twitter
    Find out what I'm doing, Follow Me :)

விபச்சாரம் என்னும் விஷத் தொழில்

விபச்சாரம் செய்வது சரியா ? ஒரினச்சேர்க்கையையே தற்போது சட்டப்பூர்வமாக்கலாமா என்ற கேள்வி உள்ள நிலையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கலாம் அல்லவா என்று ஒரு அனானனி பதிவர் கேட்டிருந்தார் அவருக்காகவே இந்த பதிவு

விபச்சாரம் இன்று நேற்று தோன்றியதல்ல உலகில் முதன் முதலில் தோன்றிய தொழில் என்று வேடிக்கையாக கூறப்படுவதை கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் "விலை மகளிர்", "பொது மகளிர்" என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுடைய தொழில் "விபச்சாரம்" என்பது சாஸ்திரங்களின் மூலம் குற்றமாகக் கருதப்பட்டாலும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தொழிலை நண்பர் சட்டப்பூர்வமாக்கலாமா ? என்று கேட்டிருந்தார்.

முதலில் விபச்சாரத்தை சட்டமாக்கினால் என்னவாகும். பகிரங்கமாக ஒரு வீட்டிலோ அல்லத ஒரு லாட்ஜிலோ நடக்கும். மாணவர்கள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க படிக்க வேண்டிய வயதில் வீட்டில் திருடியாவது விலைமகளிடம் செல்வார்கள். வேலைக்கு போகும் ஆண்கள் வீட்டீற்கு பணம் கொடுக்க மாட்டார்கள் இன்னிக்கு மார்கெட்டில் புதுசா எவள் வந்திருக்கிறாள் எவ்வளவு ரேட் என்று குடும்பத் தலைவர்கள் கணக்கு போடுவார்கள். விலைமகளிடம் இலவசமாய் பெற்ற எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லி நோயை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று வீட்டில் உள்ள மனைவிக்கும் பகிர்தளிப்பார்கள். அப்பனும் மகனும், அண்ணனும் தம்பியும் அங்கே சந்திக்கலாம்.

ஏன் டி.வில் விளம்பரம் கூட வரலாம். இன்று இந்த பிகர் வந்திருக்கிறது. முன் பதிவுக்கு அணுகவும் என்று இதை வீட்டு கூடத்தில் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்தபடி ரசிக்கலாம். பெண்கள் அரசே அனுமதித்துள்ளதால் நாளெல்லாம் ஏன் கஷ்டப்படவேண்டு்ம். தினமும் சில மணிநேரம் தானே என்று இத்தொழிக்கு கிளம்பி விட்டால்............

நாடு தாங்காது நண்பரே நாடு தாங்காது..... இன்று வெளிநாட்டினர் நம்மை பார்த்து வியக்கும் ஒரெ விஷயம், ஒருவனுக்கு ஒருத்தி எனும் நம் பண்பாடு, கலாச்சாரம் தான். பாலியல் தொழில் மட்டுதான் செய்வார்கள் கருதப்பட்ட திருநங்கைகளே தற்போது சிறு சிறு குடிசை தொழில்கள், வேலைகளுக்கு செல்வது என்று தங்கள் பாதையை மாற்றிக் கொண்டு வரும்போது விபச்சாரத்தை அங்கரிப்பது என்பது கொடுமையானது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராததது.

இன்று விபச்சாரத்தை சட்டப்பூர்வமாககினால் நாளை லஞ்சம் ( பாவம் வேண்டும் என்றா வாங்குகிறார்கள் குடும்ப கஷ்டம், அவர்கள் பிழைப்பிற்காக வாங்குறாங்க ) கொள்ளை ( அவன் கிட்ட இருந்தா ஏன் அடுத்தவங்க அடிக்கிறான். ) ரவுடியிஸம் ( என்ன இருந்தாலும் எதி்ர் கால எம்.எல்.ஏ, பாவம் எதிர் வீட்டுகாரன நாம அடிக்க முடியனாலும் அவன் அடிகிறான் இல்ல ) இவை எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம். இவற்றை எல்லாம் சட்ப்பூர்வமாக்கினால் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என்கிறீர்களா ? விபச்சாரத்தால் முதலில் பாதிக்கபடுவது ஆணும் அவரை சேர்ந்த குடும்பமும் தான்.

கைவிரல் காயம் என்றால் மருந்து போட்டு ஆறவைக்க வேண்டுமே தவிர கைவிரல் இருந்தால் தானே பிரச்சினை என்று வெட்டி விடக்கூடாது. இன்று விபச்சார தடுப்பு சட்டம் என்ற ஒன்று இரு்ப்பதால் தான். நீங்கள் போலீஸில் சிக்கி விடுவோமோ என்ற பயத்திலேயே விலைமகளிடம் செல்லாமல் இருக்கிறீர்கள். ( தனி மனித ஒழுக்கம் உள்ளவர்களை தவிர )

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எய்ட்ஸ் நோயால் பாதி்க்கப்பட்டவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் கொசு கடித்தா இந் நோய் வருகிறது. எல்லாம் இந்த விபச்சாரத்தினால்.

திருட்டும் ஒரு குற்றம்தான். திருடுபவன் தனது வயிற்று பசிக்காகவும், தனது தேவைகளுக்காவும் திருடுகிறான். திருடுவதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வதி்ல்லையோ அது போலத்தான். விபச்சாரமும்.

கட்டாயப்படுத்தி இத்தொழிக்கு வரும் பெண்கள் 10% என்றால் விருப்பத்துடன் பணத்துக்காக இத்தொழில் ஈடுபடும் பெண்கள் 90% (எனக்கு தெரிந்த வகையில் ) உழைப்பதற்கு ஆயிரம் தொழில்கள் உள்ளன. அவற்றை இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும்.

இது நான் டிரைனிங்ல இருந்த போது நடந்தது. எனக்கு தெரிந்த காவல் ஆய்வாளர் ஒருவர் இதே போல் ஒரு விபச்சார ரெய்டில் பல பெண்களை கைது செய்து நிலையத்திற்கு கொண்டு வந்தார். வந்தவர்களில் ஒரு பெண் தைரியமாக " எனக்குன்னு ஒரு தொழிலே வேலையோ இருந்தா நான் ஏன் சார் இந்த தொழிக்கு வரேன் " என்று கேட்க ஆய்வாளரோ என்ன நினைதார் என்று தெரிவில்லை. தனது பாக்கெட்டில் இருந்த 800 ருபாய் கொடுத்தார். இந்தா அதை வைச்சு ஏதோ தொழில் செஞ்சு பிழைச்கோ என்று கொடுத்தார். எனக்கோ எவன்டா இவன் பைத்தியகாரனா இருப்பான் போலன்னு நினைச்சு மனசுல வைச்சுக்க முடியாம அவர்கிட்டையே கேட்டுட்டேன் எதுக்கு சார் பணம் கொடுத்தீங்கன்னு. அவர் சொன்னார். " வந்தவ எல்லாம் பைன் எவ்வளவு வரும்ன்னுதான் கேட்டாளுக. ஆனா அந்த பொண்ணு பேசினப்ப ஏண்டா இந்த தொழில்ல இருக்கோம்கிற வெறுப்புதான் இருந்திச்சு அதான் ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுகிட்டும்ன்னு கொடுத்தேன்னார். பின்னால் அதையும் அப்பெண்ணையும் மறந்துவிட்டேன்.

பின்னர் ஒரு வருடம் இருக்கும் பணி தொடர்பாக சேலம் சென்ற போது ஒரு தம்மாவது அடிக்கலாம் என்று டீக்கடை பக்கம் ஒதுங்கினேன். தம்மை வாங்கிட்டு கல்லாவில் இருந்த பெண்ணை எங்கயோ பாத்துருக்கனே என்று யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பெண் கேட்டாள். நீங்க போலீசா ? ஆமா இது நான் இப்போ அடையாளம் தெரிந்து விட்டது. அன்று விபச்சார ரெய்டில் சிக்கி ஆய்வாளரிடம் பணம் பெற்ற பெண்தான்.

அந்த பெண் ஆய்வாளரிடம் வாங்கிய பணத்தில் சில மாதங்கள் காய்கறி வாங்கி தள்ளுவண்டியில் வியாபரம் செய்திருக்கிறார். பின்னர் கால்கள் ஒத்துழைக்க மறுக்கவே தற்போது டீக்கடை வைத்திருப்பதாக சொன்னார். அன்று எனக்க பைத்தியகாரனாய் தெரிந்த அந்த ஆய்வாளர் இப்போது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்த தெய்வமாக தெரிகிறார்.


எனவே அனானி நண்பரே என்று ஒரு பெண் தன்னந்தனியே தன் வாழ்க்கை திறனை உயர்த்தி இவ்வுலகில் வாழும் அளவிற்கு அவளை தயார் செய்கிறோமோ அன்றுதான் இத்தொழில் ஒழியும். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பது தன் தலையில் கொள்ளிகட்டையை வைத்து தானே சொரிஞ்சுகற மாதிரி

14 comments:

RR said...

சரியாக சொன்னீர்கள் கட்டபொம்மன். உதாரணத்துக்கு மது கடைகளை எடுத்து கொள்வோம். மதுவிலக்கு இருந்தால், இப்போ குடிக்கிற பாதி பேர் மதுவை தொட்டு கூட பார்த்திருக்க மாட்டார்கள்; சுலபமாக கிடைக்கிற ஒரு காரணத்தினால் பல பேர் இன்று குடிக்கு அடிமை ஆனவர்கள்.....

வண்ணத்துபூச்சியார் said...

அவசியமான பதிவு.


ஆனால் விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எந்த வித கோட்பாடுகளையும் உடைத்து தூர எறிந்து விடும்.

பெண்ணை போதை பொருளாக்கிய இந்த சமூகமும் கிளர்ச்சியலை தூண்டும் சினிமாவும் ஆற்றிய பெரும்பணிகள் சொல்லில் அடங்காது.


இருந்தாலும் விரைவில் பணம் ஈட்டவும், ஆடம்பரங்களுக்கு ஆசை பட்டு வலிய வந்து தொழிலில் ஈடுபடும் சிலரும் இதே சமூகத்தில் தான் உள்ளனர்.

இது போன்று பாலியல் தொழிலை பின்னணியாக கொண்ட பெண்களின்
இஸ்ரேல் சினிமா Or My Treasure.

படித்து பார்த்து கருத்தை சொல்லுங்கள்..

குப்பன்_யாஹூ said...

nice & useful post. Providing education at young age is the only solution to eradicate this problem.

Raja said...

வேலைக்கு போகும் ஆண்கள் வீட்டீற்கு பணம் கொடுக்க மாட்டார்கள் இன்னிக்கு மார்கெட்டில் புதுசா எவள் வந்திருக்கிறாள் எவ்வளவு ரேட் என்று குடும்பத் தலைவர்கள் கணக்கு போடுவார்கள்.//

Not really... People living in those countries made it legal behaving in this way??
Whether legal or illegal, those who interested or willing to go, they will go at any cost. But, legalize will be more controlled than illegal.

ஏன் டி.வில் விளம்பரம் கூட வரலாம். இன்று இந்த பிகர் வந்திருக்கிறது. முன் பதிவுக்கு அணுகவும் என்று இதை வீட்டு கூடத்தில் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்தபடி ரசிக்கலாம்.//

Alcohol and Cigarette are legalized, but do you see any advertisement in TVs?

Raja

தமிழ். சரவணன் said...

சென்னையில் நடந்த ஒரு உண்மைச்செய்தி

விபச்சார தடுப்பு போலிசார் திருந்தி வாழ்ந்த ஒரு முன்னால் விலைமகளை மிரட்டி பணம் பறிக்கயைில் ஜீனியர் விகடன் நிருபர்கள் உதவியுடன் தடுக்கப்பட்டு கமிஷ்னரிடம் மாட்டிக்கொண்டனர்...

800 ரூபாய் பணம் கொடுத்து விளக்கேற்றிய அந்த மனித தெய்வம் ஏங்கே, இது போல் பணம் தின்று பிழைக்கும் குள்ளநரிக்கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது

Thomas Ruban said...

அவசியமான பதிவு.


ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு"

Anonymous said...

Good Post Sir..

பாலா said...

இன்று ஓரின சேர்க்கையை அங்கீகரிப்பவர்கள், நாளை விபச்சாரத்தையும் அங்கீகரிக்கலாம். மேற்கத்திய நாடுகளே நம்நாட்டு கலாச்சராத்தை பாராட்டும்போது நாம் எதற்கு மேலைநாட்டு கலாச்சாரத்தை விரும்ப வேண்டும்? அருமையான கருத்து! அருமையான பதிவு!
வாழ்த்துக்கள்!

கிருபாகரன் said...

மன்னிக்க வேண்டும் . நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்படில் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்று நாம் வாழ்ந்தால் என் aids இல இரெண்டாவது இடத்தில உள்ளோம். வளர்ந்த நாடுகளில் எல்லாம் aids இன் தாக்கம் குறைவாகவே தன இருக்கிறதே.

மேலும், நம்முடைய நாட்டிலே பாம்பே இல விபச்சாரம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கபட்டுளது. அனால், பாம்பே தான் இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருக்கிறது..எனவே, விபச்சரதிற்கும் , சமூக முன்னேற்றத்துக்கும் தடை இல்லை.

சிகபாலன் said...

நம் நாட்டு கலாச்சாரம்,கலாச்சாரம், என்று சொல்லும் தாங்கல் சற்று தமிழர் வரலாற்றை புரட்டி பாரும்................

கதிர் said...

Salute to that Inspector

Anonymous said...

ரொம்ப நல்ல கருத்து.... விபசாரம் சட்டபூர்வமக்குவதை விட்டு செக்ஸ் கல்வியை சொல்லித்தரலாம்...இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Anonymous said...

//மாணவர்கள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க படிக்க வேண்டிய வயதில் வீட்டில் திருடியாவது விலைமகளிடம் செல்வார்கள். வேலைக்கு போகும் ஆண்கள் வீட்டீற்கு பணம் கொடுக்க மாட்டார்கள் இன்னிக்கு மார்கெட்டில் புதுசா எவள் வந்திருக்கிறாள் எவ்வளவு ரேட் என்று குடும்பத் தலைவர்கள் கணக்கு போடுவார்கள்.//

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.விபசாரம் சட்டபூர்வமாக்கப்பட்டால் ஆணுறை அணிவது சட்டமாக்கப்பட்டு aids குறையும்.அரசாங்கத்திற்கும் வருமானம், மற்ற படி கள்ளத் தனமாக பணம் கறப்போருக்கு பாதிப்பு வரும்.இன்று சிகரெட்டும் மதுவும் கடைகளில் கிடைக்க தான் செய்கிறது, மாணவர்களும், மற்ற எல்லோருமே வாங்கி சீரழிவதில்லை. கள்ளச்சாராயமா? டாஸ்மாக்கா?

ராஜ நடராஜன் said...

மாற்றுக்கருத்துக்கள் ஆச்சரியத்தை தருகிறது.முக்கியமாக ராஜா சொல்லும் ஆங்கில வாசகங்கள்.இந்தியன் அடுத்த நாட்டுக்குப் போகும்போது அந்த நாட்டு சட்டங்களை மதிப்பதில் தவறுவதில்லை.ஆனால் இந்தியாவுக்குள் அந்த கண்ணியம் எங்கே போகிறதென்று தெரியவில்லை.

//People living in those countries made it legal behaving in this way??//

Let's talk about our psyche.

//விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பது தன் தலையில் கொள்ளிகட்டையை வைத்து தானே சொரிஞ்சுகற மாதிரி.//

இந்த எழுத்தில் எனக்கும் உடன்பாடே.

featured-content