வெற்றிவேல் (42). நேற்று கோதைசேரி பகுதியில் இலவச வேட்டி சேலை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்திற்கும் பின்னர் ஒரு வழக்கு தொடர்பாக அம்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்து விட்டு மதியம் 2.45 மணிக்கு பைக்கில் ஆழ்வார்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஆம்பூர் அருகே ஆழ்வார்குறிச்சி ஆற்றுப்பாலத்தை கடந்து வந்த போது அங்கு புதரில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல், வெற்றிவேல் மீது திடீரென வெடிகுண்டுகளை வீசியது.

இதில் அவரது வலது கால் சிதைந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பல், வெற்றிவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கழுத்தில் வெட்டுப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அந்த வழியாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கடையநல்லூர் மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக அம்பையிலிருந்து காரில் வந்தனர். இதைப்பார்த்த கும்பல் பைக்குகளை போட்டு விட்டு தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு  ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.அப்போது உட‌ன‌டியாக‌ அவ‌ரை அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாக‌ன‌த்திலோ அல்ல‌து பாதுகாப்பு போலீசாரின் வாக‌ன‌த்திலோ கொண்டு செல்லாம‌ல் ஆம்புல‌ன்சை எதிர்பார்த்து சுமார் 20 நிமிட‌ங்க‌ள் காத்திருந்த‌ன‌ர். சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் காலில் குண்ட‌டி ப‌ட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த‌ போதும் எழுந்திருக்க‌ முயற்சி செய்துள்ளார்.

சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை 20 நிமிட‌ங்க‌ள் முன்ன‌தாக‌ ம‌ருத்துவ‌ ம‌னைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க‌லாம்.இந்த தங்கமான நேரத்தை (Golden Hour) வீணடிக்காமல்  உடனடியாக அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாக‌ன‌த்தில்  சப்.இன்ஸ்பெக்டரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார்  என‌ என்.டி.டிவி. செய்தியாள‌ர் சாம் டேனிய‌ல் தெரிவித்துள்ளார்.



• • • • கண்ணீருடன் • • • • • •

featured-content