twitter
    Find out what I'm doing, Follow Me :)

விபத்து + அரசு இயந்திரம் + மருத்துவ மனை கொள்ளைகள்

                    பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். விபத்தினால் பாதிக்கப்பட்டதால் வலையுலகத்திற்கு வந்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் பணிக்கு திரும்பவில்லை. வீட்டில் தான் வாசம். 

                      இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது நண்பரின் திருமணத்திற்கு கோவில்பட்டி செல்வதற்காக நானும் எனது நண்பரும் காரில் கிளம்பினோம் முன்பே  என்னுடன் பணிபுரியும் உதவி ஆய்வாளரும் அவருக்கு நண்பர் என்பதால் அவரும் வருகிறேன் என்று சொன்னதால் அவரையும் அழைத்துக்கு கொண்டு மதியம் கிளம்பினோம். கார் குண்டடம் அருகே சென்று கொண்டிருக்கும் போது விபத்திற்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வேன் தீடீரென பிரேக் போட பின்னால் சென்று கொண்டிருந்த எங்கள் வண்டி வழுக்கி போய் வேனின் பின்னால் மோதியது இதில் இடதுபுறம் அமர்ந்திருந்த எனக்கு முகத்தில் பலத்த அடி மயக்கமாகிவிட்டேன், நிறைய இரத்தம் போய் கொண்டிருந்தது. ஒரு கால் மணி நேரம் கழித்து என் நண்பருக்கு நினைவு வர காப்பாற்ற உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை ( இத்தனைக்கும் அது ஒரு பஸ் ஸ்டாப் ) மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வாகனங்களை நிறுத்தி பார்த்திருக்கிறார் ஒரு வாகனமும் நிறுத்தவில்லை. இறுதியில் ஒரு கார்காரர் நிறுத்தி ஏற்றிகொள்ள தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள்.

                          எனது  நண்பர்  அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்ய சொல்ல முதலுதவி செய்வதற்கு 100 ருபாய்,  கன்னத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெட்டுகாயத்திற்கு தையல் போட்டார்கள். ( மரத்துப் போவதற்கு ஒரு ஊசி கூட போடாமல் ) செருப்பு தைக்கும் தொழிலாளி கூட சிறப்பாக செய்திருப்பான் வேலையை. பின் சலைன் பாட்டில் வாங்க வேண்டும் என்று ஒரு 1000 ருபாய் எல்லாம் முடிந்து அரசு ஆம்புலன்ஸிலேயே பயணம் கோவைக்கு. 

                             வண்டி பாதி தூரம் சென்றதும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினார். சார் டீசலுக்கு காசு என்று கேட்க அங்கே ஒரு 1500 + 500 ருபாய் ( டிரைவருக்கு 500 ஆம் ) வேற வழி கொடுத்ததுக்கு அப்புறம்தான் வண்டியை எடுத்தான். இதில் சரக்கு + ஒரு கையில் பீடி வேறு. சரி நமக்கு எமன் எடுக்காம விட்ட உயிர இவன்தான் எடுப்பான் போலன்னு நினைச்சுட்டு ஆம்புலன்ஸ்ல படுத்திருந்திருதேன். 


                        கோவையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.  உள்ளே கொண்டு சென்றதும் போட்டிருந்த டிரைஸ் எல்லாம் கிழித்து எடுத்தார்கள். முகத்தில் தான் அடி ஆனால் உடல் முழுவதும் உள்ள முடியை எடுத்தார்கள். எடுத்து........... ஓரமா படுக்க வச்சுட்டங்க.  இது எடுக்குடான்னு படுத்துகிட்டே யோசிச்சேன்.  திருப்பதி மாதிரி பாதி முடியை செரச்சுட்டு மீதி முடிய அப்புறம் எடுப்பார்கள் அது போல இவன் வேற மருத்துவமனைக்கு போயிடுவான்னு நெனச்சு செஞ்சுடாங்க போலன்னு படுத்திருந்தேன். 


                               விபத்து ஏற்பட்டு கொண்டு வந்தும் சுமார் 0300 மணி நேரம் கழித்து எனது ஆபீஸில் இருந்து எவ்வளவு செலவானாலும் பார்த்து கொள்கிறோம் என்று என் உயர் அதிகாரிகள் சொன்ன பின்னரே. அந்த மருத்து மனையில் எனக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தார்கள் என்பதை விட கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள் என்பதே சரி.
                          

                                 யுரின் ல இருந்து சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், இப்ப உள்ள லேட்டஸ்ட் எதுவோ அதுவரைக்கும் உள்ள டெஸட்கள். தோல் ல இருந்து முளை வரைக்கும் உள்ள டாக்டர்கள் அத்தனை போரையும் பாத்தாச்சு.  அரசு மருத்துவமனையில் போடப்பட்ட தவறான தையலால் ஒரு ஆப்ரேஷன், முகத்தில் எலும்புகள் உடைந்து போனதால் ஒரு ஆப்ரேஷன்  என இரண்டு ஆப்ரேஷன்கள் செய்து இப்போதான் கொஞ்சம் சரியாகி இருக்கிறது. 
 

இது எல்லாம் சரி இப்ப எனக்கு என்ன சந்தேகம்ன்னா ? 



இன்சூரன்ஸ் :- 

                  காவல் துறையில் பணியில் உள்ளவர்களுக்காக அரசால் வழங்கப்படும் இன்சூரன்ஸ் அட்டைய பாத்தாலே தனியார் மருத்துவ மனையில் சிரிக்கிராங்க. தோல் சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு இதை அட்டையை ஏத்துக்க மாட்டாங்களாம் ? விபத்துன்னா தோல் கிழியாதா ? ( இதை விடக் கொடுமை  காசுக்காக  எனக்கு அடிப்பட்ட  ஒரே இடத்தில் எனக்கு இரண்டு ஆப்ரேஷன்களாக செய்தார்கள் ஒன்று தோலுக்கு மற்றொன்று எலும்புக்கு.  ( எலும்புக்கு மட்டும் செலவு 60000 /- கிளைம் ஆனது 35000/- ) என்ன கணக்குன்னு தெரியல


அரசு மருத்துவமனை :-  

                 இது வரை எந்த மருத்துவமனைக்கும் சென்றதில்லை அதிகபட்சம் காய்ச்சல் வரும் வந்தால் பிரதீப்  மெடிக்கல்ல மாத்திரை வாங்கி தின்னுட்டு தூங்கினா அடுத்த நாள் காய்ச்சல் சரியாகிடும். மருத்துவ மனைக்கு யாராவது அனுமதிக்கப்பட்டிருந்தால் போய் பார்ப்பதோடு சரி. இது தான் முதல் அனுபவம் அடிப்பட்டு முதலுதவிக்கு வந்திருக்கானோ எல்லாம் கிடையாது.  
" ஆக்ஸிடென்டா முஞசிய திருப்பு ரெம்ப கிளிஞ்சுருக்கே மரத்து போற ஊசி ஸ்டாக் இல்ல தாங்குவயா "  என்னை கேட்கவெல்லாம் இல்லை எந் நிலையில் படுத்திருந்தோனே அதே நிலையில் படுக்க வைத்து தையல் போட்டார்கள். சலைன் பாட்டில், வாகனத்தில் கொண்டு செல்ல அனைத்துக்கும் லஞ்சம். லஞ்சம் அனைத்து துறைகளிலும் இருந்தாலும் மனிதன் உயிருடன் விளையாடுவது மருத்துவ துறையில் தான் அன்று நாங்கள் காசு இல்லாதவர்களாக இருந்திருந்தால் ........



                        கடைசியா ஒன்னு என் கூட வேலை செய்யற எஸ்.ஐ.  கூட வந்தார்ன்னு சொன்னன் இல்ல அவர் விபத்து ஏற்பட்டதும். வண்டியில இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைச்சுட்டு  அடுத்த பஸ்ஸ பிடிச்சு கல்யாணத்துக்கு போனவர்தான் இன்னை வரைக்கும் எனக்கு போன் பண்ணி எப்படியிருக்கன்னு கூட கேட்கல டிபார்ட்மெட்லயோ இப்படியிருந்தா நான் என்னத்த சொல்றது. 


நட்புடன்






                          







8 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் நண்பா.

thiru said...

Wish you a speedy recovery, dear Friend,
Prayers & Best wishes,
Thiru

Anonymous said...

Welcome back Mr.kattapomman,
wish you speedy recovery...
"For police officer thay asking "SOMETHINGS" means plz. think about common people....
by
syed KSA

THANGA MANI said...

விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.வாழ்க வளமுடன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விரைவில் குணமடைய பிராத்திக்கிறோம்.

வாழ்க வளமுடன்.

snegan said...

அண்ணா போலிஸ் அதிகாரியான உங்களுக்கு இந்த நிலைமையா! ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க சென்னையில் இருந்திங்கனா நேரில் என் ஆறுதலை தெறியபடுத்த ஆசை நீங்கள் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் உங்கள் உடல் நலம் பற்றி விபரத்தை பதிவாக போடவும் மேலும் தேவையில்லாத widget களை நீக்கவும் உங்களது மின் அஞ்சல் முகவரி தெறிவிக்கவும்

rkajendran2 said...

நானும் நீங்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

geethappriyan said...

மிகவும் வருந்துகிறேன் நண்பரே,
இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன், பழையபடி நீங்கள் பணிக்கு திரும்புவீர்கள்,உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.
படித்தபின்னர் அரசு எந்திரமி மீது கோபமும் வேதனையுமே மிஞ்சியது

featured-content