twitter
    Find out what I'm doing, Follow Me :)

வேலில போற ஓணாண

வேற என்ன வழக்கம் போல பணிச்சுமைதான். எழுத முடியவில்லை. வலைப்பூவிற்கு வந்து வாசித்து, பின்னுட்மிட்டு ஊக்கபடுத்திய அனைத்த வலைப்பதிவர்களுக்கும் நன்றி...

முதலில் நான் காவல் துறையில் கணிணி பிரிவில் பணிபுரிபவன். வலையுலக நண்பர்கள் நினைப்பது போல் நான் காவல் துறையில் அதிகாரியாய் பணிபுரிபவன் அல்ல. இதுவரை நான் அதிகாரி என்று எந்த பதிவிலும் சொல்லியதும் இல்லை.

நடக்காத ஒன்று நடந்தால் அதை கலியுகம் என்று சொல்வார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நிலையத்தில் நான் உட்பட முவர் மட்டுமே பணியில், ஒருவர் வாகன விபத்து தொடர்பாக அரசு மருத்துவமனை சென்றுவிட ஒருவர் ஒயர்லஸ் தொடர்புகளை கண்காணித்து கொண்டிருந்தார்.

அதிகாலை 0300 மணி இருக்கும் சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று கணிணியை சட்டவுன் செய்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் நான்கு பேர் வந்தனர். வந்தவர்கள் ஆய்வாளரை கேட்க அவர் விடுமுறையில் இருக்கிறார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் தாங்கள் சென்னையில் இருந்து வருவதாகவும், தனது அண்ணன் மகளை தனது தம்பி திருமணம் செய்ய ( அப்பா மகள் உறவு ??) கூட்டி வந்து விட்டதாகவும் வீட்டில் இருந்து வரும் பொழுது சுமார் 5 லட்சம் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும் தாங்கள் அவனது மொபைலின் டவரை கண்காணித்த போது எங்கள் காவல் நிலைய எல்லை உள்ள பகுதியின் டவர் காண்ப்பித்ததாகவும் இது தொடர்பாக நாங்கள் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துதாகவும் கூறினார்.

அவர் சொன்ன பகுதி நான் வசித்து வரும் பகுதியாகையால் சரி நானே உதவுகிறேன். என்று அவர்களை கூட்டிக் கொண்டு நான் வசித்து வரும் பகுதியில் உள்ள லாட்ஜில் சென்று விசாரிக்க, என்னுடைய கணி்ப்பு உண்மையானது. அவர் அந்த லாட்ஜில் தங்கிவிட்டு அன்றிரவு 0730 மணிக்கு காலி செய்து போய்விட்டனர்.

என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்க அன்று காலை முகூர்த்ததினம் என்ற நினைவு வரவே சரி அவர்களுடன் வந்திருந்த 6 பேரை அருகில் உள்ள இவ்வாறன திருமணங்கள் நடக்கும் கோவில்களுக்கும், திருமண பதிவு அலுவலங்களுக்கும் அனுப்பிவிட்டு சற்று தெலைவில் உள்ள கோவில்களுக்கு நானும் உடன் சென்றவர்களும் விசாரிக்க அப்படி திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்பதால் திரும்பி வந்து கொண்டிருந்தோம். வாகனத்தில் வரவர ஒரு யோசனை தோன்றியது. சரி காலி செய்து விட்டு போனவர்கள் அறையில் ஏதாவது ஒரு துண்டு சீட்டாவது விட்டு சென்றிருப்பார்கள் என்று மீண்டும் அதே லாட்ஜ்கு வந்து தேட ஒரு சில பீர் பாட்டில்களும் பிராந்தி பாட்டில்களும் மட்டுமே கிடந்தன.

என்ன செய்வது என்ற யோசனையில் அங்கிருந்த டி.வி. ரிமோட்டை பார்க்க ஒரு யோசனை தோன்றியது. பின் கீழே வந்து ரிசப்பஷனில் இருந்த மேனேஜரிடம் இந்த அறையை புக் செய்தவருக்கு போன் செய்து ரிமோட் உடைந்து விட்டதாகவும், மாற்றி தர அவரை வரவழைக்கும்படியும் அவரிடம் எனது மொபைல் நம்பரை கொடுத்து விட்டு வெளியே நின்று கொண்டிருந்தேன்.

ஒரு கால் மணி நேரம் இருக்கும் எனது மொபைலுக்கு ஒரு கால் வந்தது. " உங்கள சுத்தி போலீஸ் நிக்குது நீங்க லாட்ஜ்கு வரவேண்டாம் உங்களை பிடிச்சுடுவாங்க வராதீங்கனு " லாட்ஜ் மேனேஜர் அவனுக்கு போன் பண்றதா நெனச்சு எனக்கு போன் பண்ணிருக்கார். எனக்கு வந்ததே கோபம் லாட்ஜ் மேனேஜரை கண்படி தி்ட்டி விட்டேன். நான் திட்டி கொண்டிருக்க லாட்ஜில் ரும் போட்டு கொடுத்த நபர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் நான் காவல் துறையை சார்ந்தவன் என்பதை தெரிவித்து அவரை வெளியே கூட்டி வர பெண்ணை பெற்ற தகப்பன் தன் பெண்ணை பறி கொடுத்த தவிப்பில் அவனை நாலு அடி அடித்து விட்டார். நான் அவரை சத்தம் போட்டு அவனை காவல் நிலையம் கொண்டு வந்து உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்து விசாரித்த போது அவனும் கடத்தி வந்த பெண் மற்றும் ஆணுக்கு உறவினர் என்பது தெரிந்தது. அப்போது ஆய்வாளரிடம் அவன் தானும் அவர்கள் உறவினர் தான் என்றும் தானே சென்னை போய் பெண்ணையும் கடத்தி சென்ற ஆணையயும் வரவழைத்து ஒப்படைப்பதாகவும் சொன்னதின் பேரிலும் அவர்கள் உறவினராக இருந்ததின் பேரிலும் அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.

அவனும் சென்னை சென்று அந்த பெண்ணையும், திருமணம் திருமணம் செய்தவரையும் சென்னைக்கு வரவழைக்க அவர்கள் இருவரும் நாங்கள் மேஜர் என்றும் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் எடுத்து சென்ற பணம் மற்றும் நகைகளை கொடுத்து விடுவதாகவும் கூறி பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.


இதுவல்ல பிரச்சினை இப்போ எனக்கு ஆச்சு பாருங்க அதுதான் பிரச்சினை. அங்கிருந்து திரும்பி வந்தவன். நானும் சென்னையில் இருந்து வந்தவர்களும் அவனை கடுமையாக அடித்து விட்டதாகவும், சென்னையில் இருந்து வந்தவர்கள் தன்னை கடத்தி சென்றதாகவும் கடத்தி செல்ல நான் உதவியதாகவும் கூறி நான் பணிபுரியும் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அன்றைய நிலையில் எவர் வந்திருந்தாலு்ம் இந்த உதவியை செய்திருப்பபேன். என் வேலை இதுவல்ல என்று அன்றே போயிருந்தால் எனக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது. வழக்கின் முடிவில் என் பணிபுரியும் வேலை கூட போகலாம். நீங்கள் நினைக்கலாம் நான் காசு வாங்கிவிட்டு கூட இந்த வேலை செய்திருக்கலாம் என்று லஞ்சமாய் வாங்கும் காசு நம் இறுதி காலத்தில் மருத்துமனைக்கு மட்டுமே செலவாகும் என்று நினைப்பவன் நான். என் மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுபவன் நான்.

இவ்வாறான நிகழ்வுகளால் உண்மையாய் வேலை செய்பவர்கள் கூட நமக்கு ஏன் பிரச்சினை என்று விலகி போக ஆரம்பித்தால்..................


14 comments:

லவ்டேல் மேடி said...

// பின்னுட்மிட்டு ஊக்கபடுத்திய அனைத்த வலைப்பதிவர்களுக்கும் நன்றி //


அட... பரவால்ல... பரவால்ல ... அதுக்காக சரக்கு ட்ரீடெல்லாம் எதுக்கு மச்சி....!!!// நான் காவல் துறையில் கணிணி பிரிவில் பணிபுரிபவன். வலையுலக நண்பர்கள் நினைப்பது போல் நான் காவல் துறையில் அதிகாரியாய் பணிபுரிபவன் அல்ல ... //ஸ்ஸ்ஸ்ஸ் .. சாப்பாடா...... நல்ல வேல ... !! அவ்வளோதானா.......!!!!!

// ...... //


கதைக்கு ஏத்த டாப்பிக்குதானுங்க ....!! உங்குளுக்கு சனி பகவான் ... டாடா சுமோ எடுத்திகிட்டு மெட்ராசுல இருந்து மணிக்கு 600 கி.மீ வேகத்துல கெளம்பி வந்திருக்கு பாருங்க...!! கொடுமைதான்.....!!!!

Punnakku Moottai said...

ஐயா,

இன்று தான் உங்கள் பதிவை முதன்முதலில் பார்த்தேன். உங்களின் சமூக அக்கறை மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று. காவல்/பாதுகாப்பு படையில் சேரவேண்டி பல முறை முயன்று தோற்றவன் நான்.

'இப்போது வாங்கும் லஞ்சம் பிற்காலத்தின் மருத்துவ செலவிற்கு' என்பது மற்றவர்களுக்கு நெற்றியடி. எனக்கு காவல் துறையில் பிடிக்காதவொன்று, 24 மணி சேவை. எந்தவொரு மனிதனுக்கும் (மாட்டிற்கும் கூட) அதிகபட்சம் 12 மணி நேரத்திற்மேல் வேலை கூடாது என நினைப்பவன் நான். மனம், உடல், குடும்ப உறவு, பிள்ளை பாசம், மனைவி மோகம் மற்றும் பலவற்றை நீங்கள் இழக்கின்றீர்கள் என்பது மிகவும் உண்மை.

இப்படிக்கு,

புண்ணாக்குமூட்டை.

வடிவேலன் ஆர். said...

கவலை வேண்டாம் நண்பரே நீங்கள் மனசாட்சிப்படி நடந்துள்ளீர்கள் அதனால் உங்களுக்கு நியாயமே கிடைக்கும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அவர்களே முன்வந்து உங்கள் மீது போட்ட கேஸை திரும்ப பெறுவார்கள். சீக்கிரம் நல்ல தகவல் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி

ராஜ நடராஜன் said...

முதலில் கட்டபொம்மன் பதிவுலகுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்.(அல்லது நான் தான் கண்டுக்கலியோ!)

இரண்டாவது வலையுலகப் பெருசுக,சிறுசுக எல்லாம் பின்னூட்டப் பகுதிய இடுகை முடிவுக்கு கீழ் வைத்துத்தான் பழக்கம்.எலியும் பின்னூட்ட பகுதி எங்கே எங்கேன்னு தேடி இடுகைக்கு மேல இருக்குதுன்னு கண்டு பிடிச்சிருச்சு.

மூணாவது எனக்கு காவல்துறைன்னா நம்ம ஊர்லயும்,இங்கே குவைத்திலும் கூட அலர்ஜியும் பயமும்.உங்களை மாதிரி நிறைய பேர் இணையம்,மக்கள் அருகில் வருவது சமூகத்திற்கு நன்மை பயக்கும்.கூடவே அரசு துறை காவல்துறை கட்டமைப்புக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து லகானை மட்டும் கையில் பிடித்துக்கொள்வது ஆட்சியாளர்களுக்கு துணை செய்யும்.

மொத்த மதிப்பில் இருக்கும் வசதிகளில் காவல்துறை செயல்படுவது பாராட்டுக்குரியதுதான்.ஆனாலும் சமூக எதிர்வினைகள் தவிர்த்து காவல்துறை அமெரிக்கா,அங்கிருந்து கற்றுக்கொண்ட குவைத்தின் உள்துறை செயல்படும் முறை மாதிரி இந்தியாவுக்கும் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

திரும்ப வருகிறேன் வாசிக்க.நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

நண்பர் கட்டபொம்மன்
அருமையான சமூக விழிப்புணர்வு விஷயங்களை எழுதி வரும் தங்கள் வலையை இவ்வளவு நாள் பார்ராமல் போனேனே?
நல்ல பணி.
உங்களைபோல "COMPUTER SAVVY" கள் காவல் துறையில் இருப்பது நல்ல விஷயம்,சமூகத்திற்கு மேலும் நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.
என் கட்டுரையான
எதெல்லாம் எங்கே போய் முடியும் படித்து
எதாவது நடவடிக்கை எடுக்க உங்கள் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க முடியுமா என்று பாருங்கள். தொடர்ந்து நட்புக் கரம் கொடுப்போம்.

THANGAMANI said...

"இவ்வாறான நிகழ்வுகளால் உண்மையாய் வேலை செய்பவர்கள் கூட நமக்கு ஏன் பிரச்சினை என்று விலகி போக ஆரம்பித்தால்.................."
_____________________________________
உதவிக்கு போனாலும் பிரச்சனை.போகாவிட்டாலும் பிரச்சனை.
உண்மையே வெல்லும்.
வாழ்க வளமுடன்.

தமிழ். சரவணன் said...

ஆம் நல்லது செய்யப்போனா சில சமயம் நமக்கே ஆப்பு வந்துடும்... ரொம்ப எச்சரிக்கையா இருக்கனம் மனசுக்கூட்டத்துக்கிட்ட.,.,,

வாய்மையே வெல்லும் ஆனாஅதுக்குல்ல நொந்து நூடில்ஸ் அகிடுவோம்...

biskothupayal said...

கவலை வேண்டாம் நண்பரே நீங்கள் மனசாட்சிப்படி நடந்துள்ளீர்கள் அதனால் உங்களுக்கு நியாயமே கிடைக்கும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அவர்களே முன்வந்து உங்கள் மீது போட்ட கேஸை திரும்ப பெறுவார்கள்.

தமிழ்நெஞ்சம் said...

Super Quote sir

//
'இப்போது வாங்கும் லஞ்சம் பிற்காலத்தின் மருத்துவ செலவிற்கு'

Muniappan Pakkangal said...

Intha kalathula ippadi oru police aa,nijamave police thaanaa neenga.

குகன் said...

// நம் இறுதி காலத்தில் மருத்துமனைக்கு மட்டுமே செலவாகும் என்று நினைப்பவன் நான். என் மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுபவன் நான்.//

Good shot.. கட்டபொம்மன் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் நண்பா, மன்னிக்கவும் தாங்கள் எனக்கு அளித்த பின்னூட்டத்தை வெகு தாமதமாகவே பார்த்தேன். ஏனென்றால் அது என்னுடைய பழைய பதிவு. இது குறித்து நாம் விரிவாக பேசலாம். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள்,

புரட்சிக்கவி said...

கட்டபொம்மன் ! பாராட்டுக்கள். நல்லது செய்பவர்களை பிடித்து கொண்டு, உண்மையிலேயே காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் காவல்துறை ஏன் சகல துறைகளிலும் நடப்பது. இது அரசு இயந்திரம் (STATE) பொதுவான பண்பு. அரசு இயந்திரம் எப்போது ஒழிக்கப்படுதோ, அப்போதுதான் இந்தமாதிரி பிரச்சனைகளும் ஒழியும்

Vee said...

//லஞ்சமாய் வாங்கும் காசு நம் இறுதி காலத்தில் மருத்துமனைக்கு மட்டுமே செலவாகும் என்று நினைப்பவன் நான். என் மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுபவன் நான்.

எல்லோரும் இப்படி நினைத்தால் நன்றாக
இருக்கும்.

featured-content