twitter
    Find out what I'm doing, Follow Me :)

பேருந்தில் தொலைதூர பயணமா ? உஷார்

                   எனக்கு நானே வச்ச ஆப்பை நானே எடுக்கறதுக்குள்ள கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ( முந்தின பதிவை படிச்சவங்களுக்கு தெரியும்) அந்த பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. மனசு சரியில்லாததால வலைப்பக்கமும் வர முடியல. வலைப்பூவை படித்து பின்னுட்மிட்டவர்களுக்கு எனது நன்றிகள்.

                    கடந்த ஒரு மாதத்தில் என்னுடைய மகளுக்கு மொட்டை மற்றும் மருமகளுக்கு மொட்டை என்று சுமார் 6 முறை எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்ததால் இப்பதிவு.

                    முதல் முறை சென்ற போது எனக்கு முன்னிருக்கையில் ஒரு கல்லூரி மாணவர் தனது லேப்டாப் மற்றும் தனது உடைகள் அடங்கிய பையுடன் வந்தார்.  வண்டி கோவையில் இருந்து இரவு 0900 மணிக்கு கிளம்பியது ஏஸி பஸ் என்பதால் சிறிது நேரத்திலேயே துக்கம் வந்து விட்டது. நன்றாக நான் தூங்கி விட்டேன். சுமார் 1200 மணியிருக்கும் வண்டியில் ஏஸி அதிகமாயிருக்க தூக்கம் வராமல் எழுந்து டிரைவர் கேபின் போய் தம் அடித்து விட்டு வரலாம் போய் டிரைவர் கேபினில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ( அடிக்கடி அப்பேருந்தில் சென்று வருவதால் கண்டக்டரும் டிரைவரும் நல்ல பழக்கம் ) வண்டி பரவையை தாண்டி சென்று கொண்டிருந்தது. பஸ் பாத்திமா காலேஜ் அருகில் வரும் போது ஒருவன் தான் இறங்க வேண்டும் என்று கூற பஸ்ஐ நிறுத்தினார் டிரைவர் அவனும் இறங்கி போய்விட்டான்.

               பின் டிரைவருடன் பேசி கொண்டிருந்த போது அவன் அருப்புக் கோட்டைக்கு டிக்கெட் எடுத்ததாகவும் ஆனால் மதுரையிலேயே இறங்கி விட்டான் என்று சொன்ன போதே எனக்கு சந்தேகம் டிரைவரிடம் கேட்ட போது இல்ல சார் அவன் கொண்டு வந்த பையத்தான் கொண்டு போறான் என்றார். பஸ் மாட்டு தாவணியை நெருங்க அந்த கல்லூரி மாணவர் படபடப் போடு கண்டக்டரிடம் வந்து "சார் யாராவது என் முன் சீட்ல இருந்தவர் எங்கே இறங்கினார் " என்று கேட்க கண்டக்டர் அவன் பாத்திமா காலேஜ் அருகி்ல் இறங்கியதை சொன்னார்.

                 " சார் என்னோட லேப்டாப்ப காணோம் " என்று அந்த கல்லூரி மாணவன் சொன்ன போது என்னுடைய சந்தேகம் உறுதியானது. இவனிடம் லேப்டாப் உள்ளதை கவனித்து அதே பேருந்தில் அவனுடன் பயணித்திருக்கிறான். கல்லூரி மாணவன் உறங்கிய நெரத்தில் அவன் பையில் உள்ள லேப்டாப்பை தனது பைக்கு மாற்றி எடுத்து சென்றிருக்கிறான். அந்த கல்லூரி மாணவன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு  படிப்பதாகவும் தன் பெற்றோர்கள் தன்னை சிரமபட்டு படிக்க வைப்பதாகவும் கண்ணணீருடன் கூற சரி முடிந்த வரை முயற்சி செய்வோம் என்று  நானும் அக் கல்லூரி மாணவனும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலேயே இறங்கி கொண்டோம்.

                          அக் கல்லூரி மாணவனை பேருந்து நிலையத்திலேயே இருக்க சொல்லி லேப்டாப்பை எடுத்து சென்றவன் . கோவையை சேர்ந்தவனாக இருந்தால் மறுபடியும் கோவை செல்ல இங்கே வரலாம் என்று சொல்லி அக் கல்லூரி மாணவனை அங்கே அமர வைத்து விட்டு மதுரையில் உள்ள என்னுடை நண்பணை வரவழைத்து அவனுடைய வாகனத்திலேயே ஆரப்பாளையத்திலிருந்து மீண்டும் பரவை வரை சென்றேன் ஆளை காணோம். அங்கேயே மீண்டும் ஒரு தம் அடித்து வீட்டு மீண்டும் திரும்பிவர பாத்திமா காலேஜ் அருகே லேப்டாப்பை  அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.
                            என்னை பார்த்தால் ஓடிவிடுவான். என்று என் நண்பனுக்கு விஷயம் தெரியும் என்பதால் நான் நடந்து வருகிறேன். நீ அவனிடம் சென்று அட்ரஸ் கேள் முடிந்தால் பிடி என்று சொல்ல நண்பன் அருகில் சென்று விசாரிப்பது போல் விசாரித்து அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் நகராதபடி பிடித்து கொண்டான் பின் நானும் பிடித்து கொண்டு நாலு போடு போடவே தான் லேப்டாப் திருடியதை  அவன் ஒப்பு கொண்டான்.

                              பின்னர் அவனை ஆரப்பாளையம் புறக்காவல் நிலையம் கொண்டு சென்று அவனை ஒப்படைத்தோம். அங்கிருந்த தலைமை காவலர்  அவன் மீது வழக்கு பதிவு செய்ய அக் கல்லூரி மாணவனை புகார் எழுதி தரச் சொன்ன போது இடை மறித்த நான் " ஏட்டையா நீங்க சொல்றது சரிதான் எப்படியும் இவனுக்கு தண்டணை கிடைக்கும் ஆனா இந்த பையனேட படிப்பை நினைச்சு பாருங்க கேஸ் எப்படியு்ம் முணு வருசத்துக்கு நடக்கும் எத்தனை வாய்தா ? எத்தனை சாட்சிகள்  இந்த பையனுக்கு இரண்டு சம்மன் அல்லது முணு சம்மன் அனுப்புவாங்க அந்த டைம்ல அவனுக்கு செமஸ்டர் இருக்கலாம் கோர்ட்டில் ஆஜராக முடியாம போகலாம் ஆஜராகலன்னா வாரண்ட்தான். இது அவனுக்கு பைனல் இயர் வேலை கிடைச்சு வெளிநாடு போக கூட தடையாகலாம் அதனால இவனுக்கு வேற ஸ்டேசன்ல ஏதாவது கேஸ் இருந்தா அத கேட்டு போடுங்க என்று சொல்லி அவனுடைய லேப்டாப்பை வாங்கி கொடுத்து விட்டு என்னுடைய மொபைல் எண்ணையும் அந்த ஏட்டையாவிடம் கொடுத்து விட்டு வந்தேன்.இப்போது அந்த கல்லூரி மாணவன் எனக்கு ஒரு நண்பன்.


                  கவனத்தில் கொள்ளுங்கள் 
  1. பெரும்பாலும் ஏஸி வகை பேருந்துகளியே இவ்வகையாக திருட்டுக்கள் நடக்கிறது. ( நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்கள் பயணிப்பதால், விலையுயர்ந்த பொருட்கள் கிடைப்பதால் )
  2. ஏஸி ஓடுவதால் பேருந்தின் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நமக்கும் பேருந்து ஓடும் உணர்வே இருப்பதால் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நமக்கு விழிப்பு வருவதில்லை ( திருடனுக்கு வசதி ) 
  3. இரயிலில் பயணம் செய்யும் போது பயன் படுத்து  பெட்டிகளுக்கான சங்கிலி பூட்டை பயன்படுத்துங்கள்.
  4. பேருந்தில் ஓடும் திரைப்படத்தில் உள்ள கண் உங்கள் பொருட்களிலும் இருக்கட்டும்

அடுத்து ஒரு பேருந்து அனுபவத்தில் சந்திக்கிறேன்.

13 comments:

Anonymous said...

Really Interesting.............in that same situation...if there is any other police.....they will do advise only to that student, even they can insult that student like he was careless..........but you had a confident to catch that theif even it was midnight also you were going to filfill your personal duties.........

Really I appreciate you......

அப்பாவி முரு said...

ஐ சூப்பெர் டெக்னிக்...

RR said...

கலக்கீட்டிங்க கட்டபொம்மன். மாணவர் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கார்.....அவர் மட்டுமல்ல நாங்களும்..... நல்லா தகவல் கொடுத்து எங்களையும் எச்சரிக்கை செய்ததர்க்கு!

உங்கள போன்று நல்லா போலீஸ் இருக்கறதால தான் நாடு கொஞ்சம் நல்லா இருக்கு.

seenu said...

thank u for ur valuable news brother

irumbukuthirai said...

Thanks for sharing this information. This will be useful for people travelling. Pls post more frequently. I like the way you are sharing the information.

தமிழ். சரவணன் said...

இதுதாண்டா போலீஸ் என்பதை நிறுபித்துவிட்டிர்கள்... நீங்கள் கணிணிப்பிறவில் இருந்து சட்டம் ஒழங்க பிரிவிற்கு மாற்றப்பட்டால் பொதுமக்களுக்கு பாதுகாப்பும் பொதுமக்களுடைய பாராட்டும் உறுதி...

தொடரட்டும் தங்கள் பணி...

அன்புடன்,

தமிழ். சரவணன்

JesusJoseph said...

நீங்க போலீசா அதன் இப்படி.

good work
Joseph

லவ்டேல் மேடி said...

ஒகே மச்சி....! இனி அல்லார்ட் ஆயிருவோம்....!! அதுக்கின்னு எங்கள சந்தேக கேசுல உள்ள போட்டுறாத மச்சி....!!!

Anonymous said...

sir, i sent a mail to u. did u see that? i understand u was busy. please read and respond.

arun
9382635000

எதிர் வீட்டு ஜன்னல் said...

போங்க சார் நீங்க சரியான சிரிப்பு போலீசா இருப்பீங்க போல இருக்கு உங்களுக்கு மாமூல் வாங்கற பழக்கம் இல்லையா..... "நீங்க ரொம்ப நல்லவர்னு" யாரவது சொல்லிருப்பாங்கன்னு நெனைக்கறேன்... அதான் இப்படி.. ஆனா அந்த மாணவன காப்பதனதுக்கு ரொம்ப நன்றி தலீவா....

Anonymous said...

Hats off kattabomman.keep it up.neengal porukki ellai POLICE

Varadaradjalou .P said...

சூப்பர் அட்வெஞ்சர். அந்த மாணவருக்கு நீங்கள் செய்த உதவி காலத்தினால் செய்த உதவி.

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Forget Crawling Downloads Using NZB Files You Can Quickly Search High Quality Movies, Console Games, MP3 Singles, Software and Download Them @ Fast Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Usenet[/B][/URL]

featured-content