twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஒரு அமைச்சரின் காரின் விலை கூடாவா பெறாது ? ஒரு காவலனின் உயிர்

                          இன்னைக்கு போலீஸ்காரன் நிலைமை இதுதான் ஒரு அமைச்சரின் காரின் விலை கூடவா பெறாது ? ஒரு காவலனின் உயிர்

 நன்றி. http://www.tutyonline.com/news/view/2/3625/1263006793.shtml

ஆம்புலன்ஸிற்காக காத்திருந்த 20 நிமிட‌ங்கள்: அமைச்ச‌ர்க‌ளை சாடும் அமைப்புக‌ள்!
January 8, 2010, 8:13 PM


சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை 20 நிமிட‌ங்க‌ள் முன்ன‌தாக‌ ம‌ருத்துவ‌ ம‌னைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க‌லாம் என சம்பவ இடத்தில் இருந்த‌ அமைச்ச‌ர்க‌ளை பல்வேறு தொலைக்காட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சப்.இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வெற்றிவேல் (42). நேற்று கோதைசேரி பகுதியில் இலவச வேட்டி சேலை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்திற்கும் பின்னர் ஒரு வழக்கு தொடர்பாக அம்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்து விட்டு மதியம் 2.45 மணிக்கு பைக்கில் ஆழ்வார்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஆம்பூர் அருகே ஆழ்வார்குறிச்சி ஆற்றுப்பாலத்தை கடந்து வந்த போது அங்கு புதரில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல், வெற்றிவேல் மீது திடீரென வெடிகுண்டுகளை வீசியது.

இதில் அவரது வலது கால் சிதைந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பல், வெற்றிவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கழுத்தில் வெட்டுப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அந்த வழியாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கடையநல்லூர் மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக அம்பையிலிருந்து காரில் வந்தனர். இதைப்பார்த்த கும்பல் பைக்குகளை போட்டு விட்டு தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு  ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.அப்போது உட‌ன‌டியாக‌ அவ‌ரை அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாக‌ன‌த்திலோ அல்ல‌து பாதுகாப்பு போலீசாரின் வாக‌ன‌த்திலோ கொண்டு செல்லாம‌ல் ஆம்புல‌ன்சை எதிர்பார்த்து சுமார் 20 நிமிட‌ங்க‌ள் காத்திருந்த‌ன‌ர். சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் காலில் குண்ட‌டி ப‌ட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த‌ போதும் எழுந்திருக்க‌ முயற்சி செய்துள்ளார்.

சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை 20 நிமிட‌ங்க‌ள் முன்ன‌தாக‌ ம‌ருத்துவ‌ ம‌னைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க‌லாம்.இந்த தங்கமான நேரத்தை (Golden Hour) வீணடிக்காமல்  உடனடியாக அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாக‌ன‌த்தில்  சப்.இன்ஸ்பெக்டரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார்  என‌ என்.டி.டிவி. செய்தியாள‌ர் சாம் டேனிய‌ல் தெரிவித்துள்ளார்.• • • • கண்ணீருடன் • • • • • •

13 comments:

பிரபாகர் said...

கொஞ்சமும் மனித நேயமில்லாத செயல்... உயிரின் மதிப்பை அறியாத பாதகர்கள்...

பிரபாகர்.

கோடங்கி said...

திரைபடத்தில் காட்டுவது போலவே அமைந்துள்ளது...
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்ற வசனத்தை சொல்ல தோன்றுகிறது..

கிரி said...

:-(

sibi said...

ENTHA EMANTHA MAKKAL ERUKUM VARAI ENTHA KODURANGAL THODARUM......
THUNGIKONDU ERUKUM MAKKAL VILIKKA MATTARKAL ....ENTHA ARASIYAL VATHIKALUM THIRUNTHA MATTARGAL

sibi said...

ANTHA EDATHIL ANTHA ARASIYAL VATHIYIN MAKANO ELLA URAVINARIN MAKANO ERUNTHAL EPPADI THAN PARTHU KONDU ERUPANGALA......

sibi said...

KOLAIYA THADUKA MUDIYATHA KOLAIKAL

கவிப்ரியன்~ராஜஷேகர். ~RA~ said...

"காட்டுமிராண்டித்தனமான அறியாமையில் கிடந்த ஆதிமனிதரைப் பெரிதும் ஆட்கொண்டதன் விளைவாக ஈவு, இரக்கமற்ற முறையில் கௌரவத்திற்குரிய
அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்"

Mohan said...

மிக பொறூமையாக சுமார் அரை மணி நேரம் நடந்தவகைகளை படம் எடுத்தவர்/கள்

மனிதாபமானவர்கள். உயீர் காக்க துடித்திர்ப்பது தெரிகிற்து.

ஒரு கூட்டம் வெட்டியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது

அமைச்சர் செய்யட்டும் என்று சும்மா இருந்துவிட்டனர். எது ;உண்மை

அவரவர் பங்க்குக்கு என்ன செய்தனர்.


போலிசு உயர் அதிகாரி நடு ரோட்டில் வெட்டப்பட்டுகிடக்கிறார். அரிவாள், குண்டு

வாகனம் என பார்த்தால் தீவிரவாதிகள் செயல் என பயம் வரும்.

அனால் பாதுகாப்போடு வந்த அமைச்சர் விரைந்து செயல் பட்டிருக்கலாம்

எல்லாரும் ஈரக்கம்ற்றவர்களாகவே தெரிகிறார்கள்

குப்பன்.யாஹூ said...

Like all others You too just watched Englsih TV channels and written this post.

The SI was almost 95% died and there were unused bombs were there. So there was a possibility that of someone gone near to his bike they would have also died. In that case the casualities will be more than 1.

So the 1st priority is to remove the unused bombs. then to save the SI.

They acted reasonably.

தமிழன் said...

mr.kattapomman,

please see this article about this issue, when you are free.

http://sethiyathope.blogspot.com/2010/01/blog-post_10.html

rkajendran2 said...

யோவ் கட்டபொம்மா....அந்தபோலீசு அதிகாரி சாவதை மற்ற (உங்க) போலீசுகாரர்களும் வேடிக்கை தானே பார்த்தார்கள்.......லஞ்சம் வாங்கிக் கொண்டு வாழ்வதை விட திருடி கொண்டு வாழ்வதே மேல்....
முதலில் நீங்கள் (போலீசு) எல்லாம் ஒழுங்கான மனிதராக வாழுங்கள்....பிறகு அடுத்தவர்களைப் பற்றி பேசுங்கள்....
== கஜேந்திரன்

rkajendran2 said...

நாட்டில் எந்த விதமான அச்சம்இன்றி தப்பு செய்வதில் முதலாவது இடம் போலீசுக்கே... இரண்டாவது இடம் பிற அரசுஅதிகாரிகள்... முன்றாம் இடம் அரசியல்வாதிகளுக்கு....
தவறு செய்வர்களுக்கெல்லாம் விதி இப்படித்தான் அமையுமோ.... தெரியவில்லை....
முடிந்தால் உங்கள் சக போலீசுக்காரர்களை நியாயமாக, நோ்மையாக நடக்கச் சொல்லுங்கள்......
நடந்த நிகழ்வுகளை கண்டு என் மனமும் வருந்துகிறது. ஒப்பாரி வைப்பதைவிட நீங்கள் (போலீசுக்காரர்கள் அனைவரும்) நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்... செய்த தர்மம் தலை காக்கும்.....

தமிழ். சரவணன் said...

இதில் ​​கொடு​மை, ​கொ​லைகூலிகளுக்கு திட்டத்​தை ​போட்டுக்​கொடுத்தது ஒரு காவலர் என்பது வருந்தத்தக்கது.
இந்த ​கொடுர ​கொ​லைக்கு மூலக்காரணம், ஒரு ​பெண் மற்றும் வரதட்ச​ணை​கொடு​மை சட்டம்

featured-content