twitter
    Find out what I'm doing, Follow Me :)

அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்


அலுவலக வேலை காரணமாக எழுத முடியவில்லை பின்னுட்டம் அளித்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.....

இன்று நம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மொபைல்.........



கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் செய்தி தாளில் ஒரு செய்தியை படித்தருப்பீர்கள். சில வக்கிரம் எண்ணம் கொண்டவர்கள். தன்னுடன் பழகிய, படித்த, பணி புரிந்த பெண்களை வக்கிரமாக மொபைல் போனில் படம் பிடித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அது பரவி சம்பந்தப்பட்ட சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவமும் நடந்ததது.

இது போன்ற சம்பவம் எனது காவல் நிலையத்திலும் நடந்ததால் இந்த பதிவை எழுதுகிறேன். கடந்த சில நாட்களுக்குமுன்பு இரவு பணி செய்து கொண்டிருந்த போது ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒருவன் சந்தேகப்படும்படி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக சக அலுவலர் அழைத்து வந்தார். அவரை சோதனையி்ட்ட போது அவர் வைத்திருந்த போன் விலை உயர்ந்ததாக இருக்க சரி பார்க்கலாம் என்று அந்த போனை நோண்டி கொண்டிருந்தேன். அதில் சில வீடியோக்களும் இருக்க பார்த்தால் அத்தனையும் குடும்ப பெண்கள். வீடு கூட்டும் போது, துவைக்கும் போது உடை மாற்றும் போது, குளிக்கும் போது இதை விடக் கொடுமை ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டும் போது அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தது.

பிறகு அவனை அழைத்து "உரிய" முறையில் விசாரிக்க அவர்கள் தன் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என்றும் தான் விளையாட்டாய் எடுத்ததாகவும் கூறினான். பிறகு அடுத்த நாள் காலை வரை வைத்திருந்து அவனது தந்தைக்கு போன் செய்து வரச் சொல்லி, வீடியோவில் சம்மந்தப்பட்டவர்களையும் வரச் சொல்லி இது குறித்து கூற அவர்கள் அனைவரும் அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தங்களின் வீட்டருகே பல வருடங்களாக குடியிருப்பதாகவும் சிறு வயதிலிருந்தே அவனை தெரியும் என்பதால் தாங்கள் அவனை சந்தேக படவில்லை என்றும் புகார் அளித்தால் தங்கள் பெயரும் கெட்டுவிடும் என்று கூறியதால் அவனது தந்தையை அழைத்து எச்சரித்து எனக்கு தெரிந்த மொபைல் கடையில் அவனது மொபைல் ஐ கொடுத்து பிளாஷ் செய்து அவனது மெமரி கார்டை அவர்கள் முன்னிலையிலேயே உடைத்து. விட்டேன்.

பெண்களுக்கு : உங்கள் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உங்களை அரைகுறை ஆடையுடன் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம் ( விளையாட்டாக இருந்தாலும் கூட ) ஏனென்றால் தோழி என்றும் உங்களுக்கு தோழியாக இருக்க போவதில்லை சின்னப்பிரச்சினை வந்தாலும் உங்களின் நிலை ?

இன்னொரு பிரச்சினை பெண்களுக்கு ( ஆண்களுக்கும் கூட ) வரும் மொபைல் அழைப்புகள் முடிந்தவரை உங்களுக்கு தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால் அட்டன் செய்ய வேண்டாம். இரண்டு முறை முன்று முறை அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள ஆண் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கொடுத்து பேச செய்யுங்கள் தெரிந்தவர்கள் என்றால் வாங்கி பேசுங்கள்.

மற்றொன்று நீங்கள் உங்கள் காதலனிடமே அல்லது காதலியிடமோ ( அல்லது மற்றவரிடமோ) மொபைலில் பேசும் எதிர் முனை பீப்... பீப்...பீப்... என்ற ஒலி கேட்கிறதா என்று பாருங்கள் அப்படி ஒரு ஒலி கேட்டால் உங்கள் பேச்சுக்கள் ரெக்கார்டு செய்யப்படுகிறது என்று அர்த்தம். முடிந்தவரை அப்போதே உங்கள் தொடர்பை துண்டியுங்கள்.

பேசும் போது சரி தெரியாதவர்களிடமிருந்து எஸ்எம்.எஸ் வந்தால் ? கண்டு கொள்ளாதீர்கள். திரும்ப நீங்கள் Who are You ? / Who is This ? / Your Name Pls என்று எஸ்எம்.எஸ் அனுப்ப ஆரம்பித்தால் அங்கு ஆரம்பிக்கும் சனி. எஸ்எம்.எஸ் அனுப்பியவன் உங்களின் பதிலால் உற்ச்சாகமாகி உங்களிடம் பேச்சை வளர்ப்பான். உங்களிடம் உரிய பதில் இல்லை என்றால் மறுபடி எஸ்எம்.எஸ் வராது. அப்படி மீறி எஸ்எம்.எஸ் ஓ தேவையில்லாத அழைப்புகள் வந்தால் தாராளமாக உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ( தமிழ் நாடு காவல் நிலைய தொலைபேசி எண்கள் )

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காவல் துறைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. தாராளமாக புகார் தெரிவிக்கலாம். உங்களை பாதிக்கும் என்றால் உங்களை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைப்பார்கள். எங்களுக்கும் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் உண்டு.

மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்க :

  1. பெண்கள் முடிந்தவரை கணவனோ, காதலனோ தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை அனுமதிக்கூடாது.
  2. முடிந்தவரை தனது மொபைல் எண்களை அவசியம் ஏற்பட்டாலன்றி யாருக்கும் அளிக்க வேண்டாம்.
  3. முடிந்தவரை ஈஸி ரீச்சார்ஜ் ஐ பயன் படுத்தாதீர்கள் ( ஒரு கடையில் பெண்களின் எண்களை மட்டும் தனியாக குறித்து அவர்களுக்கு கடை பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெண்கள் பாதிக்கப்பட்டதனால் இந்த குறிப்பு )
  4. வீடு மற்றும் பொது இடங்களில் தங்களின் உடலை வெளிப்படுத்தும் வண்ண்ம் உடை அணிய வேண்டாம்.

என்னடா எல்லாம் பெண்களுக்கே அட்வைஸ் பண்றானே நமக்கில்லையா என்று யோசிக்கும் ஆண் நண்பர்களுக்கு...

முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுக்கு கேமிரா, புளுடுத் இல்லாத மொபைல்களை வாங்கி கொடுங்கள். மொபைல் என்பத நாம் அவர்களை தொடர்பு கொள்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.

அப்புறம் ஒன்னு. நம்மளையெல்லம் அரைகுறையா போட்டோ எடுத்து எவன் பாக்கறது. முடிந்தவரை உங்கள் உறவினர்கள், பெண் தோழிகளுக்கு மொபைல் போனால் ஏற்படும் விபரீதங்களை எடுத்து சொல்லுங்கள்.


நன்றியுடன்.................









22 comments:

SENATHIPATHY.K said...

police... police ... super police


by shiyamsena
free-funnyworld.blogspot.com

கண்ணா.. said...

நல்ல பகிர்வு நண்பரே...

பொதுமக்கள் காவல்துறையை அணுகுவதில் உள்ள தயக்கங்களையும் கூறி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது

TRSATHYA said...

Thank you for your comments. Now a days people must aware of It.

Tech Shankar said...

Good Post Sir

Anonymous said...

poruppana pathivu.basheer.s.pore

Vadielan R said...

மிக நல்ல அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமாக பெண்கள் அறிந்து கொள்ள வேண்டி விஷயம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் காவலர் வேலை எப்படி இருக்கிறது. நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் giblogs@gmai.com

Vilvaraja Prashanthan said...

நல்ல பதிவு ... தப்புகள் நடப்பதுக்கு நாமும் ஓர் காரணம் என்று எல்லாரும் உணர்ந்து கொண்டு இவற்றை தவிர்க்க வேண்டும்

சரவனண் said...

காவல் துரையில் இருந்து கொண்டு பதிவு எழுதுவது மிக அச்சிரியம். அதுவும் மக்களின் நன்பன் போல மிக நல்ல விசயங்களை பகிர்வது சந்தோசமாக இருக்கிரது. நன்றி

நிகழ்காலத்தில்... said...

முன்னெச்சரிக்கையுடன் கூடிய பதிவு

வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் said...

Nice Post.

ஸ்ரீ.... said...

நல்ல பதிவு. காவல்துறை இன்னும் பொதுமக்களிடம் சற்று மரியாதையான அணுகுமுறையைக் கையாண்டால் மக்கள் தயங்காமல் வருவார்கள். அனைத்துக் காவலர்களும் தவறானவர்கள் அல்ல். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் 90 சதவிகிதம் ஆரம்பிக்கும்போதே தரக்குறைவாகத்தான் ஆரம்பிக்கிறார்கள்.

ஸ்ரீ....

Karuthu Kandasamy said...

தற்கால சூழலுக்கு தேவையான கருத்துக்கள் ! போலீஸுக்கு “ சல்யூட்” !

Senthil said...

Good post sir..

Selvaraj said...

நான் கூட இதைப்போல ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். இருந்தாலும் காவல் துறையில் உள்ள நீங்கள் வெளியிட்டது மிகவும் நல்லது. தொடர்ந்து எழுதுங்கள். நிச்சயமாக இதனால் நிறையபேர் பயனடைவார்கள்.

http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_06.html

Abdul Karim said...

Good .....
Thank u for ur advice..
Keep it up..

Abdul Karim said...

Good...
Keep it up...
TQ 4 ur advice

கிரி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..அக்கறையுடன்

//பெண்கள் முடிந்தவரை கணவனோ, காதலனோ தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை அனுமதிக்கூடாது.//

இது ரொம்ப ஆபத்து..விளையாட்டாக எடுத்தது எல்லாம் பெரிய பிரச்சனை ஆகி உள்ளது.

//நம்மளையெல்லம் அரைகுறையா போட்டோ எடுத்து எவன் பாக்கறது. //

:-))))))

Anonymous said...

Nalla pathivu. by Ubaid

Anonymous said...

Good Post Sir.. a Royal Salute to you and your Department

Saravanakumar Karunanithi said...

Thanks for being so kind to the public, I feel so proud of u as a Good Police Man. Keep writing blogs
Thanks

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

நண்பர் ஜாக்கி சேகரும் இதே போன்று பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துகள்.

பொன் மாலை பொழுது said...

நல்ல, அவசியமான பதிவு. அதுவும் ஒரு காவல் துறை நண்பரிடமிருந்து.
பொதுமக்களும் காவல் துறையும் எவ்வார்ரெல்லாம் சுமுகமாக செயல்படலாம் என்று கூட நீங்கள் தொடர்ந்து எழுதலாமே.
உங்கள் lay out அழகாக உள்ளது. அந்த புல்வெளியில் பழுப்பு வண்ண காகித பின்னணி சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பரே.

featured-content