twitter
    Find out what I'm doing, Follow Me :)

விபத்து எனும் எமன்

கடுமையான பணியின் காரணமாக எழுத இயலவில்லை. வலைப்பூவிற்கு வந்து வாசித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்........

சமீபத்தில் கோவை மாவட்டம் பல்லடம் அருகே ஒரு விபத்தை காண நேரிட்டது. வீடியோ சுட்டி. ஒரு மணல் ஏற்றப்பட்ட லாரியில் முதலில் ஒரு டெம்போ டிராவலர் வேன் மோத அந்த முன்புறம் வழியாக லாரி ஏறி வேனின் பின்புறம் வந்து அதற்கடு்த்து வந்து கொண்டிருந்த ஒரு டாடா இண்டிகா காரில் மோதி நின்றது. இதில் பலியானவர்கள் டெம்போ டிராவலர் வேனில் மாப்பிள்ளை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் மற்றும் டாடா இண்டிகா காரில் சென்ற 2 பேர் ஆக மொத்தம் 14 பேர்

மதுரை அருப்புக்கோட்டை சாலையில் ஒரு தனியார் பஸ் டிரைவர் பஸ்ஸில் உள்ள டி.வி.டி பிளையரில் பாடலை மாற்றுவதற்காக பின்னால் திரும்பி பாடலை மாற்றிய போது எதிரே வந்த டாடா ஏஸ் வண்டியில் மோத கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்த 22 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

இவைகள் எல்லாம் சிறு சிறு உதா"ரணங்கள்" இன்று ரோடு நன்றாக இருக்கிறது என்பதனால் 90கிமி. 100 கி.மி வேகம் எல்லாம் சாதாரணமாகிவிட்டது. அந்த அளவிற்கு ரோடு இருக்கிறதா என்பது தான். கேள்வி.

உதாரணமாக தங்க நாற்கர சாலையை எடுத்துக்கொள்ளுங்கள் சில இடங்களில் மட்டுமே பணி முடிக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் பணிகள் பாதி முடிக்கப்பட்டும் முடிக்கப்படாமலும் உள்ளன. ரோடு நன்றாக உள்ளது என்று அதி வேகத்தில் வரும் ஒரு வாகன ஓட்டி தீடீரென்று மற்றுபாதையில் செல்லவும் என்ற போர்டு வந்தால் அவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியுமா ? சில இடங்களில் பள்ளங்கள் தோண்டியதுடன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.

நம் மக்கள் சாதாரண சாலையை கடப்பது போலவே தங்க நாற்கர சாலையும் கடக்கிறார்கள் சாதாரண சாலையில் சுமார் 80கி.மி வேகத்தில் வரும் வாகனம் தங்க நாற்கர சாலையில் சுமார் 90கி.மி. முதல் 110 கி.மி. வேகத்தில் வருகிறது. வழக்கம் போல் சாலையை கடக்கும் மக்கள் வாகனம் தூரத்தில் தான் வருகிறது என்று கடக்கிறார்கள் வாகனத்தின் வேகம் தெரிவதில்லை. விளைவு மரணம்.

நம் நாட்டில் வாகனங்களுக்கு ஏற்ற சாலைகள் இல்லை என்பது என் கருத்து. விளம்பரங்களில் வரும் வாகனங்களின் விளம்பரங்களில் வேகத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதற்க்கேற்ற சாலைகள் இல்லை என்பதுதான் உண்மை.

மேற்கண்ட விபத்துக்களை ஏற்படுத்திய வாகன ஓட்டுனர்கள் அதிகப்பட்சம் 15 நாட்கள் சிறையில் இருப்பார். மீறினால் 500 அல்லது 1000 ருபாய் அபராதம் செலுத்திவிட்டு போய்விடுவார்.

என்னடா காவல் துறையில் வேலை செஞ்சுட்டு இவனே இப்படி சொல்றனே நினைக்கறீங்களா ? வேற என்ன சொல்ல நம் நாட்டு சட்டம் அப்படி இப்போ புதுசா ஒன்னு கண்டுபிடிச்சுருக்காங்க விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து. அடடே பரவாயில்யேன்னு நீங்க நினைக்கலாம். இதுல என்ன காமெடி தெரியுமா ? புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் விருதுநகரில் விபத்தை ஏற்படுத்துறார்ன்னு வைச்சுக்குவோம். அவரோட ஓட்டு உரிமத்தை ரத்து செய்ய உள்ளுர் காவல் துறையினர் விருது நகர் ஆர்.டி.ஓ க்கு ஒரு கடிதம் கொடுப்பாங்க விருது நகர் ஆர்.டி.ஓ அதை ரத்து செய்ய புதுக்கோட்டை ஆர்டிஓக்கு ஒரு கடிதம் அனுப்புவார். இதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஆகும். அதற்கிடையில் நம்ம டிரைவர் தன் சொந்த ஊரான புதுக் கோட்டைக்கு போய் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார் இந்த மாதி என்னுடய டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சு போச்சு சமுகம் கண்டுபிடிச்சு தரனும்ன்னு. அங்க உள்ள போலீசாருக்கு இவன் விபத்து ஏற்படுத்துனது எப்படி தெரியும். உடனே ஒரு சர்டிபிக்கேட் கொடுப்பாங்க நம்ம டிரைவரோட லைசென்ச கண்டுபிடிக்க முடிலன்னு உடனே நம்ம டிரைவர் அந்த சர்டிப்பிக்ட்ட கொண்டு போய் ஆர்.டி.ஓ கிட்ட கொடுத்த உடனே புது லைசன்ஸ் கொடுத்துடுவாங்க.

முதலில் நம் நாட்டு சட்டங்கள் மாறணும். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலே குற்றங்கள் குறைந்துவிடும். அரசு அலுவலங்கள் ஆன்லைன் செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஆனால் விருதுநகரில் விபத்து ஏற்படுத்திய டிரைவர் புதுகோட்டையில் லைசென்ஸ் வாங்க முடியாது. விருது நகரில் விபத்து ஏற்படுத்திய டிரைவர் தன்னுடைய லைசென்ஸ் காணவில்லை என்று புதுக்கோட்டையில் புகார் கொடுக்க முடியாது.

இவைகளுக்கெல்லாம் மேலாக தனி மனிதன் திருந்த வேண்டும் தன்னை நம்பி தன் குடும்பம் இருக்கிறது. தன்னை நம்பி பயணம் செய்கிறார்கள் என்ற நினைவு பேருந்து மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள் நினைக்க வேண்டும் .இப்போதெல்லாம் அரசு பேருந்து டிரைவர்கள் கூட ஒரு கையில் செல்போன் மறு கையில் ஸ்டியரிங் என்று பார்க்க முடிகிறது. நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. ( ஏனென்றால் வாகனங்களை குறுக்கே நிறுத்திவிட்டு போலீஸ் அஜாரகம் ஓழிக, வேலை நிறுத்தம் என்று இறங்கிவிட்டால் எங்களுக்குதான் ஆப்பு )

முடிவாக வேகம் உங்களுக்கு உற்சாகம், திரில் போன்றவற்றை அளிக்கலாம் ஆனால் உங்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் நிலை ........................................................ கொடுமையானது இந்த உலகம் நினைவில் வைத்திருங்கள்11 comments:

Anonymous said...

முதலில் என் வலைப்பதிவுக்கு வந்து படித்ததற்கு நன்றி அய்யா.. உங்க வலைப்பதிவை பொறுமையாக படித்துவிட்டு பிறகு கமென்ட் சொல்கிறேன் :)

Anonymous said...

EXCELLENT ARTICLE...
FINAL MESSAGE ABOUT E-GOVERMENT
IMPORTRANCE IS GOOD...
KEEP WRITING SIR,
SYED RAHMAN
KSA

Kanthimathi said...

மிக முக்கியமான பதிவு.
சிறுவயது முதல் வாகன ஒட்டுதலை பார்த்துக்கொண்டிருந்தாலும் இம்முறை இந்தியா வந்தபொழுது கண்நோட்டமே வித்தியாசமாகத் தெரிந்தது. யாரும் எந்த திருப்பத்திலும் பொறுமையாக நின்று செல்வதாகத் தெரியவில்லை. புகுந்து வளைந்து எவ்வாறேனும் சென்றிட வேண்டும் என்ற முடிவோடு செல்கிறார்கள்.

இதில் ஹோர்ன் சத்தம் வேற காதை பிய்க்கிறது. சில நெறிகள் நீங்கள் கூறியது போல் விரைவில் வரைமுறைப்படுத்துவது மிக அவசியம். தற்க்காலிகமாக போனிலேயோ, ஃபாக்ஸ்லேயோ இவ்வாறான லைசென்ஸ் கான்சலை உரிய டிப்பார்ட்மேன்ட்க்கு தெரியப்படுத்தலாமே.

moulefrite said...

I amm very glad to here this from a police man.but sorry rules and briberie will never change in India, until than
your advices are never heared by anybody.

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல தேவையான பதிவு.

நன்றி.

நாடோடிப் பையன் said...

Nice post.
As a law enforcer, what are some of the techniques you have developed over these years to avoid traffic accidents?

தமிழ். சரவணன் said...

//என்னடா காவல் துறையில் வேலை செஞ்சுட்டு இவனே இப்படி சொல்றனே நினைக்கறீங்களா ?//


காவல் துறையிலூம் இது போல் ஆளா!? கட்டுரை அருமை தொடரட்டும் தங்கள் பணி...

தமிழ். சரவணன் said...

Message Sent
Sent to

sp_coimbatore@yahoo.com
copcoimbatorecity@gmail.com
kattapomman@gmail.com
tnpolice@tn.nic.in
collrcbe@tn.nic.in


அன்புமிக்க அதிகாரிகளே!

கோவை காவல் துறையில் பணியாற்றும் ஒரு காவல் துறை அதிகாரியின் வலைபூ பக்கம்...

http://kattapomman.blogspot.com/2009/05/blog-post.html

இதில் பயனுள்ள தகவல்கள் காவலர்களின் உண்மை நிலை மற்றும் சாலைபாதுப்பு பற்றி கட்டுரைகள் அணைத்தும் அருமை வாய்பிருந்தால் படித்து மகிழவும்

என்னைப்போல் பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அளவிற்கு அதிகமான சந்தோசத்தையும் ஏற்படுத்துகின்றது

கோடான கோடி வாழ்த்துக்கள் இந்த காவல்துறை அதிகாரிக்கு,

தொடரட்டும் தங்கள் பணி! மேன் மேலூம் சிறக்க இயற்கை தாயை பிராத்திக்கின்றேன்...

அன்புடன்,

தமிழ். சரவணன்

Anonymous said...

வணக்கம் அய்யா,

காவல்துறை என்றாலே மக்களை பற்றி கவலை படாமல் மாமுலை மட்டுமே பார்பவர்கள் என்று தவறான எண்ணத்துடன் இருந்த என்னை போல பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது உங்கள் blog. நம் மக்களுக்கு நீதியும், நியாமும் கிடைக்க உங்களை போலே stationukku ஒருத்தர் இருந்தாலே போதும். விபத்துகளுக்கு முக்கிய காரணமே ஓட்டுனரிடம் விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் என்பது என் தாழ்மையான கருத்து. அய்யா எனக்கு ஒரு சந்தேகம், இந்த விபசார அழகிகளை கைது செய்வது சரியா. (ஏன்ன ஓரின சேர்க்கையே ok பண்ண போறாங்க)
அவங்க ஏதோ தன குடும்ப கஷ்டம் தீர இதுல மாட்டிகிரங்க அவங்கள போய் கைது செய்வது சரியா. கொஞ்சம் தெளிவுபடுத்தவும்

புரட்சிக்கவி said...

இதுவும் ஒரு மக்கள் நலன் சார்ந்த பதிவு. வாழ்த்துக்கள் !!!. அரசு அலுவலகங்கள் ஆண்லைன் செய்யப்பட வேண்டும். இது ஒன்றுதான் நீங்கள் சொல்கின்ற புகாருக்கு தீர்வு. மற்றபடி தனிமனிதர்கள் திருந்த வேண்டும் என்பதெல்லாம் நடக்காத காரியம்

Anonymous said...

அருமை அய்யா,
காவல் துறை உங்கள் நண்பன் என நிருபித்து விட்டீர்கள்..
காவல் துறையயை கேலி செய்யும் சினிமாத்துறையில் உள்ள சிலர் தாங்களின் பதிவை படித்தால் நல்லது..
நன்றி..
G.ராம்..

featured-content