twitter
    Find out what I'm doing, Follow Me :)

விநாயக சதூர்த்தி மக்கள்(?) விழா

 
            வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எனது பதிவுகளை படித்து பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தங்கள் பதிவுகளை படித்து வந்தாலும் பின்னுட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்


             நண்பர் தமிழன்  அவர்களுக்கு எனது நன்றிகள் அவர் எனக்கு முதன் முதலாக ஒரு விருதினை அளித்திருக்கிறார். நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்றாலும் அவரது அன்பிற்காக ஏற்று கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


             இப்பதிவை படிப்பவர்களுக்கு  ஒன்றை கூற விரும்புகிறேன். நான் முழு கடவுள் பக்தி கொண்டவன். இப்பதிவு உண்மையிலேயே கடவுள் மீது பக்தி கொண்டவர்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல


             விநாயக சதூர்த்தி விழா தமிழ்நாட்டுக்கு வந்து ( இந்து இயக்கங்களால் கொண்டாடப்படும் ) இந்த ஆண்டோடு 19 ஆண்டுகளாகிவிட்டன. மக்களால் பக்தியோடு கொண்டாடப்படும் இவ்விழா தற்போது இந்து இயக்கங்களால் முஸ்லிம் இனத்தவருக்கு எதிராக கொண்டாடப்படும் ஒரு விழாவாக்கப்பட்டுவிட்டது.


            வருடா  வருடம்  காவல் துறையினரால் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு பாதுகாப்பளிக்கபடும் ஒரு விழா இந்த விநாயக சதூர்த்தி விழா. விழா வின் ஒரு பகுதியான விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதையில் ஒரு  பள்ளிவாசல் கூட இல்லையெனில் ஊர்வல பாதையை மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பர். சரியாக பள்ளி வாசல் அருகில் வந்தவுடன் அதிர வைக்கும் கோஷங்கள், மேள தாளங்கள் என அரை மணி நேரமாவது அந்த இடத்தில் விநாயகரை வைத்து கொண்டாடவில்லை என்றால் இந்து இயக்கங்களுக்கு தூக்கம் வராது.


              சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் இத்தனை வருடங்கள் நடந்த விநாயகர் சதூத்தி ஊர்வலத்தில் காவல் துறை தடை விதித்திருப்பதால் ஒரு முறை கூட ஐஸ் அவுஸ் பகுதியை தாண்டியதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு மட்டுமே உண்மையான உணர்வுள்ளவர்கள் ஊர்வலம் நடத்த எவ்விதமாவது முயற்சி செய்து தடையை நீக்க முயற்சி செய்திருப்பார்கள். வழக்கம் போல இந்து முண்ணனி தலைவர் இராம. கோபாலன் தடையை மீற முயற்ச்சிக்க வழக்கம்: போல கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுவார். இன்று வரை அது தான் நடந்து வருகிறது. கைது செய்தால் ஐந்து வருடம் சிறை தண்டணை என்றால் ஒருவர் கூட தடையை மீறி ஊர்வலம் செல்ல மாட்டார்கள்.


                           இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதெல்லாம் பழங்கதை தற்போது விநாயகர் சிலை 5 அடி முதல் 18 அடி  வரை வைக்கப்படுகிறது. முதலில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு வந்ததால் அவ் விநாயர்கள் சிலையை கொண்டு போய் ஆற்றிலோ அல்லது கடலிலே போட்டால் மட்டும் போதும் அது தானாக கரைந்து விடும் தற்போது நடப்பது என்ன அனைத்து விநாயகர் சிலைகளும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ஸில் செய்யபடுகிறது அதை உடைக்க அந்த இயக்கத் தொண்டர்கள் செய்யும் காரியம் விநாயகர் நேரில் கண்டால் கண்ணீர் வி்ட்டிருப்பார்.                            திருப்பூரில் இவ்வருடம் பரபரப்பிற்காக ஈழ விநாயகர் சிலை வைப்பதாக இந்து இயக்கங்களால் செய்தி பரப்பட்டுவிட  காவல் துறைக்கு இன்னும் தூக்கம் தொலைந்து போனது. ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக இச் சிலைகள் வைக்கப்படுவதாக இந்து இயக்கங்கள் கூறினாலும், இது வரை இந்து இயக்கங்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ஆளியாற்றிலும், அவினாசி அருகேவும் ஈழ தமிழர் நிவாரண முகாம்கள் உள்ளன. இது வரை அங்குள்ள மக்களுக்கு ஒரு வேளை உணவளித்திருப்பார்களா ?                            முழுக்க  முழுக்க இந்து இயக்கங்களால் பப்ளிசிட்டி காக கொண்டாடபடும் விழாவாக விநாயக சதூர்த்தி மாறி விட்டது. நான் பார்த்த சில சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் பின்னால் உட்கார்ந்து மது அருந்தும் கொடுமையும் நடந்தது.

                             கடந்த முன்று நாட்களாக மொத்தம் 363 சிலைகள் இந்து இயக்கங்ககள்ளால் வைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த போலிஸார் 32 பேர் மட்டுமே ( மற்ற பணிகள் போக ) இவர்கள் அனைவரும் கடந்த முன்று நாட்களாக தூங்கவும் இல்லை. நான் இப்பதிவை எழதும் இந்நாளில் (25.08.09) மதியம் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.                              ஊர்வலத்தில் 13 வயது பையன் முதல் அனைவரும் புல் போதை விநாயகருக்கு பூஜை செய்தவர் வரை கடந்த வருடங்கள் சென்ற ஊர்வலபாதையிலேயே இவ்வருடமும் நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட பள்ளி வாசல் அருகில் வரும் போது அங்கிருந்த முஸ்லீ்ம்கள் தங்கள் பள்ளிவாசல் அருகே ஊர்வலம் வருவதை தடுக்க இந்து இயக்ககளை சேர்ந்தவர்கள் அங்கேயே சாலை மறியல் செய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எவ்வளவு கேட்டு கொண்டும் இருதரப்பினரும் ஒத்து போகவில்லை.


                            இந்நிலையில் பள்ளிவாசலில் இருந்து ஒரு கல் காவல் துறையினரது மீது வீசப்பட காவல் துறையை சேர்ந்த பலருக்கும் காயம். உடனடியாக  லத்தி சார்ஜ் செய்ய கூட்டம் கலைந்து ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் நகரத்தின் பல பகுதிகளில் கல் வீச்சு, வாகன உடைப்பு என தற்போது பதட்டமாகவே உள்ளது.

                              இந்நிலைக்கு யார் காரணம் இரு தரப்பினருக்கும் இடையே கலகம் ஏற்படுத்தி அதில் குளிர் காயும் மதத் தலைவர்கள் மட்டுமெ காரணம். ஒன்றை நினைத்து பாருங்கள் பள்ளி வாசலில் எதற்கு கற்கள் ? ஆக முஸ்லீம்களும் ஒரு வித எதிர்ப்பு மனப்பான்மையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். வருடம் ஒரு நாள் இந்துக்களால் நடத்தப்படும் விழா சரி ஊர்வலம் போகட்டும் என்ற மனப்பான்மை அவர்களுக்கு இருந்திருந்தால் இப்பிரச்சினையே வந்திருக்காது.                                உங்கள் அனைவருக்குமே முஸ்லீம் இன நண்பர்கள் உண்டு இது வரை அவர்களை யாராவது எதிரியாக நினைத்து பார்த்திருக்கிறீர்களா. பார்க்கவும் மாட்டீர்கள் பார்க்கவும் முடியாது. இதே போலவே முஸ்லீம் நண்பர்களும்.....

                                விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவமும் இருந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் அவ்வாறு இல்லையெனில் இப்பிரச்சினை ஒரு நீ்ங்காத ஒரு பிரச்சினையாக மட்டுமே இருக்கும்.


                      தினமலரில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. சுட்டி இது போன்ற நிகழ்வுகளால் மட்டுமே இரு மதத்தினருக்கும் ஒன்றுமை ஏற்படுமே தவிர மதத்தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு செயல்பட்டால்..... ரஜினி சொன்ன மாதிரி "தமிழ் நாட்ட அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது. "நன்றி மீண்டு்ம் ஒரு பதிவில் சந்திக்கிறேன்..........

                       

5 comments:

Muniappan Pakkangal said...

Annaachi Pilayaar kumbiduravangalum niraya irukkaanga,neenga solra pothai onnu rendu thaan,athuvum ella edathulayum ullathu thaan.Itz a procession for religion which is new to Tamilagam.Religious fanatics are on both sides,itz them who create problem.At madurai,we have Muslims applying santhanam to Hindus On Vaihasi Visaham.

லோகு said...

வணக்கம் சார்... உங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்..

**********

மதப்பற்றுக்கும், மத வெறிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பவர்கள் செய்யும் செயல் இது. எல்லா மதங்களும் அதை பின்பற்றும் மனிதர்களை நல்வழி படுத்தவே தோன்றினவே ஒழிய மற்ற மதத்தை தாழ்த்தவோ, அழிக்கவோ அல்ல..

மத இயக்கங்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவை தத்தம் மதத்தின் பெருமையை, தொன்மையை இளம் சந்ததியினருக்கு போதிக்க வேண்டும்.. ஆனால் அதை விடுத்து மற்ற மதங்கள் மீது, துவேசத்தை வளர்ப்பதை தான் கொள்கையாக கொண்டுள்ளனர்.

இரும்புக்குதிரை said...

I totally agree with your comments and feelings. I was also a supporter of such groups years back. I am happy to say that I am able to think and take my positions now and hope that everyone gets to think before saying / doing anything that can blow up the situation.

தமிழன் said...

//விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவமும் இருந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும்.//

சரியான வார்த்தை. மக்கள் யாரும் இதில் கலவரம் செய்வதாக தெரியவில்லை. மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் இரு தரப்பினரும்தான் இந்த வேலையை செய்து வருகின்றனர்.

தமிழ். சரவணன் said...

ஆமாம் உண்மைதான்.. ஊரைக்கொளுத்தி குளிர்காயும் கூட்டம் பல சேர்ந்து கொண்டு நாக வேலையில் ஈடுபடுகின்றது..

"மயிறு வளர்ரது நாலதான் கோயிலுக்கு மொட்டையடிக்கிறான் இல்லாட்டி மொட்டை யடிபானா?" பெரியாரின் கேள்வி யிது.. இதையெல்லாம் பின்பற்றினால் என்இந்த பல பணவிரயம்... அதற்கிடாக இல்லதவற்களுக்கு கொடுத்துஉதவலாம்..

காவல் துறை பணிஎன்பது "மத்தளம்" போல் இரண்டு பக்கமும் அடிவாங்கும். இந்த குமுரளில்தான் சில சமயம் அப்பாவி மாட்டினால் சட்டினியாக்கிவிடுகின்றனர்...

featured-content