twitter
    Find out what I'm doing, Follow Me :)

மனித உருவில் ஒரு காமகொடுரன்
                 நண்பர்களுக்கு வணக்கம், வேலைப்பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை தமிழிஷ் முலம் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கிறேன்.


                புவனேஸ்வரி கைது, நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் கற்பு பற்றிய விவாதங்களை தவிர்த்து  கடந்த மாதங்களில் நீங்கள் செய்தி தாள்களில் ஒரு செய்தியை படித்திருக்கலாம். பெண் போலீஸ் ஜெயமணி  கற்பழித்து கொலை. கொலையாளிக்கு காவல் துறை வலை வீச்சு ( இந்த வார்த்தைய எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல ) 

                ஜெயமணி திருப்பூர் மாவட்டம். காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர். கடந்த மாதம் நடந்த அரசு விழாவிற்கு சென்றவர். கடத்தி கற்பழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார். வி.ஐ.பி. வருகையின் போது சாலை பகுதியில் பாதுகாப்பிற்கு நின்று சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்தவர் பணி முடித்து வீடு திரும்ப பேருந்துகளை கை காட்டி நிறுத்தியிருக்கிறார். ஆனால் எந்த பேருந்தும் நிறுத்தாமல் சென்று விட சாலையில்  வந்த ஒருவனிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவனும் ஏற்றிக் கொண்டு செல்ல ஆளில்லா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து கீறியுள்ளான். தப்பித்து ஓட முற்பட பெரிய கல்லை எடுத்து பின்னந்தலையில் அடித்திருக்கிறான்.

               நினைவிழந்த நிலையில் கிடந்த அவரை இரு முறை கற்பழித்து உள்ளான். நினைவு திரும்பிய அந்த பெண் போலீஸ் அவனை கெஞ்சியிருக்கிறாள். தன் குழந்தைகளை பார்க்காவாவது தன்னை உயிருடன் விட்டுவிடும்படி.

                   அந்த காம கொடுரன் உன்னை விட்டால் நீ என்னை காட்டி கொடுத்து விடுவாய் என்று சொல்லியே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். பின் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் அணிந்திருந்த  நகைகள் ஆகியவற்றை எடுத்து தப்பி விட்டான்.

                    பெண் போலீஸ்சின் கணவர் அவர் பணி முடித்து வராததால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்க அவர் பணி முடித்து போய்விட்டதாக காவல் நிலைத்தில் சொல்லப்பட்டது. அவரும் உறவினர் வீடுகளில் தேடிவிட்டு அடுத்த தனது மனைவி காணமல் போய்விட்டாக புகார் கொடுக்க புலண் விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டது. 

                    சம்பவம் நடந்த 18 நாட்கள் கழித்து அவரது உடல் அவர் பணி செய்த இடத்தில் இருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் சுடுகாட்டில் கண்டு எடுக்கப்பட்டது.  

                      கொலையாளியால் எடுக்கப்பட்ட செல்போனை கொண்டு கொலையாளியின் இருப்பிடம் கண்டுபிடித்து அவனை கைது செய்தது காவல் துறை. 

                      மேற்படி இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் அவனால் கொல்லப்பட்டவர்கள். ஐந்து பேர் அனைவரும் பெண்கள் இது வரை மொத்தம் 18 பேர் அதில் ஒருவர் மட்டுமே ஆண். 

                            இதில காமெடி என்னானா அவனை வந்து முகமுடி போட்டு கூட்டுட்டு போனாங்க.. ஏதோ முகத்த காமிச்சு கூட்டிட்டு போனாக்கூட நாலு பொண்ணுங்க பாத்து ஊஷாராவாங்க... 

                            அவனுடைய குறி தேசிய நெடுஞ்சாலையில சுமார் ஒரு கி.மீட்டருக்குள்ள ஆடு மேய்க்கும் தனியாக உள்ள பெண்கள் முதலில் கத்தியால் கழுத்தில் கீறுவது அப்புறம் அரை மயக்கத்தில் இருக்கும் அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பிவிடுவது. 59 வயசு கிழவிய கூட விட்டு வைக்கல.. 

                                 இனி என்னவாகும் வழக்கு நடக்கும். கலைஞர் அய்யா புண்ணியத்துல ஜெயில கறி எல்லாம் போடுறாங்களாம். நல்லா சாப்பிட்டு இருந்துட்டு. மேற்படி வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியே வந்து விடுவான். சொறிபுடுச்சன் கையி சும்மாருக்காதுகற கதையா மறுபடியும் ஆரம்பிச்சுடுவான். அப்படி அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும், மனித இனத்தை காக்க வந்த மனித உரிமை கழகங்கள் ( எத்தனை இருக்குனே தெரியல ) அவனை தூக்கில் போடக்கூடாது என்று ஆயிரம் போராட்டங்கள் நடத்துவாங்க. 
 
 
              சரி நீங்க சொல்லுங்க அவனுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம். ?


நட்புடன்
 

15 comments:

அப்பாவி முரு said...

தண்டனை கொஞ்சம் பழசுதான், ஆனா பவர் புல்...


கெண்டைக் கால் நரம்பை வெட்டிவிடுவது...

மனிசனுக்கு வழியும் இருக்காது, நடக்கவும் முடியாது.

வாழ்நாள் முழுதும் உக்காந்த இடத்துலயே தான் இருக்கணும்.

அப்பாவி முரு said...

//மனிசனுக்கு வழியும் இருக்காது, நடக்கவும் முடியாது// - திருத்தம்

மனிசனுக்கு வலியும் இருக்காது, நடக்கவும் முடியாது

வேலன். said...

இதில காமெடி என்னானா அவனை வந்து முகமுடி போட்டு கூட்டுட்டு போனாங்க.. ஏதோ முகத்த காமிச்சு கூட்டிட்டு போனாக்கூட நாலு பொண்ணுங்க பாத்து ஊஷாராவாங்க..


எனது மனதினிலும் அந்த ஆதங்கம் இருந்தது.திருடனையும் - கொலைகாரர்களையும் -லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் - ஏமாற்றும் நிதிநிறுவன அதிகாரிகளையும் ஏன் இவர்கள் முக்காடுபோட்டு அழைத்துசெல்கின்றார்களோ...தெரியவில்லை...அவர்கள் முகத்தை பிறர்அறிய செய்தாலாவது மற்றவர் உஷாராவர்கள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

குற்றவாளி போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடும்போது ,,,, "குறி பார்த்து குறியை சுட்டதில் காம கொடுரன் சாவு " அப்படின்னு தினத்தந்தியில செய்தி வந்தா நல்லாருக்கும் .... இன்னுமா அவன உயிரோட விட்டு வைத்திருக்கிறார்கள் ?

பித்தன் said...

தூக்கு எல்லாம் ரொம்ப பெரிய தண்டனை, அவனது உறுப்பை செயலிழக்கச் செய்துவிடுவதே நல்ல தீர்ப்பு....

வால்பையன் said...

//வேலைப்பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை//

யாராவது, நீங்க எழுதலைன்னா தற்கொலை பண்ணிக்குவென்னு சொன்னாங்களா தோழரே!

தமிழ். சரவணன் said...

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது என்ற பலமொழியை வைத்தே பல குற்றவாளிகள் குள்ளநரிக்கூட்டம் தப்பித்துக்கொண்டிருக்கனிறது...

சட்டத்தில பல பெரிசாளிகளும் க(கு)ள்ளநரிகளும் போகும் அளவிற்கு ஒட்டை ஒருக்கின்றது... இதில் மனிதஉரிமை என்ற போர்வையில் கொள்ளயைடிக்கும் கூட்டமும் பெருகி வருகின்றது..

இதற்கு உதாரணம் சமிபத்தில் ஒரு மனிதஉரிமை அமைப்பபை சேந்தவரை லஞ்சஒலிப்பு போலீசாரர் கைது செய்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஹுஸைனம்மா said...

என் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்.
அஹிம்சை ஆயுதம்!!

Mighty Maverick said...

நம்ம ஊரு பக்கம் எல்லாம் ஒரு சொலவடை புழங்கும்... காய் அடிக்கிறதுன்னு... அதாவது தெருவுல சுத்திக்கிட்டு இருக்கிற நாய்களுக்கெல்லாம் ஐப்பசி மாசம்வந்துச்சுன்னா, பிடிச்சு வைச்சு அதோட வாயை கட்டி விட்டு விறைப்பையை ஒருகட்டி மேல வச்சு, ஒரு கல்லை எடுத்து ஒரே அடி (நல்லா கவனிங்க... மயக்க ஊசிபோட்டுட்டு அதுக்கப்புறம் பண்ணுறதுக்கு பேரு அறுவை சிகிச்சை - அப்படிஇல்லன்னா அது காய் அடிக்கிறது)... அது கத்த முடியாம அழுதுகிட்டு ஊளைஇட்டு தன்னோட ஆண்மையை இழந்திடும்...

இது போன்ற ஜென்மங்கள் தெருவுல அவுத்து விட்ட நாய்ங்களை விட கேவலம்... அதுங்களுக்கு இது போன்ற தண்டனை கொடுத்தா அடுத்து ஒரு பய தன்சாமானை தூக்கிகிட்டு அலையமாட்டான்...

கிரி said...

அவனுக்கு "நறுக்" பண்ணுறது தான் ஒரே வழி!

பாண்டிச்சேரியில் ஒரு குடும்பத்து பெண்களை கற்பழித்து விட்டார்களாமே உண்மையா!

எதிர் வீட்டு ஜன்னல் said...

உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை... ஆணாதிக்கம் நிறைந்துள்ள இந்த உலகில் பெண்கள் எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது... திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல ஆண்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு.. இனியும் பெண்களை வெறும் சதைக்காக பார்க்கும் பார்வையை ஆண்கள் மாற்றி கொள்ள வேண்டும்.. கடல் அன்னை, இயற்கை தாய், பூமி மாதா, என்று பெண்களை மதிக்கும் இந்த காலத்திலும் பெண்களின் நிலை இப்படி இருப்பது வருத்தத்தை தருகிறது..

செந்தழல் ரவி said...

பதிவுக்கு நன்றி

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

அனைத்துப் படைப்புகலுமே அற்புதம் ! வாழ்த்துக்கள் !!

என்றும் அன்புடன்
சங்கர் ........................
shankarp071@gmail.com

http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!

Kaipulla said...

வால்பையன் said...
//வேலைப்பளுவின் காரணமாக அதிகம் எழுத முடியவில்லை//

யாராவது, நீங்க எழுதலைன்னா தற்கொலை பண்ணிக்குவென்னு சொன்னாங்களா தோழரே!

ivaru mattum illa,intha mari oru groupea irukku,ellarukum Sujatha Sirnu Nennapu...

யாத்திரிகன் said...

அது வால் பையன் இல்ல வெட்டி பய...

featured-content