twitter
    Find out what I'm doing, Follow Me :)

நாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

புதிதாய் எழுத தொடங்கிய எனக்கு பின்னுட்டமிட்டு ஆதரவளித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல......

இந்திய அரசால் அரசின் நலதிட்டங்கள், அரசு துறை சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம். ஆனால் தவறானவர்களின் கையில் சிக்கி இந்த சட்டம் படும் பாடு. கேட்டால் கண்ணீர் வரும்.


என்னோடு பயிற்சியில் இருந்த காவல் நண்பர் ஒருவருடன் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் அனுப்பிய ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அது தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாகவும் உனக்கு வந்ததா என்று கேட்டார். நான் எனது மேஜை மீது வைத்திருந்த ஒரு கடித்தை காட்டினேன். சிரித்து விட்டார்.


அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :

  1. காவல் நிலையங்களின் முன்பு பிச்சை எடுப்பவர்கள் எத்தனை பேர். ? வயது வாரியாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர். ?
  2. காவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்களில் எத்தனை பேர் மது அருந்திவிட்டு வருகிறார்கள் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு ?
  3. காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு தண்டணை அடையும் குற்றவாளிகளி்ல் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், ? வயது வாரியாக
  4. காவல் துறையினருக்கு டீக்கடைகளில் இலவசமாக டீ வழங்கப்படுகிறா ? எந்தெந்த கடைகளில் ? அந்த கடை எத்தனை வருடமாக நடத்தப்டுகிறது.
இதே போன்று சுமார் 40 கேள்விகள் . இந்த கேள்விகள். அனைத்திற்கு பதில் பெற்று அந்த வழக்குரைஞர் ஒன்றும் சாதித்து விட போவதில்லை. காவல் துறையால் அவருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இக் கடித்தை அனுப்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

வரலாற்று புகழ் வாய்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன் முதலில் சுவீடன் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இச்சட்டம் கடந்த 2005 ஆண்டு கொண்டு வரப்பட்டது. பொது மக்கள் அரசு அலுவலரிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை அதிகாரபூர்வமாக பெற இச்சட்டம் வழி வகை செய்கிறது. வெளிப்படையான நிர்வாகம் மற்றும் லஞ்சத்தை கட்டுபடுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் 8 பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்ட்ட துறைகளன்றி மற்ற அனைத்து துறைகளும் மக்கள் கேட்கும் தகவலை அளித்தே ஆக வேண்டும்.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனக்கு தேவைப்படும் தகவலை அறிய ரு. 10 மட்டும் செலுத்தினால் போதும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனுப்பிய 30 நாட்களில் பதில் அனுப்பட வேண்டும் இல்லை என்றால் தாமதமாக்கப்படும் நாள் ஒன்றுக்கு ரு. 250 சம்மந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

அவர் ஒரு அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி. காவல் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர் ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் இதுவரை ஆயிரம் கேள்விகள் வரை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளதாகவும். தனக்கு இது 1001 வது பதில் என்றும் சொன்னார். நான் கேட்டேன் இதனால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் சொன்னார்.. தனக்கு இது தனக்கு பொழுது போக்கு என்றும் தனது ரிட்டயர்டு காலத்திற்கு பின் அரசு அலுவலர்களை கேள்வி கேட்க தனக்கு இது வாய்பாக பயன் படுத்தி கொள்கிறேன் என்றார். அதிகார போதை ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

தகவல் அறியும் சட்டத்தின் சிறப்பை ஒரெ வரியில் சொல்வதென்றால் உங்களுடயை குடும்ப அட்டைக்கு நீங்கள் ரேஷன் கடைக்கு சென்று கோதுமை அல்லது சர்க்கரை கேட்கறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த மாதம் இருப்பு இல்லை சொல்கிறார். அப்போது நீங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தலாம். ரு. பத்து செலவில் நீங்கள் தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் அவர்கள் அந்த மாதம் உங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை வழங்கப்பட்டுள்ளதா ? இல்லையா ? என்பதை தெரிவிப்பார்கள். அதன் முலம் அந்த கடைக்காரரின் மேல் நடவடிக்கை முடியும். ஒரு குடும்ப அட்டைக்கே என்றால் உங்கள் பகுதி உள்ளவர்கள் அனைவரும் இதே போல் நடவடிக்கை எடுத்தால் அந்தகடைக்காரர் பின் தவறு செய்ய துணிவாரா ?

இப்படிப்பட்ட சிறப்புமிக்க சட்டம் தான் இன்று தவறானவர்களின் கையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறது. நண்பர்களே இந்திய அரசு நமக்களித்துள்ள இந்த சிறப்பான சட்டத்தை உரிய முறையில் பயன் படுத்துங்கள். முன்றாம் பிறை படத்தில் கமலுடன் சிலுக்கு நடித்த போது சிலுக்குக்கு என்ன வயசு என்ற ரேன்ச்சில் திரைபட துறைக்கு கடிதம் அனுப்புவதை விட்டு விட்டு உங்கள் பகுதியில் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்கிறதா என்று அரசு துறைகளுக்கு கடிதம் அனுப்பி பதிலை பெற்று இச்சட்டம் பற்றி அறியாத ஊருக்கு உதவும் படிப்பறிவில்லாத நல் உள்ளங்களுக்கு உதவுங்கள்.

10 comments:

cheena (சீனா) said...

நண்ப

தகவல் அறியும் உரிமைச்சட்டம் படாத பாடு படுகிறது. எங்கேனும் ஒரு தட்டச்சரிடம் சென்றால் - ஒரு விண்ணப்பம் தயாராகி விடும். எதை வேண்டுமானாலும் கேட்கலாம் - தகவல் தந்தே ஆக வேண்டும் என்ற நினைப்பு - விண்ணப்பிப்பவரை விட தட்டச்சர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இதுதான் உண்மை நிலை

வெட்டிப்பயல் said...

நல்ல பதிவு...

என் பெயரில் யாராவது ஓட்டுப் போட்டுள்ளார்களா என இந்த சட்டத்தின் மூலம் அறிய முடியுமா?

அப்படி ஓட்டுப் போட்டிருந்தால் அந்த பூத்தில் போறுப்பேற்ற அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா?

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

கிரி said...

//இப்படிப்பட்ட சிறப்புமிக்க சட்டம் தான் இன்று தவறானவர்களின் கையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறது//

இவை மட்டுமல்ல பல விஷயங்கள்

sam said...

good

நையாண்டி நைனா said...

welcome machi...

சினேகிதி said...

உங்கட பக்கம் வந்தாச்சு...வலைப்பதிவு டிசைன் நல்லாயிருக்கு...பதிவு இன்னும் படிக்கவில்லை.

ஒப்பாரி said...

ஒரு சிலரின் கையில் சிக்கிச் சீரழிகிறது என்பதற்காக, இச்சட்டத்தை குறை சொல்ல இயலாது. எந்த ஒரு விஷயத்திலும், 2 முதல் 5 சகவிகிதம் குறைகள் இருக்கவே செய்யும். இச்சட்டத்தால், எத்தனை ஊழல்கள் வெளிவந்திருக்கிறது தெரியுமா ?

காவல்துறையிலிருந்து தான், பெரும்பாலான தகவல்கள் வருவதேயில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்தன, எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கேள்விக்கு மொத்தம் 5 என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தகவல் வந்திருக்கிறது. என்னிடம் உள்ள கணக்குப் படியே மொத்தம் மூன்று ஆண்டுகளில் 56 பேர் என்கவுண்ட்டர்களில் இறந்திருக்கிறார்கள்.

யாராவது ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு சட்டத்தை குறை சொல்வது சரியல்ல நண்பரே.

செந்தேள் said...

சார் இது வெறும் ஏட்டில் இருக்கிற சட்டத்துல ஒன்னு சேத்தியுருக்கங்க . 5 பைசாக்கு புரோஜினம் இல்ல சார். சும்மா கண்துடைப்புக்கு பதில் வருது..... எல்லாம் அனுபவ பட்டாச்சி

தமிழ். சரவணன் said...

ஐயா காவல் துறையிலூம் இது போல் மனிதரா? எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது... உங்கள் காவலர்களிடம் மாட்டிக்கொண்டு நொந்து நுடுல்ஸ் ஆனாவன்... தங்களைப்போல் படித்தவர்கள் இந்த புனித தொழிலுக்கு வந்தால்... நாடு விரைவில. சுபிட்டம் அடையும்... நீங்கள் மிக உயர்ந்த நிலைநோக்கி செல்ல வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் பணி

featured-content