twitter
    Find out what I'm doing, Follow Me :)

காவல் துறையில் என்னை கவர்ந்தவர்கள் - 1

               நண்பர்களுக்கு வணக்கம், வேலை பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை மிக நீண்ட காலம் கழித்து எழுதுகிறேன். நண்பர் வால்பையன் அவர்கள் எனக்கு ஒரு பின்னுட்டம் இட்டிருந்தார்.

           அவருக்கு......  நீங்கள் அதிகம் எழுதுகிறீர்கள் மகிழ்ச்சியே ஆனால் என்னைப்போல் எப்போதாவது எழுதுபவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை. இது போன்ற பின்னுட்டமிடுவதை நிறுத்தி கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.


              இப்பதிவு என்னை கவர்ந்த காவல் துறையில் நேர்மையாக பணிபுரிபவர்களை பற்றியது.

                  இச் சம்பவங்கள் நடந்து இரண்டு ஆண்டுகள் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மாறுதலின் பேரி்ல் நான் பணிபுரியும் மாவட்டத்திற்கு  பணி மாறுதலில் வந்தார். அவர் வரும் போதே அவரை பற்றிய செய்திகள் எங்களை அதிகம் ஆர்வம் கொள்ளச் செய்தது. மிகவும் நேர்மையானவர், யாருக்கும் ( எந்த அரசியல் வாதிக்கும் ) பயப்படாதவர், பணியில் மிகுந்த கண்டிப்பு மிகுந்தவர் போன்றவை. என்னிடம் சொன்ன ஏட்டையாவிடம் நான் சொன்ன வார்த்தைகள் " புது செருப்பு கடிக்க தான் செய்யும் போக போக பாருங்க தெரியும் "

                 ஆனால் அவர் அவ்வாறு அல்ல என்பதை அவர் பணிக்கு வந்த ஒரெ வாரத்தில் தெரிந்து கொண்டேன். நான் ஒரு நாள் இரவு பணியில் இருந்த போது டி.எஸ்.பி டிரைவர் என்னை அழைத்து டி.எஸ்.பி. அழைப்பதாக சொல்ல நான் அவரிடம் போன போது அவருடைய வாகனத்தில் ஏற சொன்னார். நானும் ஒன்றும் சொல்லாமல் ஏறிவிட்டேன். வாகனம் எங்கு செல்கிறது என்ற சொல்லவில்லை. ஆனால் ஒரு சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு போகிறோம் என்று மட்டும் சொன்னார். சரி எங்கயாவது ஒரு முள்ளுக்காட்டுக்குள்ள ஓடவிட போறாங்க என்று நினைத்து கொண்டே யோசனையில் இருந்த போது வாகனம் நகரில் நம்பர் 1 பைவ் ஸ்டார் ஓட்டலுக்குள் நுழைந்தது. சாதாரண ஓட்டலில்லை அது முன்று முதல்வர்கள்,  குடியரசு தலைவர். மற்றும் மிக முக்கிய வி.ஐ.பி.கள் தங்கும் ஒரெ பைவ் ஸ்டார் ஓட்டல் அது அப்போதும் நான் யோசிக்கவில்லை சரி யாரையோ பாத்துட்டு அப்புறம் போவாங்க போலிருக்குன்னு நினைச்சுட்டு பின்னாலேயே போனேன்.

                  முன்னால ரிஷப்பஷன் போயி ரும் நம்பர் சொல்லி யாரு தங்கிருக்காங்ன்னு கேட்க எடுத்த எடுப்பிலேயே ரிசப்பஷனில் இருந்தவர் "இது யாரு ஹோட்டல் தெரியுமா என்று குதிக்க ஆரம்பி்த்து விட்டார். விட்டார் பாருங்க ஒரு அறை " போன் எல்லாம் எடு்த்து வையுடா என்று சொல்ல எடுத்து வைத்து விட்டார். நேரே அந்த அறைக்கு சொல்ல நகரின் முக்கிய பணக்காரர்கள் எல்லாம் சீட்டாடி கொண்டிருந்தனர்.  இருந்த அத்தைனை பேர் முகத்திலும் கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ எதுவும் இல்லை வாங்க டி.எஸ்.பி சார் உங்காருங்க ஒரு கை போடலாம்ன்னு அசால்டா கேட்க ஆரம்பிச்சுட்டாங்க கேட்டவனுக்கு விட்டார் பாருங்க ஒரு அறை சர்வ நாடியும் ஒடுங்கி போய் உட்கார்ந்து விட்டார். எல்லாரும் ஒழுங்க ஒத்துழைச்சா டீசண்டா வெளிய போகலாம். இல்லைன்னா வேட்டிய உருவிட்டு கூட்டிட்டு போக வேண்டியது இருக்கும்னு சொல்ல அப்போதான் அவங்களுக்கு உறைச்சது. ஓ இவன் வேற மாதிரி ஆளுன்னு.

                   அப்புறம் அவங்க வைச்சுருந்த பணத்தை எல்லாம் எடுத்து ( சுமார் பத்து லட்சம் இருக்கும் ) நெம்பர் எழுதி கையெழுத்து போடச் சொல்லி அவங்க அத்தனை பேர் மொபைலையும் சுவிட்ச் ஆப்  பண்ணி அத்தனை பேரையும் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வந்தார். எஙகளையும் முன்னமே போனை சுவிட்ச் ஆப் பண்ண சொல்லிருந்தார்.

                    அதன் பின் யாரோ யாரோ டி.எஸ்.பி யை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்க ஒரு கட்டத்தில் தனது செல்போனை ஆப் செய்து விட்டார். பின்னர் அவரை விட நான்கு படிகள் மேலுள்ள ஒரு அதிகாரி காவல் நிலையத்திற்கு போனில் அழைத்து அவர்களை விட்டுவிடுமாறு சொல்ல இருவருக்கும் கடும் வாக்குவாதம் இறுதியில் அவர் சொன்னது. " என்னோட பேக் ரெடியா இருக்கு சார் எங்க டிரான்ஸ்பர் போட்டாலும் போவேன்  "


                      மற்றும் ஒரு சம்பவம் பஸ் ஸ்டாண்டில் போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்த ஒரு வக்கிலை ஒரு பெண் எஸ்.ஐ. அடித்து விட அது பெரும் பிரச்சினை ஆகி உள்ளுர் பார் கவுண்சில் முலம் அது காவல் துறைக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. அந்த பெண் எஸ்.ஐ. மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் செய்யாத போராட்டமே இல்லை என்னும் அளவிற்கு.  எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. காவல் துறையினரை நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டம் செய்ய அவர் நீதிபதிகளிடம் பேசி சிறையினுள்ளே நீதிபதிகளை வைத்து கைதிகளை சிறைக்குள் அனுமதிக்க வைத்தார். இரண்டு மாதங்களாக போராட்டம் நடந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை.தீபாவளி நெருங்க காசுக்கு சிங்கியடித்த வழக்கறிஞர்கள் வேறு வழியின்றி போராட்டத்தை கைவிட்டனர். அன்று அந்த நிலையில் வேறு ஒரு அதிகாரி இருந்திருந்தால் அந்த எஸ்.ஐ.யின் நிலைமை.


                     அதே போலதான் குற்றவாளிகளிடமும் மிக  ( மிக - புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். )  கடுமையாக நடந்து கொள்வார். ஒரு சின்ன சாம்பிள் ஒரு கைதி சொன்னது. சிறைக்குள் பேசிக் கொள்வார்களாம் " டேய் மாப்பிள அந்த ஊருக்கு மட்டும் போயிராத அந்த டி.எஸ்பி. இருக்காரு எதிர் காலத்துல உனக்கு கால் இருக்கும் ஆனா வேலை செய்யாது. கஸ்டடி ( நீதிமன்றத்தில் இருந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது. கைதிக்கு சிறு காயம் என்றாலும் நமக்கு வேலை போய்விடும் )  எடுத்து கால உடைச்சவான்டா பாத்துக்கோ.


                 பணியிலும் நேர்மையாக இருப்பார். யாராக இருந்தாலும் மரியாதையான பேச்சு. தற்போது வேறு மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்று பணிபுரிகிறார். இங்கிருந்து முன்று மாதத்திலேயே தென் மாவட்டத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். காரணம் அன்னைக்கு ஒருத்தனுக்கு விட்டாரே ஒரு அறை அவருடைய கைங்கரியம்

இன்னும் வரும்.......


....
நட்புடன்


10 comments:

kailash,hyderabad said...

very amazing.even in this time being,
such a personality !?.

kailash,hyderabad said...

Hai Sir,
when I was in Chennai ,I read and heard lot about Honest Ambigabathi ( he got three transfers in one day),
and
Thiripathi A.C.(he got Canada award for great plans and achievement).
write more about straight forward
personals.
while reading this we are not loose our confident about future Tamilnadu.

அன்புடன்-மணிகண்டன் said...

அனுபவத்தை அற்புதமாய் எழுதியிருக்கீங்க சார்.
அவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் நிறைய பேர் வேண்டும் சார், நமது நாட்டுக்கு...

Ranjit said...

We need more people like this gentle man !!!

கிரி said...

கட்ட பொம்மன் நீங்க பெரும்பாலும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில்லை ..இருந்தாலும் கேட்கிறேன் :-)

இப்போது இதைப்போல தைரியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை மாற்றல் மட்டும் தான் செய்ய முடியுமா! அல்லது பணியில் இருந்து நீக்க முடியுமா!

இதைப்போல அதிகாரிகளுடன் பணி புரிவது நேர்மையாக இருப்பவர்களுக்கு ரொம்ப சந்தோசமான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

நல்ல பதிவு. நேர்மையற்றவர்களின் சாம்ராஜ்யமாகிப் போய்விட்ட காவல் துறையில் இதைபோன்றோர் இருப்பது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது.

பகிர்வுக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு


தொடருங்கள்

Anonymous said...

Good work keep it up.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

தொடருங்கள்.

தமிழ். சரவணன் said...

அன்பிற்குரிய கட்டப்​பொம்மனுக்கு,

இத் தகவ​லை படித்து மிக மகிழ்சி அ​டைந்​தேன். இது​போல் ​நேர்​மையா இருப்பது குள்ளநரி கூட்டத்தில் மிகமிக கடினம். உங்கள் து​றையில் அற்புதமான மனிதர்களும், காக்கி உ​டை​யை மாட்டி மிரட்டி பி​ழைக்கும் ​கொடுர மிருகங்களும் அதிகம். இவர் உயர்நி​லையில் இருப்பதால் தப்பிவிட்டார் இது​வே சாதரண ​​போலீ​சோ அல்லது ஏட்டாக​வோ இருந்தால் ​நேர்​மையாக ​தைரியமாக தட்டிக்​கேட்டால் இன்​னேரம் ​வே​லைக்​கே ​வேட்டு​வைத்திருப்பார்கள். இவ​ரைப்​போல் அதிகாரிகள் ​பெருகிட ​வேண்டுகின்​றேன்.

இது​போல் அதிகாரிகள் ​ஊ​ரை ஏய்த்துப்பி​ழைக்கும் குள்ளநரிகூட்டத்தால் ​வெறுக்கப்பட்டாலும் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

அன்புடன்,

தமிழ். சரவணன்

featured-content